Skip to main content

பங்கேற்பு நுட்பங்கள் பற்றிய அறிமுகம்

Site: OpenLearn Create
Course: 2 பங்கேற்பு நுட்பங்கள் Tamil
Book: பங்கேற்பு நுட்பங்கள் பற்றிய அறிமுகம்
Printed by: Guest user
Date: Saturday, 27 April 2024, 2:16 AM

1. பங்கேற்பு என்றால் என்ன, இந்த அணுகுமுறையை ஏன் பயன்படுத்த வேண்டும்?

பங்கேற்பு என்பது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் செயற்திறமான ஈடுபடாகும். சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை வெற்றிகரமாக அடையாளம் காண, முடிந்தவரை உள்ளூர் சமூகத்தின் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும், இது அவர்களின் நோக்குகள், அவர்களின் ஈர நிலங்கள் சம்பந்தமான அறிவு மற்றும் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

Two people sat next to each other talking

சமூக பங்கேற்பின் முக்கிய நோக்கம், ஒரு குழுவிற்குள் நம்பிக்கையை உருவாக்குவதாகும், இதனால் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளுக்கு பலதரப்பட்ட கருத்துக்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படும். நீங்கள் பணிபுரியும் சமூகத்திற்குள் தகவல் தெரிவித்தல், ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றுடன் பங்கேற்பு தொடங்குகிறது. பெட்டி 1 மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்க உதவும் சில முக்கிய விடயங்களை கோடிட்டுக் காட்டுகிறது.

சமூக பங்கேற்பை எப்படி ஊக்குவிப்பது

  • நீங்கள் ஏன் அவர்களின் கருத்தை கேட்கிறீர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வதை உறுதி செய்யவும். ஒரு சமூகத்திற்கு சொந்தமான தீர்வு என்ன, அது எப்போது சிறந்த நடைமுறையாக கருதப்படலாம் என்பதை நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும்
  • பங்கேற்பாளர் சமூகத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை விளக்கவும். மக்கள் தங்கள் கருத்து முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - அவர்களின் சிறந்த நடைமுறைகளைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வது இவை மேலும் வலுப்படுத்தப்பட்டு ஆதரிக்கப்பட உதவும்
  • மக்கள் செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக பங்கு வகிக்கும் வழிகளைக் கண்டறியவும். செயற்பாடுகளின் உள்ளடக்கம் மற்றும் கால அளவு குறித்து அவர்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.
  • செயற்பாடுகள் சுவாரஸ்யமாக இருப்பதையும், மக்கள் இயல்பாக இருப்பதையும் உறுதி செய்யவும். அவர்கள் அழுத்தத்தின் கீழ் உள்ளதாக உணரவோ அல்லது பங்கேற்க கட்டாயப்படுத்தவோ கூடாது

இந்த பாடத்திட்டத்தில், சமூகத்துடன் பல்வேறு நிலைகளில் பங்கேற்பு இருப்பதையும், பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நீங்கள் காணலாம். இந்த பிரிவில் உள்ள செயற்பாடுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தனிநபர்களை உள்ளடக்கியிருக்கலாம், அல்லது காலம் மற்றும் ஏற்பாட்டுக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப முழு சமூகத்தையும் ஈடுபடுத்தலாம். பின்வருபவை மக்களை ஈடுபடுத்த பயன்படும் பல்வேறு வகையான அணுகுமுறைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

2. செயலமர்வுகள்

Illustration of a person with a flip chart talking to people

அது என்ன?
  • ஒரு குறிப்பிட்ட தலைப்பில், அந்த தலைப்பை மக்களுடன் கலந்துரையாடவும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டம். இது கலந்துரையாடல்கள், விரிவுரைகள் மற்றும் விளையாட்டுகள் அல்லது திரைப்பட காட்சிகள் போன்ற பிற செயற்பாடுகளைக் கொண்டிருக்கலாம்.


அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?
  • சமூக ஈடுபாட்டின் ஆரம்பத்தில்: சமூகங்களுடன் தகவல்களைப் பகிர்வது, ஈடுபாட்டின் நோக்கங்களைப் பற்றி கலந்துரையாடுவது மற்றும் பங்கேற்பதற்கான சமூகங்களின் ஆர்வத்தை கேள்விக்குட்படுத்துதல், குறிப்பிட்ட அம்சங்கள்/கருப்பொருள்கள் பற்றிய தகவல்களைப் பெறுதல்.
  • சமூக ஈடுபாட்டின் செயன்முறையின் போது: ​​பல்வேறு கருத்துகள் வர அனுமதிக்க.
  • சமூக ஈடுபாட்டின் செயன்முறையின் முடிவில்: முடிவுகளைப் பகிரவும் கலந்துரையாடவும், செயன்முறையை மதிப்பீடு செய்யவும், கண்டுபிடிப்புகளை வெளிப் பார்வையாளர்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்பதை ஒப்புக்கொள்ளவும்.


மக்களின் எண்ணிக்கை
  • பெரிய மக்கள் குழு (சுமார் 10 முதல் 40 வரை)


நேரம்
  • 2 முதல் 5 மணி நேரம்


நன்மைகள்
  • ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைப் பிரதிபலிப்பதில் ஒரு பெரிய குழுவினரை செயற்திரமாக ஈடுபடுத்துதல்.
  • ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைப் பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்கும் அவர்களிடமிருந்து கருத்து மற்றும் தகவலைப் பெறுவதற்கும்.
  • அந்த கருப்பொருளில் பங்கேற்பாளர்களிடையே கலந்துரையாடலை வளர்ப்பதற்கும், வெவ்வேறு கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் எதிர்கொள்வதற்கும்.
  • இது ஒரு பரந்த மக்கள் குழுவைச் சென்றடைவதற்கான ஒரு சிறந்த செயன்முறையாகும்.


வரையறைகள்
  • கூச்ச சுபாவமுள்ள மக்கள் கலந்துரையாடல்களில் தீவிரமாக பங்கேற்க மாட்டார்கள்.
  • நிறைய தயாரிப்பு மற்றும் ஏற்பாடு தேவைப்படலாம்.

People from a village in Cambodia sat on the floor with a person running a focus group

3. கவனக் குழுக்கள்

Illustration of people sat around a table talking

அது என்ன?
  • ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவனம் செலுத்தி விவாதிக்கும் ஒரு சிறிய குழு.


அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் ஆரம்பத்தில்: ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் பின்னணி தகவல்களையும் கருத்துக்களையும் பெற.
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் போது: திட்டத்தின் போது எழுப்பப்பட்ட ஆழமான பிரச்சினைகளை ஆராய.
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் முடிவில்: திட்டத்தை மதிப்பீடு செய்ய.


மக்களின் எண்ணிக்கை
  • 6 முதல் 8 பேர், முடியுமான அளவு ஒரே மாதிரியான குழுக்கள் (எ. கா: ஒரே வயதுடைய பெண்கள், ஒரே சமூகப் பின்னணியைக் கொண்ட ஆண்கள்).


நேரம்
  • 1 முதல் 2.5 மணி நேரம். அதன் பிறகு, மக்கள் சோர்வடையலாம் மற்றும் கவனத்தை இழக்கலாம்.


பயன்கள்
  • இது பங்கேற்பு மற்றும் வலுவூட்டக்கூடியது.
  • மக்கள் தங்கள் கருத்துக்களை ஆர்வமாக பரிமாறிக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் முடியும். புதிய நிலைப்பாடுகள் வரலாம்.
  • கூச்ச சுபாவமுள்ளவர்களுக்கு சிறிய குழுக்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதில் தயக்கம் குறைவாக இருக்கலாம். இது குழுக்களில் முடியுமானளவு ஒரே வகையானவர்கள் இருப்பதையும் குறித்த  சந்தர்ப்பங்களையும் தங்கி இருக்கலாம்


வரையறைகள்
  • சிலரால் ஆதிக்கம் செலுத்த முடியும்.
  • கூச்ச சுபாவமுள்ள மக்களுக்கு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சங்கடம் இருக்கலாம். சிலர் தங்கள் ஆழ்ந்த உணர்வுகளை ஒரு சிறிய குழுவில் கூட வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.
  • முடிவுகள் பரந்த சமூகத்திற்கு பொருந்தாமல் இருக்கலாம்.
  • கவனக் குழுக்கள் பதில்களில் செல்வாக்கு செலுத்தும் ஒரு செயற்கை சூழலை உருவாக்க முடியும்.
  • மக்கள் இயல்பாக இருக்கவும் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்த தயாராக இருக்கவும் செய்யக்கூடிய வசதியளிப்பவரின் திறன்களிலேயே பெறுபேறுகள் பெரிதும் தங்கியுள்ளன.

