Site: | OpenLearn Create |
Course: | 3 டிஜிட்டல் திறன்கள் Tamil |
Book: | 3.2 மொபைல் சாதனங்கள் |
Printed by: | Guest user |
Date: | Wednesday, 19 February 2025, 9:48 AM |
மொபைல் சாதனங்களின் பல்வேறு வகைகள் மற்றும் மாதிரிகள் உள்ளன. இரண்டு முக்கிய இயக்க முறைமைகள் கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் iOS ஆகும். இந்த அலகு ஆண்ட்ராய்டைப் பயன்படுத்தும் மொபைல் சாதனங்களில் கவனம் செலுத்தும்.
மொபைல் சாதனங்கள் என்பது இணையம், செயலிகள் மற்றும் பிற மென்பொருட்களுக்கான அணுகலை வழங்கும் போன்கள் அல்லது டேப்லெட்டுகள் போன்ற சிறிய டிஜிட்டல் பொறிமுறைகள்.
மொபைல் இயக்க முறைமைகள் பொத்தான்கள், ஐகன்ஸ்கள், விண்டோஸ் மற்றும் டைல்ஸ்களின் வரைகலை காட்சியை வழங்குகின்றன, இவற்றை பல்வேறு பணிகளைச் செய்ய நீங்கள் தொடலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம். மொபைல் இயக்க முறைமைகள் மொபைல்களின் வன்பொருளையும் நிர்வகிக்கின்றன மற்றும் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் அணியக்கூடியவையின் செயலிகளை இயக்குவதை சாத்தியமாக்குகின்றன.
இரண்டு மிகவும் பிரபலமான மொபைல் இயக்க முறைமைகள் Android மற்றும் iOS ஆகும்.
ஒரு மொபைல் செயலி (ஒரு மொபைல் எப் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு மொபைல் சாதனத்தில் இயங்க வடிவமைக்கப்பட்ட ஒரு வகை செயலி ஆகும், இது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கணினியாக இருக்கலாம். வாழ்க்கை முறை, சமூக ஊடகங்கள், பயன்பாடு, விளையாட்டுகள்/பொழுதுபோக்கு, உற்பத்தித்திறன் மற்றும் செய்தி/தகவல் போன்ற மொபைல் செயலிகளில் பல வகைகள் உள்ளன.
பின்வரும் விளக்கப்படம் மொபைல் செயலிகளின் பல்வேறு வகைகள் (உற்பத்தித்திறன், சமூக ஊடகங்கள், கணனி விளையாட்டுகள்) மற்றும் எடுத்துக்காட்டுகள் (Epicollect5, Facebook, Candy Crush Saga) ஆகியவற்றை வழங்குகிறது.
மொபைல் சாதனங்களின் முக்கிய அம்சங்களின் பட்டியல் பின்வருமாறு:
மொபைல் சாதனங்களின் முக்கிய பயன்பாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்கள் கீழே உள்ள விளக்கப்படத்தில் விவரிக்கப்பட்டுள்ளவாறு சில வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்தி இணையத்தைப் பயன்படுத்தலாம் மற்றும் இணைக்கலாம்.
வைஃபை இணைப்பு உங்கள் தொலைபேசி திட்டத்திலிருந்து எந்த தரவையும் பயன்படுத்தாது; உங்கள் பகுதி மற்றும் சேவை வழங்குநரைப் பொறுத்து, வைஃபை இணைப்புகள் பொதுவாக வேகமாக இருக்கும்.
வைஃபை பயன்படுத்தி இணையத்துடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்த படிப்படியான விளக்கத்திற்கு கீழே உள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்:
ஆண்ட்ராய்டு சாதனங்கள் தரவை இணையத்துடன் இணைக்க முடியும், ஆனால் வேகம் மற்றும் தரம் உங்கள் வழங்குநர் திட்டம் மற்றும் நெட்வொர்க் இணைப்பைப் பொறுத்தது.
உங்கள் மொபைல் தரவைப் பயன்படுத்தி இணையத்தை எவ்வாறு இணைப்பது என்பதை கீழே விவரிக்கப்பட்டுள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்:
உங்கள் மடிக்கணினியில் இணையத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், உங்கள் தொலைபேசியின் தரவைப் பயன்படுத்தி அதற்கான ஹொட்ஸ்பாட்டை (Hotspot) உருவாக்கலாம். இது உங்கள் தரவை மற்ற சாதனத்திற்கு அணுகக்கூடிய இணைய இணைப்பாக மாற்றும்.
இணையத்தை அணுக ஒரு ஹொட்ஸ்பாட்டை உருவாக்க உங்கள் தொலைபேசியை எவ்வாறு பயன்படுத்துவது என்ற செயல்முறையை விவரிக்க கீழே உள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும்:
‘எபிகாலெக்ட் 5’ செயலியின் உதாரணத்தைப் பயன்படுத்தி மொபைல் செயலிகளை பதிவிறக்கம் செய்யவும், இன்ஸ்டால் செய்யவும், ஓபன் செய்யவும் தேவையான படிகளை பின்வரும் விளக்கப்படம் சித்தரிக்கிறது.
