Skip to main content

பங்கேற்பு நுட்பங்கள் பற்றிய அறிமுகம்

7. ஒரு நேர்காணலை ஏற்பாடு செய்யுங்கள்


கட்டம் 1. நீங்கள் நேர்காணல் செய்ய விரும்பும் நபர்களை நியமித்தல்

  • நீங்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வி "நான் தேடும் தகவல் யாரிடம் இருக்கலாம்?" என்பதாகும்.
  • மற்றொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் அவர்களின் சொந்த அனுபவங்கள் மற்றும் சூழலின் அடிப்படையில் மாறுபட்ட கருத்துகள் அல்லது கண்ணோட்டங்களைக் கொண்ட பலதரப்பட்ட மக்களை இலக்கு வைத்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Illustration of a people pointing at many different hands

கட்டம் 2. எப்போது, ​​எங்கே நேர்காணல் செய்ய வேண்டும்

  • நேர்காணல்கள் மக்களுக்கு நேரம் இருக்கும்போது செய்யப்பட வேண்டும் மற்றும் வேறு நடவடிக்கைகளால் அழுத்தப்படாமல் இருக்க வேண்டும். நேர்காணலுக்கான சிறந்த நேரம் நீங்கள் நேர்காணல் செய்யும் நபருடன் கலந்துரையாடப்பட்டு வரையறுக்கப்பட வேண்டும். இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, இது நேர்காணல் செய்பவரின் வசதியை சார்ந்திருப்பது முக்கியம் (அவர்களது சொந்த வீடோ அல்லது அவர்கள் உங்களுக்கு அறியப்படுத்தும் வேறு இடமாகவோ இருக்கலாம்) உதாரணமாக, விவசாய நடைமுறைகள் பற்றிய தகவல்களை நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், பண்ணையில் இருப்பது பயனுள்ளதாக இருக்கும்; நீங்கள் நேர்காணல் செய்யும் நபர் உங்களுக்கு இடங்கள், விவசாய நுட்பங்கள் போன்றவற்றைக் காட்ட முடியும், மேலும் அவர்கள் பேசும் சூழலில் இருப்பதன் மூலம் அவர்கள் ஈர்க்கப்படலாம்.
  • சில நேரங்களில் ஒரு நபரை ஒரே இடத்தில் நேர்காணல் செய்வதற்கு பதிலாக, அந்த நபரை நேர்காணல் செய்யும் போது அவர்களுடன் நடந்து செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழியில் அந்த நபர் அவர்கள் விவரிக்கும் இடங்கள்/செயற்பாடுகளைப் பார்க்க உங்களை அழைத்துச் செல்ல முடியும். அந்த நபர் என்ன விவரிக்கிறார் என்பதை நன்கு புரிந்துகொள்ள இது உதவும், மேலும் அந்த நபர் விளக்கத்தில் இன்னும் துல்லியமாக இருக்க உதவலாம்.

Illustration of two people looking at a map

கட்டம் 3. பதிவு, வீடியோ பதிவு அல்லது குறிப்புகளை எடுப்பது

  • நேர்காணலின் போது அவர்கள் கூறுவதை கேட்டுக்கொண்டு பொருத்தமான விடயங்களையம் குறித்துக்கொண்டு அடுத்த வினாவினையும் யோசிப்பதற்கு பெரும் திறமை தேவைப்படுகிறது. நேர்காணலை ஜோடிகளாக நடத்த உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், ஒருவர் கேள்விகளைக் கேட்கலாம், மற்றவர் குறிப்புகளை எடுக்கலாம். 
  • பதிவு செய்வது எழுதாமல் அந்த நபர் என்ன சொல்கிறார் என்பதில் கவனம் செலுத்த உங்களை அனுமதிக்கிறது. சைகைகள் மற்றும் வெளிப்பாடுகளை கண்காணிக்கவும் வீடியோ பதிவு உங்களை அனுமதிக்கிறது. ஆனால் மக்கள் வெட்கப்படலாம் மற்றும் பதிவு செய்யப்படும் போது அசௌகரியத்தை உணர முடியலாம். நீங்கள் எப்போதும் அனுமதி கேட்க வேண்டும். அந்த நபருடன் நடந்து செல்வதானால், உரிய நேரத்தில் குறிப்புகளை எடுத்துக்கொண்டு தகவல்களைப் பதிவு செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Illustration of a person with a microphone