4. நேர்காணல்

Illustration of someone interviewing another person with a microphone

அது என்ன?
  • இரண்டு நபர்களுக்கிடையே ஒருவருக்கு ஒருவர் உரையாடல், அங்கு நேர்காணல் செய்பவர் முன் வரையறுக்கப்பட்ட கேள்விகளைக் கேட்பார். பொதுவாக, ஒரு தலைப்பில் பதில்களை ஒப்பிட்டு சிறந்த மற்றும் முழுமையான தகவல்களைச் சேகரிக்கும் பொருட்டு, ஒரே மாதிரியான கேள்விகள் ஒரே வகையில் பல்வேறு நபர்களிடம் கேட்கப்படும்.


அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் போது: ஒற்றைப் பங்கேற்பாளர்களிடமிருந்து துல்லியமான மற்றும் ஆழமான தகவல்கள் தேவைப்படும் போது, ​​பதில்களை ஒப்பிடும் நோக்கத்துடன்.
  • சமூக ஈடுபாட்டு செயல்முறையின் முடிவில்: திட்டத்தை மதிப்பீடு செய்ய.


மக்களின் எண்ணிக்கை
  • 2 நபர்கள்


நேரம்
  • அதிகபட்சம் 1 மணி நேரம் மிகவும் பொருத்தமானது.


பயன்கள்
  • தகவலின் வரம்பு மற்றும் ஆழம்: வெவ்வேறு மக்கள் எவ்வாறு பதிலளிக்கிறார்கள் என்பதை ஒப்பிடுவதன் மூலம் நாம் வெவ்வேறு கருத்துக்கள் மற்றும் கண்ணோட்டங்களை அறியலாம்.
  • கவணக் குழு கலந்துரையாடல்களில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் தகவலை ஒப்பிடலாம்.
  • ஒரு நெருங்கிய சூழலில் குறைவான அழுத்தத்துடன், மற்றவர்களுடன் மோதலில் ஈடுபட பயப்படாமல் மக்கள் தங்கள் நிலையை வெளிப்படுத்த அனுமதிக்கிறது.


வரையறைகள்
  • ஒரே ஒரு நபரின் கண்ணோட்டம்.
  • நேர்காணல் செய்பவர்கள் மற்றும் நேர்காணல் செய்யப்படுபவர்கள் கேள்விகளைக் கடந்து செல்லலாம். கட்டாயம் பதிலளிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
  • நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

5. முறைசாரா கலந்துரையாடல்

Illustration of people sat under a tree talking

அது என்ன?
  • அதிகமாகவோ அல்லது குறைவாகவோ குறித்த விடயம் சம்பந்தமான உரையாடல். இது முன் வரையறுக்கப்பட்ட கேள்விகளைப் பின்பற்றாது; "ஓப் த ரெக்கார்ட்" (பதிவுக்குள் வராத) என்று கருதலாம்.


அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?
  • முறைசாரா கலந்துரையாடல்கள் எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நடக்கும்.
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் ஆரம்பத்தில்: முன்னெடுப்பின் குறிக்கோள்களை ஒரு நபருக்கு முன்வைக்க, அவருடைய கருத்தை கேற்க; சூழல் மற்றும் மக்களை முறைசாரா வழியில் தெரிந்து கொள்ள. முறைசாரா கலந்துரையாடல்கள் மிகவும் கட்டமைக்கப்பட்ட நேர்காணல்களின் வரையறையின் முதல் கட்டமாக இருக்கலாம்.
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் போது: பலவிதமான தகவல்களையும், பெரும்பாலும் எதிர்பாராத தகவல்களையும் அனுமதிக்கிறது. இந்த முறைசாரா சூழலில் மக்கள் தங்கள் சந்தேகங்களை அல்லது பிரச்சனைகளை தெரிவிக்கலாம்.
  • சமூக ஈடுபாட்டு செயன்முறையின் முடிவில். ஒரு பெரிய குழுவின் அழுத்தம் இல்லாமல் முன்முயற்சி குறித்து மக்களின் கருத்துக்களைப் பெற.


