Skip to main content

பங்கேற்பு காட்சி நுட்பங்கள்

Site: OpenLearn Create
Course: 2 பங்கேற்பு நுட்பங்கள் Tamil
Book: பங்கேற்பு காட்சி நுட்பங்கள்
Printed by: Guest user
Date: Monday, 5 Jun 2023, 23:27

1. பங்கேற்பு வரைதல்

Illustration of three people working on a drawing
அது என்ன?
 • படங்கள் மூலம் பிரச்சினைகள் அல்லது நடைமுறைகளின் பிரதிநிதித்துவம் (எழுதப்பட்ட உரையுடன் அல்லது இல்லாமல்). இது பங்கேற்பாளர்களால் மேற்கொள்ளப்படுகிறது.
அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?

 • குறிப்பிட்ட கேள்விகளுக்கு, தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ பதிலளிக்க - ஒரு வரைபடத்தை உருவாக்குவது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை/ கரிசனையை பிரதிநிதித்துவப்படுத்த மக்களை அனுமதிக்கலாம்.
 • ஸ்டோரிபோர்ட்களை (இயக்கப்பட தொடர் சித்திரங்கள்) உருவாக்குதல் - ஒரு கதையின் வடிவத்தில் யோசனைகளை ஒன்றிணைத்தல்

திறந்த பல்கலைக்கழகம் உருவாக்கிய இந்தக் காணொளி, ஒரு கேள்வி அல்லது சூழ்நிலையை ஆராய்வதற்காக ஒரு சிறந்த படத்தை எப்படி வரையலாம் என்பதற்கான உதாரணத்தை வழங்குகிறது.

நன்மைகள்
 • மலிவானது - பேனா, பென்சில் மற்றும் காகிதம் ஆகிய அடிப்படைப் பொருட்கள் மட்டுமே கிடைக்கும்போது பயன்படுத்த முடியும்.
 • கருத்துக்கள், கரிசனைகள், கருத்துகளின் தனிப்பட்ட வெளிப்பாட்டை அனுமதிக்கிறது.
 • குழு வரைதல், எடுத்துக்காட்டாக ஸ்டோரிபோர்டுகள் மூலம், விவாதத்தை வளர்க்கிறது.
வரையறைகள்

 • வரைபடங்கள் மூலம் கருத்துக்களைப் பிரதிநிதித்துவம் செய்வது எப்போதுமே எளிதானது அல்ல. ஆரம்பத்தில் நீங்கள் மிகவும் தெளிவான மற்றும் எளிதான வழிகாட்டுதலை கொடுக்க வேண்டும்.
 • வரைபடங்களின் விளக்கம் மிகவும் திறந்ததாகவும் சுதந்திரமானதாகவும் மற்றும் திட்டத்தின் நோக்கங்களுக்கான அதன் தொடர்பு உங்களுக்கும் பங்கேற்பாளரின் விளக்கத்திற்கும் வெளிப்படையானதாகவும் இருத்தல்.
 • பங்கேற்பாளர்கள் ஆச்சரியப்படக்கூடும் மற்றும் அத்தகைய செயற்பாட்டின் குறிக்கோள்கள் மற்றும் வெளியீடுகள் குறித்து உறுதியாக தெரியவில்லை.
 • எதிர்பார்த்த வெளியீடுகள் அதிகமாக இருந்தால் மக்கள் விரைவில் ஊக்கமடையலாம்.

இந்த புகைப்படம் ஒரு ஆற்றின் அருகே உள்ள சமூகம் மற்றும் மரம் வெட்டுதல், சுரங்கம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களைக் காட்டும் ஒரு சிறந்த படம்.

A photo of a rich picture showing a community near a river and the threats they face from logging, mining and climate change

2. பங்கேற்பு புகைப்படம்

Illustration of someone taking a photograph

அது என்ன?

 • புகைப்படங்கள் மூலம் பிரச்சினைகள் அல்லது நடைமுறைகளின் பிரதிநிதித்துவம். இவற்றைத் தொகுக்கலாம் (எழுதப்பட்ட உரையுடன் அல்லது இல்லாமல்) ஒரு புகைப்படக் கதையின் வடிவத்தில் ஒரு கதையைச் சொல்ல.


அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?

 • குறிப்பிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க, தனித்தனியாகவோ அல்லது குழுவாகவோ - புகைப்படங்களை எடுப்பது ஒரு குறிப்பிட்ட பிரச்சினை/கவலையை பிரதிநிதித்துவப்படுத்த மக்களை அனுமதிக்கலாம்.
 • ஒரு செயற்பாட்டின் வெளியீடுகளை மற்ற குழுக்கள்/ சமூகங்களுடன் பகிர்ந்து கொள்ள (உதாரணமாக ஒரு புகைப்படக்களம் மூலம்).
 • ஒரு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வு, ஒரு குறிப்பிட்ட குறிகாட்டி, தொடக்க நிலை, ஒரு சிறந்த நடைமுறை போன்றவற்றை ஆவணப்படுத்த

A person taking a photograph of someone grating cassava

நன்மைகள்

 • எழுத்துடன் ஒப்பிடுகையில் இன்னும் தெளிவான மற்றும் வளமான தகவல்களை அளிக்க முடியும்.
 • புகைப்படங்களில் கருத்து தெரிவிப்பது குழு விவாதத்தை ஊக்குவிக்கும்


வரையறைகள்

 • தொழில்நுட்ப மற்றும் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்த பொருட்களின் தேவை: கேமராக்கள், பிரிண்டர், கணினி.
 • கணினிகளின் பயன்பாடு தேவைப்பட்டால், பங்கேற்பாளர்கள் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்

வடக்கு ருபுனுனி, கயானாவில் உள்ள ரூபர்டீ சமூகத்துடன் தயாரிக்கப்பட்ட புகைப்படக் கதையை எடுத்துக்காட்டும் படங்கள், சமூகத்தின் நம்பகத்தன்மையின் சில அம்சங்களை விளக்குகின்றன.

எமது அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்கிறோம்? நிலம் அச்சமூகத்திற்கு அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கான பல்வேறு ஆதாரங்களை வழங்கியது, அதாவது  சிங்கிள்ஸ் மற்றும் கோக்ரைட் இலைகள்  வீடுகளுக்கான கூரையினையும் மரவள்ளிக்கிழங்கு போன்ற பாரம்பரிய உணவுகளான மரவள்ளிக்கிழங்கு ரொட்டி மற்றும் உள்ளூர் பானமான காசிரியை தயாரிப்பதற்கான காசிரி உருளைக்கிழங்கு ஆகியவற்றை நடுவதற்கான விவசாய நிலங்களையும் வழங்கியது.

Photostory illustrating how Rupertee community meets their basic needs through traditional construction, farming and cooking

எமது அடையாளத்தை நாம் எப்படி பேணுகிறோம்? மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க, சமூகம் ஒரு கலாச்சார கற்றல் மையத்தை நிறுவியுள்ளது; மொழி, கைவினைக் கலை, கதைகள், பாடல்கள் மற்றும் நடனம் உள்ளிட்ட உள்ளூர் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை இளம் தலைமுறையினருக்கு இங்கே கற்பிக்கப்படுகிறது.

Photostory illustrating how Rupertee community maintains their identity through cultural sharing and teaching activities

எது எமக்கு தெரிவையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது? வயிற்றுப்போக்குக்கு சிகிச்சையளிக்க கொய்யா மற்றும் முந்திரி பட்டை கலவை போன்ற நவீன மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருந்துகளால் சமூக உறுப்பினர்கள் தங்கள் ஆரோக்கியத்தை பேணுகின்றனர். உள்ளூர் கிளினிக்குகள் சிறுவர் சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குகின்றன.

Photostory illustrating how modern as well as locally made medicine gives Rupertee community members choice and flexibility

3. பங்கேற்பு வீடியோ

Illustration of two people taking a video
அது என்ன?
 • வீடியோ மூலம் பிரச்சினைகள் அல்லது செயற்பாடுகளின் பிரதிநிதித்துவம். ஒரு திரைப்படத்தின் வடிவில் ஒரு கதையைச் சொல்ல வீடியோ கிளிப்புகள் தொகுக்கப்படலாம்.


அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?

பிரச்சினைகளை ஆராய மக்களை ஒன்றிணைக்க - ஒரு குறிப்பிட்ட குழு அல்லது சமூகம் ஒன்றிணைந்து ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை/கரிசனையை பிரதிநிதித்துவப்படுத்துவதில் கூட்டாக வேலை செய்ய அனுமதிக்கிறது.

பரந்த பங்குதாரர்களுடன் தொடர்பு கொள்ள-பிற குழுக்கள், சமூகங்கள் மற்றும் முடிவெடுப்பவர்களுடன் பயனுள்ள தகவல் தொடர்புகளை அனுமதிக்கிறது.


நன்மைகள்

 • காட்சி மற்றும் ஓடியோ மூலம் விரிவான தகவல் பிடிப்பு மற்றும் தொடர்பாடல்
 • எதிர்பாராத விளைவுகளை வெளிப்படுத்த முடியும்.
 • ஆக்கத்திறன்வாய்ந்தது.
 • பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் வேடிக்கையாக இருக்கும்

வரையறைகள்

 • விலையுயர்ந்தது - உபகரணங்கள் விலை உயர்ந்ததாக இருக்கலாம், இருப்பினும் குறைந்த தரம் வாய்ந்த வீடியோ காட்சிகளை இப்போது மொபைல் போன்களில் எடுக்க முடியும்.
 • நேரத்தை எடுத்துக்கொள்ளும்-உபகரணங்கள் பயன்பாட்டில் பயிற்சி மற்றும் தகவல்களைப் பிடித்தல்/திருத்துதல்/பகிர்வது நிறைய நேரம் எடுக்கும்.
 • படமாக்குதல், எடிட் செய்தல் மற்றும் திரையிடலின் தரத்தால் கைப்பற்றப்பட்ட தகவலுடனான ஈடுபாடு பாதிக்கப்படலாம்.
 • பங்கேற்பாளர்கள் இயக்குவதற்கான அறிவைப் பெற்றிருக்க வேண்டும், குறிப்பாக எடிட்டிங் செய்ய கணினிகளைப் பயன்படுத்தும் போது

A person smiling as they are being videoed by someone using a tablet on a tripod whilst another person asks questions

இப்போது, இந்தப் புத்தகத்தை முடித்த பிறகு, பிரதான பக்கத்திற்குச் சென்று, செயற்பாடு 1ஐ பூர்த்திசெய்வதை உறுதிசெய்யுங்கள்.