ஒரு நேர்காணலை மேற்கொள்வதற்கான உதவிக்குறிப்புகள்

A person being shown a map and asked questions by someone interviewing them

  • கேள்விகளைக் கேட்கத் தொடங்குவதற்கு முன், நேர்காணப்படுபவர் கலந்துரையாடல் எதைப் பற்றியது என்பதை அறிந்திருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும். நீங்கள் நேர்காணல் செய்யும் நபர்கள், அவர்கள் சொல்லும் அனைத்தும் நம்பகத்தன்மையாக வைக்கப்பட்டிருக்கும், அவர்கள் உங்களுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே அவர்கள் கூறிய விடயங்கள் பதிவு செய்யப்படும் மற்றும்  பின்னர் ஆய்வு தேவைகளுக்கு பயன்படுத்தப்படும், என்பதை அறிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நேர்காணல் செய்யப்படுபவருடன் நேர்காணல் எவ்வளவு நேரம் நீடிக்கும் என்பதை நீங்கள் தீர்மானித்து, அந்த நேரத்தை சரியாகக் கடைபிடிக்க வேண்டும்.
  • நேர்காணல் ஒரு விசாரணை அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்; நீங்கள் மற்றவரை இயல்பாகவும் உங்களுடன் பேசி மகிழ்வதை உணரச் செய்யவும் முயற்சிக்க வேண்டும்.
  • உங்களிடம் முன்கூட்டியே கேள்விகள் பட்டியலிடப்பட்டிருந்தாலும், நேர்காணலில் அவற்றை பட படவென அவர்கள் முன் வைக்க வேண்டாம். அவர்களின் யோசனைகளை வளர்த்துக்கொள்ளவும், தேவைப்பட்டால் விளக்கம் கேட்கவும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.
  • நீங்கள் பதட்டமாக இருந்தாலும், பதில்களைக் கவனமாக செவிமடுப்பதையும் மற்ற நபருடன் பழகுவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • நேர்காணலின் தொடக்கத்தில் சிக்கலான கேள்விகளைக் கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக, சில சிக்கலற்ற, எளிய கேள்விகளுடன் நேர்காணலை ஆரம்பியுங்கள் (எடுத்துக்காட்டாக பெயர், தொழில், குறித்த பிரதேசத்தில் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கை போன்றவை).
  • உங்கள் கேள்விகளை வடிவமைக்கும்போது, ​​அவற்றை முடிந்தவரை திறந்த நிலையில் வைக்க முயற்சிக்கவும். இது மிகக் குறுகிய பதில்களைத் தடுப்பதுடன், பதிலளிப்பவர் தலைப்பில் தங்கள் சொந்த கருத்துக்களை உருவாக்க வாய்ப்பளிக்கிறது. உங்கள் தனிப்பட்ட கருத்தைக் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள், ஏனெனில் நேர்காணல் செய்பவர் அதை பிடித்துக்கொண்டு வேறு ஏதாவது சொல்ல பயப்படுபவராக (அல்லது மிகவும் கூச்சமாக) இருக்கலாம்.
  • மற்ற நபரை சங்கடப்படுத்தக்கூடிய அம்சங்களை கையாளும் போது, ​​நேர்காணலின் போக்கில் நேர்காணல் செய்யப்படுபவர் மிகவும் சங்கடமானவராக இருந்தால் மற்றொரு விடயத்துக்கு செல்ல தயாராக இருங்கள்.
  • நேர்காணலின் முடிவில், நேர்காணல் செய்பவரிடம் உங்களிடம் கேள்விகள் கேட்கவும், தேவைப்பட்டால் மீண்டும் பதிவு செய்யப்பட்ட பொருளை எப்படிப் பயன்படுத்துவீர்கள் என்பதை விளக்கவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.