மக்களின் எண்ணிக்கை
  • பொதுவாக ஒரு குறைந்த எண்ணிக்கை, 4 க்கும் குறைவாக.


நேரம்
  • வேறுபடலாம்..


பயன்கள்
  • முறையான சூழலில் அசௌகரியமாக உணர்ந்த மக்களின் குரலைக் கேட்பது.
  • நீங்கள் ஒரு முன் வரையறுக்கப்பட்ட முறையான கட்டமைப்பிற்குள் இல்லாத தகவலைப் பெறுதல்.
  • நேர்காணல் செய்பவர்களுடன் அதிக நல்லுறவு மற்றும் நம்பிக்கையை வளர்த்தல்.


வரையறைகள்
  • "ஓப் த ரெக்கார்ட்" சூழல் தகவலின் முறையான மற்றும் துல்லியமான பதிவு மற்றும் இறுதிப் பயன்பாட்டை மட்டுப்படுத்தலாம். நீங்கள் தகவலை முக்கியமானதாகக் கண்டறிந்து அதை அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்த விரும்பினால், ஒப்புதல் கேட்கவும், மற்றும்/அல்லது ஒரு பின்தொடர்தல் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது மேலும் முறையான செயலமர்வுகளில் அவர்களைப் பங்கேற்கச்செய்யலாம்.
  • எதிர்வுகூற முடியாத தன்மை.

6. ஒரு செயலமர்வு அல்லது ஒரு கவனக் குழுவை ஏற்பாடு செய்யுங்கள்

Illustration of an arrow in a target

கட்டம் 1. இலக்குகளை வரையறுக்கவும்

  • கலந்துரையாடல் மையத்தில் தெளிவான குறிக்கோள் இல்லாத காரணத்தால் பல செயலமர்வுகள் அல்லது கவனக் குழுக்கள் நேரத்தை வீணடிக்கின்றன. எனவே, முதல் படி நீங்கள் எந்த தலைப்பைப் பற்றி கலந்துரையாட விரும்புகிறீர்கள் மற்றும் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

கட்டம் 2. யார் கலந்து கொள்வார்கள் என்பதை முடிவு செய்யுங்கள்

  • இது கண்டிப்பாக உங்கள் இலக்குகளைப் பொறுத்தது. உங்கள் குறிக்கோள் சிலர் சிறந்த நடைமுறையாக இருக்கலாம் என்று கருதுகின்ற ஒரு உள்ளூர் நடைமுறையைப் பற்றி கலந்துரையாடப்படுகிறது என்றால், அது சாத்தியமான மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளைக் கொண்ட மக்களை ஈடுபடுத்துவது முக்கியம். ஒரு செயலமர்வு வெவ்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் ஒரு சிறந்த சந்தர்ப்பம், எனவே தலைப்பைப் பற்றி வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டவர்களை அழைப்பது சிறந்த கலந்துரையாடலுக்கு உதவும்.
  • அங்கு இருக்க வேண்டிய நபர்களைப் பற்றி நீங்கள் ஒரு கருத்துக்கு வந்தவுடன், பங்கேற்பாளர்கள் அனைவரினதும் பட்டியலை தயாரிக்க வேண்டும். மக்களின் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ப்பதற்காக நீங்கள் யார் கலந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி கவனமாக சிந்திக்க வேண்டியது அவசியம்.
  • உங்கள் பங்கேற்பாளர்களின் பட்டியலில் சந்திப்பு நேரம் போன்ற பிற முக்கிய ஏற்பாட்டு தகவல்களும் இருக்க வேண்டும். உங்கள் செயலமர்வுக்கு ஒரு நல்ல நேரத்தைப் பற்றி யோசிப்பது முக்கியம், ஏனென்றால் மக்கள் வெவ்வேறு அலுவல்கள் அல்லது கடமைகளைக் கொண்டிருக்கலாம். நீங்கள் செயலமர்வு அல்லது கவனக் குழுவின் தொடக்க நேரம் மற்றும் காலத்தை தீர்மானித்தவுடன், மக்கள் தங்களை ஒழுங்கமைக்க அனுமதிக்கும் வகையில் இதை முன்னதாக அறிவிக்க வேண்டும். நீங்கள் அழைக்கும் நபர்களுடன் முடிந்தவரை குறிப்பிட்ட ஒழுங்கில் இருக்க முயற்சி செய்யுங்கள் ஆனால் கடைசி நிமிட சேர்க்கைகளுக்கு ஒரு சில இடங்களை விட்டுவையுங்கள் மற்றும் சில நேரங்களில் மக்கள் எதிர்பாராத விதமாக நின்றுவிடக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

Illustration of a people pointing at many different hands

கட்டம் 3. இடத்தை தெரிவுசெய்யுங்கள்

  • இடத்தைத் தேர்ந்தெடுப்பது எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. இந்த இடம் அனைவரும் எளிதில் சென்றடையக் கூடியதாகவும், பங்கேற்பாளர்கள் வசதியாக உட்கார அனுமதிக்கும் அளவுக்கு பெரியதாகவும், மக்கள் கவனம் செலுத்தக்கூடிய அளவுக்கு அமைதியாகவும் இருக்க வேண்டும். இந்த இடம் சமூகத்தின் எந்தவொரு உறுப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே உங்கள் செயற்பாடுகளைப் பற்றி யோசிக்க வேண்டும் மற்றும் அமர்வுகளை நடத்துவதற்குத் தேவையான பொருட்கள் மற்றும் வளங்கள் உங்கள் இடத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் (கரும்பலகை, பயிற்சிகளை நடத்த இடம், போதுமான கதிரைகள் போன்றவை)

Illustration of two people looking at a map

கட்டம் 4. ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரியுங்கள்

  • ஒரு நிகழ்ச்சி நிரலை தயாரிப்பது என்பது செயலமர்வின் இலக்குகளை நீங்கள் எவ்வாறு அடைவீர்கள் என்பதற்கான ஒரு வரையறையை உருவாக்குவதாகும். கலந்துரையாடுவதற்கான முக்கிய விடயங்களின் பட்டியலை உருவாக்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பின்னர் ஒவ்வொரு பெரிய விடயத்தையும் உங்கள் பார்வையாளர்களுக்கு நீங்கள் முன்வைக்க விரும்பும் வகையில் விரிவாக வகைப்படுத்தலாம்.
  • கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகளின் படங்கள் அல்லது வீடியோ பதிவுகளை எடுப்பது செயலமர்விலிருந்து தகவல்களைச் சேகரிப்பதற்கு முக்கியமானதாகும். நீங்கள் எந்த குழு கலந்துரையாடல்கள் மற்றும் செயற்பாடுகளில் உள்ளீர்கள் என்ற பட்டியலை தயாரிப்பதற்கும் நீங்கள் சரியான நேரத்தில் இருப்பதை உறுதி செய்வதற்கும் அவை பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பயிற்சிக்கும் நீங்கள் எவ்வளவு நேரம் அனுமதிப்பீர்கள் என்பதை வரையறுப்பது முக்கியம். உங்கள் செயற்பாடுகள் குழுவின் அளவிற்கு பொருத்தமானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில நேரங்களில், நீங்கள் உங்கள் செயலமர்வுக்கு மக்களை அழைக்கும் போது சில நாட்களுக்கு முன் நிகழ்ச்சி நிரலைப் பகிர்வது உதவியாக இருக்கும்.

Illustration of a diary

கட்டம் 5. செயலமர்வு அல்லது கவனக் குழுவை நடத்துதல்

  • வசதி அளிப்பவர் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு உரையாடலின் நோக்கத்தை சுருக்கமாக கோடிட்டுக் காட்ட வேண்டும். ஒரு சிறிய குழுவிற்குள், பங்கேற்பாளர்கள் தங்களை குழுவிற்கு அறிமுகப்படுத்தும்படி கேட்கப்பட வேண்டும். இது சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும் (உதாரணமாக பெயர், நபர் வசிக்கும் இடம், அவர்களின் தொழில்). இதற்குப் பிறகு, இந்த கட்டத்தில் கலந்துரையாடி பங்கேற்பாளர்களை ஒப்புதல் படிவத்தில் கையெழுத்திடச் சொல்லுங்கள். ஒரு நல்ல வசதிப்படுத்துனர் பதிலளிப்பவர்களிடையே கலந்துரையாடலை எளிதாக்குகிறார், ஆனால் குழுவில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது வழிநடத்தவோ அல்லது அவர்களின் கருத்தை வழங்கவோ மாட்டார்.
  • கவனக் குழுக்கள் அடிக்கடி பதிவு செய்யப்படுகின்றன, அல்லது தரவுகளை பகுப்பாய்வு செய்ய உதவுவதற்காக வீடியோ பதிவு செய்யப்படுகின்றன. மேலும் இது குழுவின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என்பதுடன், ஒப்புதல் படிவத்தில் தெளிவாக விளக்கப்பட வேண்டும். மக்கள் சம்மதித்து சௌகரியமாக இருக்குறார்களா என்பதை உறுதிப்படுத்தவும். புகைப்படக் கருவி மிகச் சரியாக வைக்கப்பட வேண்டும். பதிவு செய்ய முடியாத அல்லது மக்கள் அதை அனுமதிக்காத சந்தர்ப்பங்கள் இருக்கும், அப்போது நீங்கள் ஒரு குறிப்பு எடுப்பவரை பணியில் அமர்த்தலாம் அல்லது குறிப்புகளை நீங்களே எழுதலாம். காட்சிப் பலகைகள், படங்கள் அல்லது இசை போன்ற உட்சாகமூட்டும் விடயங்கள் கலந்துரையாடலை தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படலாம்.
  • கலந்துரையாடலின் போது எழுப்பப்பட்ட தலைப்புகள் அல்லது விடயங்களின் இரகசியத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை தொடர்பான அடிப்படை 'விதிகளை' நீங்கள் குழுவுக்கு நினைவூட்டுவது நல்ல நடைமுறை. பங்கேற்பாளர்கள் விவாதிக்கவும், உடன்படவும், விமர்சிக்கவும், சரியான அல்லது தவறான சிந்தனை வழி இல்லை என்பதையும் நினைவூட்டுவது அவர்கள் தயக்கமின்றி பங்கேற்பதற்கு பெரும்பாலும் உதவியாக இருக்கும். பங்கேற்பாளர்கள் எந்த நேரத்திலும் என்பதை தெரியப்படுத்தவும். .

Illustration of a person with a flip chart talking to people

கட்டம் 6. மதிப்பீடு

  • உங்கள் செயலமர்வு அல்லது கவனக் குழு எவ்வாறு நடைபெற்றது என்ற மதிப்பீடு மிகவும் முக்கியமானது. செயலமர்வை மதிப்பீடு செய்வதற்காக, நிகழ்வின் முடிவில் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் கொடுக்க ஒரு கேள்விக்கொத்தை நீங்கள் உருவாக்கலாம், மேலும் அது எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பற்றி அவர்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை வழங்கலாம். செயலமர்வு அல்லது கவனக் குழுவின் முடிவில் ஒரு மதிப்பாய்வாக மதிப்பீடு மேற்கொள்ளப்படலாம். மதிப்பீடு ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், எனவே தனிப்பட்ட நிகழ்வுகள் ஒட்டுமொத்த மதிப்பீட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

Illustration of a person with a flip chart either side of them

கட்டம் 7. செயலமர்விலிருந்து வெளிவரும் அகக்காட்சிகளின் தொடர்பாடல்

  • செயலமர்வின் போது வெளிவந்த தகவல்களையோ அல்லது எட்டப்பட்ட முடிவுகளையோ தொடர்புகொள்வதற்கான ஒரு திட்டத்தை வைத்திருப்பது முக்கியம். பங்குபற்றிய மக்கள் தங்கள் கடின உழைப்பு ஒரு முடிவை அல்லது செயலை விளைவித்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், மேலும் பங்கேற்காத நபர்களையும் இற்றைப்படுத்துவது முக்கியம். மேலும், செயலமர்வு முடிந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பங்கேற்பாளர்களின் எதிர்பார்ப்புகளை நிர்வகிப்பதில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளிப்படையாக இருப்பது என்பது நடக்காத திட்டங்களை உருவாக்குவது என்று அர்த்தமல்ல மற்றும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுக்காமல் இருப்பது மிகவும் முக்கியம்!

Illustration of a megaphone communicating information


7. ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்யுங்கள்


கட்டம் 1. நீங்கள் நேர்காணல் செய்ய விரும்பும் நபர்களை நியமித்தல்

  • நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வி "நான் தேடும் தகவல் யாரிடம் இருக்கலாம்?" என்பதாகும்.
  • மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் அவர்களின் சொந்த அனுபவங்கள் மற்றும் சூழலின் அடிப்படையில் மாறுபட்ட கருத்துகள் அல்லது கண்ணோட்டங்களைக் கொண்ட பலதரப்பட்ட மக்களை இலக்கு வைத்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Illustration of a people pointing at many different hands

கட்டம் 2. எப்போது, ​​எங்கே நேர்காணல் செய்ய வேண்டும்

  • நேர்காணல்கள் மக்களுக்கு நேரம் இருக்கும்போது செய்யப்பட வேண்டும் மற்றும் வேறு நடவடிக்கைகளால் அழுத்தப்படாமல் இருக்க வேண்டும். நேர்காணலுக்கான சிறந்த நேரம் நீங்கள் நேர்காணல் செய்யும் நபருடன் கலந்துரையாடப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும். இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இது நேர்காணல் செய்பவரின் வசதியை சார்ந்திருப்பது முக்கியம் (அவர்களது சொந்த வீடோ அல்லது அவர்கள் உங்களுக்கு அறியப்படுத்தும் வேறு இடமாகவோ இருக்கலாம்) உதாரணமாக, விவசாய நடைமுறைகள் பற்றிய தகவல்களை நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், பண்ணையில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும்; நீங்கள் நேர்காணல் செய்யும் நபர் உங்களுக்கு இடங்கள், விவசாய நுட்பங்கள் போன்றவற்றைக் காட்ட முடியும், மேலும் அவர்கள் பேசும் சூழலில் இருப்பதன் மூலம் அவர்கள் ஈர்க்கப்படலாம்.
  • சில நேரங்களில் ஒரு நபரை ஒரே இடத்தில் நேர்காணல் செய்வதற்கு பதிலாக, அந்த நபரை நேர்காணல் செய்யும் போது அவர்களுடன் நடந்து செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழியில் அந்த நபர் அவர்கள் விவரிக்கும் இடங்கள்/செயற்பாடுகளைப் பார்க்க உங்களை அழைத்துச் செல்ல முடியும். அந்த நபர் என்ன விவரிக்கிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள இது உதவும், மேலும் அந்த நபர் விளக்கத்தில் இன்னும் துல்லியமாக இருக்க உதவலாம்.

Illustration of two people looking at a map

கட்டம் 3. பதிவு, வீடியோ பதிவு அல்லது குறிப்புகளை எடுப்பது

  • நேர்காணலின் போது அவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு பொருத்தமான விடயங்களையம் குறித்துக்கொண்டு அடுத்த வினாவினையும் யோசிப்பதற்கு பெரும் திறமை தேவைப்படுகிறது. நேர்காணலை ஜோடிகளாக நடத்த உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், ஒருவர் கேள்விகளைக் கேட்கலாம், மற்றவர் குறிப்புகளை எடுக்கலாம். 
  • பதிவு செய்வது எழுதாமல் அந்த நபர் என்ன சொல்கிறார் என்பதில் கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. சைகைகள் மற்றும் வெளிப்பாடுகளை கண்காணிக்கவும் வீடியோ பதிவு உங்களை அனுமதிக்கிறது. ஆனால் மக்கள் வெட்கப்படலாம் மற்றும் பதிவு செய்யப்படும் போது அசௌகரியத்தை உணர முடியலாம். நீங்கள் எப்போதும் அனுமதி கேட்க வேண்டும். அந்த நபருடன் நடந்து செல்வதானால், உரிய நேரத்தில் குறிப்புகளை எடுத்துக்கொண்டு தகவல்களைப் பதிவு செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Illustration of a person with a microphone

ஒரு நேர்காணலை மேற்கொள்வதற்கான உதவிக்குறிப்புகள்

A person being shown a map and asked questions by someone interviewing them

  • கேள்விகளைக் கேட்கத் தொடங்குவதற்கு முன், நேர்காணப்படுபவர் கலந்துரையாடல் எதைப் பற்றியது என்பதை அறிந்திருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். நீங்கள் நேர்காணல் செய்யும் நபர்கள், அவர்கள் சொல்லும் அனைத்தும் நம்பகத்தன்மையாக வைக்கப்பட்டிருக்கும், அவர்கள் உங்களுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே அவர்கள் கூறிய விடயங்கள் பதிவு செய்யப்படும் மற்றும்  பின்னர் ஆய்வு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும், என்பதை அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நேர்காணல் செய்யப்படுபவருடன் நேர்காணல் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை நீங்கள் தீர்மானித்து, அந்த நேரத்தை சரியாகக் கடைபிடிக்க வேண்டும்.
  • நேர்காணல் ஒரு விசாரணை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் மற்றவரை இயல்பாகவும் உங்களுடன் பேசி மகிழ்வதை உணரச் செய்யவும் முயற்சிக்க வேண்டும்.
  • உங்களிடம் முன்கூட்டியே கேள்விகள் பட்டியலிடப்பட்டிருந்தாலும், நேர்காணலில் அவற்றை பட படவென அவர்கள் முன் வைக்க வேண்டாம். அவர்களின் யோசனைகளை வளர்த்துக்கொள்ளவும், தேவைப்பட்டால் விளக்கம் கேட்கவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
  • நீங்கள் பதட்டமாக இருந்தாலும், பதில்களைக் கவனமாக செவிமடுப்பதையும் மற்ற நபருடன் பழகுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நேர்காணலின் தொடக்கத்தில் சிக்கலான கேள்விகளைக் கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக, சில சிக்கலற்ற, எளிய கேள்விகளுடன் நேர்காணலை ஆரம்பியுங்கள் (எடுத்துக்காட்டாக பெயர், தொழில், குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கை போன்றவை).
  • உங்கள் கேள்விகளை வடிவமைக்கும்போது, ​​அவற்றை முடிந்தவரை திறந்த நிலையில் வைக்க முயற்சிக்கவும். இது மிகக் குறுகிய பதில்களைத் தடுப்பதுடன், பதிலளிப்பவர் தலைப்பில் தங்கள் சொந்த கருத்துக்களை உருவாக்க வாய்ப்பளிக்கிறது. உங்கள் தனிப்பட்ட கருத்தைக் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் நேர்காணல் செய்பவர் அதை பிடித்துக்கொண்டு வேறு ஏதாவது சொல்ல பயப்படுபவராக (அல்லது மிகவும் கூச்சமாக) இருக்கலாம்.
  • மற்ற நபரை சங்கடப்படுத்தக்கூடிய அம்சங்களை கையாளும் போது, ​​நேர்காணலின் போக்கில் நேர்காணல் செய்யப்படுபவர் மிகவும் சங்கடமானவராக இருந்தால் மற்றொரு விடயத்துக்கு செல்ல தயாராக இருங்கள்.
  • நேர்காணலின் முடிவில், நேர்காணல் செய்பவரிடம் உங்களிடம் கேள்விகள் கேட்கவும், தேவைப்பட்டால் மீண்டும் பதிவு செய்யப்பட்ட பொருளை எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்பதை விளக்கவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.