‘எபிகாலெக்ட் 5’ ஐப் பயன்படுத்தி தரவு வேலைக்கு மொபைல் செயலிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதற்கான எடுத்துக்காட்டுக்கு இந்த மூன்று பகுதி வீடியோ விளக்கத் தொடரைப் பார்க்கவும்.
பகுதி 1 இல் உருவாக்கப்பட்ட மாதிரி திட்டத்திற்கான தரவை சேகரிக்க Epicollect5 மொபைல் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பகுதி 2 காட்டுகிறது.
கீழ்க்கண்ட விளக்கப்படம் உங்கள் மொபைல் சாதனங்களைப் பராமரிப்பதற்கான பல்வேறு வழிகளைக் காட்டுகின்றது .
உங்கள் மொபைல் சாதனங்களின் பாதுகாப்பை மேம்படுத்த சில வழிகள் பின்வருமாறு:
1. மொபைல் சாதன அணுகலுக்கான பாதுகாப்பு உள்ளமைவுகளை இயக்கவும்
அ. தானியங்கி பூட்டை இயக்கவும்
ஆ. கடவுச்சொல் பாதுகாப்பை இயக்கி கடவுச்சொற்களை அமைக்கவும்.
2. உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை கவனமாக நிர்வகிக்கவும்
அ. புளூடூத், இன்பிரார்ட் அல்லது வைஃபை போன்ற தொலைநிலை அணுகல் அம்சங்களை நீங்கள் பயன்படுத்தாதபோது அவற்றை முடக்கவும்.
ஆ. புளூடூத்-இயக்கப்பட்ட சாதனங்களை கண்டறிய முடியாததாக அமைக்கவும், அதனால் அவை அங்கீகரிக்கப்படாத சாதனங்களுக்கு புலப்படாததாக இருக்கும்.
இ. தெரியாத வைஃபை நெட்வொர்க்குகளில் சேர வேண்டாம்.
3. உங்கள் சாதனத்தை தொடர்ந்து பெக்அப் செய்யவும்
அ. உங்கள் மொபைல் சாதனத்திற்கு அணுகல் இல்லாதபோது உங்கள் முக்கியமான தரவை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டெஸ்க்டாப் அல்லது ஒத்திசைவு சேவைகளில் காப்பு மென்பொருளைப் பயன்படுத்தவும்.
4. வைரஸ் தடுப்பு நிரல்களை நிறுவவும்
அ. மிகவும் புதிய தெரிவுக்கு Google Play Store ஐப் பார்க்கவும்.
ஆ. வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கிடைக்கும்போது அதை நிறுவவும் மற்றும் புதுப்பித்த கையொப்பங்கள் மற்றும் இயந்திரங்களை பராமரிக்கவும்.
இ. நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்க வேண்டாம்.
5. உங்கள் மொபைல் சாதனத்தை அடிக்கடி புதுப்பிக்கவும்
அ. கிடைத்தால் தானியங்கி புதுப்பிப்பு (automatic update) விருப்பத்தை உள்ளமைத்து தேர்ந்தெடுக்கவும்.
ஆ. இயக்க முறைமைகள் மற்றும் செயலிகள் உட்பட புதுப்பித்த மென்பொருளை பேணவும்.
இ. உற்பத்தியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிலைப்பொருள் ( ஃபார்ம்வேர்) அல்லது இயக்க முறைமைகளை மட்டும் இயக்கவும்.
6. திருட்டை தடுக்க பௌதீக பாதுகாப்பு பொறிமுறைகளை இயலுமாக்கவும்
அ. கண்காணிப்பு மென்பொருள் அல்லது அம்சங்களைப் பயன்படுத்தவும்.
ஆ. உங்கள் மொபைல் சாதனத்தை கவனக்குறைவாக எங்கும் வைக்காதீர்கள் .
இ. இழந்த அல்லது திருடப்பட்ட சாதனங்களை உடனடியாகப் புகாரளிக்கவும்.
ஈ. சாதனத்தில் சேமிக்கப்பட்ட அல்லது நினைவில் வைத்திருக்கும் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றவும்.
உ. தரவு மீட்பை செயல்படுத்த உங்கள் மொபைல் சாதனத்தில் தரவை தொடர்ந்து பெக்அப் காப்புப் பிரதி எடுக்க நினைவில் கொள்ளுங்கள்.
7. நீங்கள் ஒரு புதிய சாதனத்தைப் பெறும்போது மொபைல் சாதனங்களுக்கு பொருத்தமான அகற்றல் நடைமுறைகளைப் பயன்படுத்தவும்
அ. நீங்கள் அச்சாதனத்தை அப்புறப்படுத்தவோ பரிமாற்றம் செய்யவோ நன்கொடை செய்யவோ முதல் அதில் சேமித்து வைக்கும் அனைத்து தகவல்களையும் நீக்கவும்.
8. உங்கள் தனியுரிமையை திறம்பட நிர்வகிக்கவும்
அ. நீங்கள் பகிரும் தகவலைக் கட்டுப்படுத்த மற்றும் அதை யார் பார்க்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்த தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்தவும்.
ஆ. உங்கள் இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து பகிரும் சேவைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கவனியுங்கள்.
உங்கள் மொபைல் சாதனங்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு மேலதிக வழிகளை பின்வரும் விளக்கப்படம் வழங்குகிறது:
The following infographic presents various additional ways of securing your mobile devices: