Skip to main content

தாக்க மதிப்பீடு

Site: OpenLearn Create
Course: 1 அடிப்படை எண்ணக்கருக்கள் Tamil
Book: தாக்க மதிப்பீடு
Printed by: Guest user
Date: Thursday, 5 December 2024, 4:37 AM

1. மதிப்பீட்டிற்கு தயாராதல்

மதிப்பீட்டை நான்கு கட்டங்களில் மேற்கொள்ளலாம்.

1. தற்போதைய நிலை

2. ஒரு இலக்கை அமைத்தல்

3. கண்காணித்தல்

4. மதிப்பீடு

Illustration of the impact evaluation steps.

2. கட்டம் 1 - தற்போதைய நிலை

தற்போதைய சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்: விடயங்கள் எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும் மற்றும் ஏதேனும் மாற்றங்களைத் தீர்மானிக்கவும் ஈடுபாடு நடைபெறுவதற்கு முன்பிருந்த நிலைமை என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பின்வருவனவற்றைக் கருத்தில் கொள்வது முக்கியம்:

  • சமூகத்தின் சமூக, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்; மற்றும்
  • சமூகத்துடன் தொடர்பு கொள்ளும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்கள்.

People sat in a circle on a large mat holding a meeting

உங்கள் சமூகம் அல்லது நீங்கள் பணிபுரியும் ஒரு சமூகத்துடன் பின்வருபவற்றை கலந்துரையாடி முழுமைப்படுத்த அது உதவுகிறது:

சவால் - What challenges are the community facing in relation to the issue you have identified?

ஆரம்பித்தல் தொலைநோக்கு - சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை செயற்படுத்துவதில் இருந்து நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்?

வளங்கள்- உங்கள் தொலைநோக்கை அடைய என்ன தேவை?

செயற்பாடு - தொலைநோக்கை நீங்கள் எப்படி அடைவீர்கள்?

மதிப்பீடு - தற்போதைய நிலை என்ன? உங்கள் செயல்கள் உங்கள் சமூகத்திற்கு என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்? உங்கள் தொலைநோக்கு அடையப்பட்டதா என்பதை நீங்கள் எப்படி அறிந்து கொள்ளப் போகிறீர்கள்?

மேலதிக கேள்விகள் - Are there any other projects/initiatives in community working on the challenge? இந்தத் திட்டத்தின் எதிர்மறையான விளைவுகள் ஏதேனும் இருக்க முடியுமா? திட்டத்தின் முடிவுக்குப் பிறகு நேர்மறையான முடிவுகளை நீங்கள் எவ்வாறு பேணுவீர்கள்?

ஆரம்ப நிலைமையை புரிந்து கொள்ள நேர்காணல்கள் அல்லது உள்ளூர் சமூக உறுப்பினர்களுடன் கவனம் செலுத்தும் குழுக்கள் மூலம் தகவல்களைச் சேகரிக்க முடியும். இந்தத் தகவலைச் சேகரிக்க ஒரு அடிப்படை கணக்கெடுப்பைப் பயன்படுத்தலாம்.

உதாரணமாக, கலாச்சார அடையாளத்தை இழத்தல் என்பது சவாலாக இருக்குமாயின், அட்டவணை பின்வருமாறு நிரப்பப்படலாம்:

சவால் - கலாச்சார அடையாளம் இழப்பு

ஆரம்பித்தல் - தொலைநோக்கு - குறிப்பாக இளைஞர்களுக்கு மத்தியில் கலாச்சார அடையாளத்தை தக்கவைத்துக்கொள்வது

வளங்கள் - கலாச்சார நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கும் நடத்துவதற்குமான நேரம். இடம் வாடகை, உணவு மற்றும் குடிபானத்திற்கான நிதி 

செயற்பாடு - நடனம், இசை மற்றும் கலைகளை காட்சிப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகளை நடத்துதல்

மதிப்பீடு - தற்போது ஒரு சில இளைஞர் உறுப்பினர்கள் மட்டுமே பாரம்பரிய கலாச்சாரம் பற்றி அறிந்திருக்கிறார்கள். செயற்பாடுகள் வெற்றிகரமாக இருந்தால், கலாச்சார அம்சங்களைப் பற்றிய அதிக விழிப்புணர்வு இளைஞர்களிடம் ஏற்படும். இதை மதிப்பிடுவதற்கு, பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும் கலை பற்றி இளைஞர்கள் அறிந்திருக்கிறார்களா என்பதை நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்வோம்.

மேலதிக கேள்விகள் - இது போன்ற வேறு திட்டங்கள் நடைபெறவில்லை

திட்டத்தின் எதிர்மறையான ஒரு விளைவு, புதிய மற்றும் புதுமையான கலை, இசை மற்றும் நடனம் மீதான கவனம் இழக்கப்படலாம். திட்டத்தின் நேர்மறையான முடிவுகள் ஆண்டுதோறும் நிகழ்வுகளை மீண்டும் செய்வதன் மூலம் பேணப்படும்

3. கட்டம் 2 - ஒரு இலக்கை அமைத்தல்

எந்தவொரு செயற்பாடும் நடைபெறுவதற்கு முன்பு, சமூகத்தில் ஈடுபடுவதிலிருந்தோ அல்லது ஒரு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வைச் செயல்படுத்துவதிலிருந்தோ சமூகம் எதை அடைய வேண்டும் என்ற இலக்கை ஒப்புக்கொள்வது முக்கியம்.

உதாரணம் 1 - ஈடுபாட்டின் தாக்கம்

எந்தவொரு ஈடுபாட்டினதும் தாக்கத்தைத் தீர்மானிக்க, ஈடுபாட்டின் குறிக்கோள் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, ஈடுபாட்டின் குறிக்கோள்கள் பின்வருவனவாக இருக்கலாம்:

  • சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் அணுகுமுறையின் மேம்பட்ட புரிதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
  • முடிவெடுப்பதில் கூட்டாக செல்வாக்கு செலுத்துவதற்கு மேம்பட்ட திறன்.

இந்த இலக்குகளை சமூகக் கூட்டத்தில் அல்லது சமூக உறுப்பினர்களுடன் முறைசாரா கலந்துரையாடல்கள் மூலம் சமூகத்துடன் இணைந்து தீர்மானிக்க முடியும்.

உதாரணம் 2 - சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை செயற்படுத்துதல்

நெற்பயிர்களை முகாமைத்துவம் செய்வது, வெள்ளத்தைக் குறைப்பதற்காக போன்ற சமூகத்திற்குச் சொந்தமான மற்றொரு தீர்வை சமூகம் முயற்சிக்க விரும்பலாம். இதற்கு  நீங்கள் ஒரு சமூகக் கூட்டத்தை நடத்தலாம், அல்லது இது சாத்தியமில்லை என்றால், இதைச் செய்வதற்கான இலக்கை ஒப்புக் கொள்ள முடிந்தவரை சமூகத்தில் உள்ள பலருடன் பேசுங்கள். இந்த உதாரணத்தில், ஒரு குறிக்கோள்: அரிசி விளைச்சலைப் பராமரித்தல் மற்றும் வெள்ளத்தைக் குறைத்தல்.

உதாரணம் 3 - கலாச்சார அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை நடைமுறைப்படுத்துதல்

இந்த விடயத்தில், குறிப்பாக இளைஞர்களுடன், கலாச்சார அடையாளத்தை இழப்பது பற்றி சமூகம் கவலைப்படலாம். இந்த இழப்பை நிறுத்த இளைஞர்களை கவரும் வகையில் கலாச்சார நிகழ்வுகளை நடத்த ஒரு சமூக கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட குறிக்கோள்: கலாச்சார நிகழ்வுகள் மூலம் கலாச்சார அடையாளத்தை பேண வேண்டும்


4. கட்டம் 3 - கண்காணிப்பு

தொடர்ச்சியான கண்காணிப்பு: ஒரு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வின் ஈடுபாடு அல்லது நடைமுறைப்படுத்தல் நடந்து கொண்டிருக்கும்போது, ஈடுபாடு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தத் தொடங்குகிறதா, மற்றும் ஏதேனும் சவால்கள் அல்லது பிரச்சனைகள் நடக்கிறதா (இதனால் திட்டத்தை மாற்ற வேண்டிய தேவை உள்ளதா) என்பதைப் புரிந்து கொள்வது முக்கியம். செயலமர்வுகள் மற்றும் முகாமைத்துவ மாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்குப் பிறகு கருத்துக்களைச் சேகரிப்பது பெறுமதியானது. ஒரு நாட்குறிப்பை வைத்திருக்க சமூகக் குழுவை ஊக்குவிப்பது ஒரு நல்ல யோசனையாகும், மேலும் விடயங்கள் எப்படி நடக்கிறது என்பதை மதிப்பிடுவதற்கு சமூக உறுப்பினர்களுடன் நேர்காணல்களை மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

Two people looking at a form they are filling in where they are evaluating something

எத்தனை முறை நீங்கள் கண்காணிப்பை மேற்கொள்கிறீர்கள் மற்றும் நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள் என்பது இடம்பெறும் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வின் ஈடுபாடு அல்லது செயற்பாட்டின் வகையைப் பொறுத்தது. எத்தனை முறை கண்காணிப்பு நடைபெறுகிறது என்பதன் அடிப்படையில், நீங்கள் எந்த மாற்றங்களையும் கவனிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த இது அடுத்தடுத்து இடம்பெற வேண்டும். பங்கேற்பு வீடியோவைப் பயன்படுத்தி நேர்காணல்களை எவ்வாறு மேற்கொள்வது (அலகு 2 இல் இதைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்), மாற்றத்தைப் பதிவு செய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும்.

உதாரணம் 1 - ஈடுபாட்டின் தாக்கம்

சமூகத்திற்குச் சொந்தமான தீர்வு அணுகுமுறையைப் புரிந்துகொள்ளும் நிலை மற்றும் முடிவெடுப்பதில் கூட்டாகப் பாதிக்கும் மேம்பட்ட திறன் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க, சமூகத்திற்குள், தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக உறுப்பினர்களுடனான நேர்காணல்கள் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் 2 வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்படலாம். இது புரிதலில் மாற்றத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கும்.

உதாரணம் 2 - சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை நடைமுறைப்படுத்துதல்

நெல் அறுவடை பேணப்பட்டுள்ளதா மற்றும் வெள்ளம் குறைக்கப்பட்டதா என்பதைத் தீர்மானிக்க, அறுவடை மற்றும் வெள்ள நிகழ்வுகளைத் தொடர்ந்து விவசாயிகளை நேர்காணல் செய்து புதிய முகாமைத்துவ அணுகுமுறை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்கலாம்.

உதாரணம் 3 - கலாச்சார அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை நடைமுறைப்படுத்துதல்

இளைஞர்களுக்கு பாரம்பரிய கலை, இசை மற்றும் நடனம் பற்றிய அறிவு இருக்கிறதா என்பதை அறிய, சமூகத்தின் முக்கிய கலாச்சார அம்சங்களைப் பற்றி அறிவார்களா என்பதைத் தீர்மானிக்க சமூகம் முழுவதும், ஒரு நிகழ்வுக்கு முன்னும் பின்னரும் சில மாதங்களுக்கு பின்னும் இளைஞர்களை நேர்காணல் செய்ய சமூகம் முடிவு செய்துள்ளது.


5. கட்டம் 4 - மதிப்பீடு

ஈடுபாட்டின் முடிவில் அல்லது சமூகத்திற்குச் சொந்தமான தீர்வு சில வருடங்களாக முயற்சிக்கப்பட்ட பிறகு, என்ன செய்யப்பட்டுள்ளது என்பதைத் திரும்பிப் பார்ப்பது மற்றும் முடிவுகள் என்ன, என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தியது மற்றும் ஏதேனும் சவால்கள் இருந்தன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். மாற்றங்கள் நடந்திருந்தால் புரிந்துகொள்ள உதவும் சமூக உறுப்பினர்களுடன் இறுதி கணக்கெடுப்பை மேற்கொள்ளுதல். நேர்மறை அல்லது எதிர்மறை மாற்றங்களை மதிப்பிடுவதற்கு கட்டம் 1 இல் நீங்கள் சேகரித்த அடிப்படைத் தகவலை திரும்பிப் பார்ப்பது உதவியாக இருக்கும். முக்கிய நபர்களுடனான நேர்காணல்கள் அவர்கள் செயற்பாடுகளை எவ்வாறு பார்த்தார்கள் மற்றும் தாக்கங்களை உணர்ந்தது பற்றிய முக்கிய தகவல்களை வழங்க முடியும். நேர்காணல்கள் முன்னோக்கி என்ன செய்ய வேண்டும் என்பதையும் ஆராயலாம்: நேர்மறையான அம்சங்கள் எவ்வாறு பேணப்பட வேண்டும், அடுத்த முறை வித்தியாசமாக என்ன செய்ய முடியும், எதிர்காலத்திற்கான திட்டங்கள் என்னவாக இருக்க வேண்டும்? போன்றவை.