Skip to main content

3.2 மொபைல் சாதனங்கள்

1. மொபைல் சாதனங்களின் வகைகள், அம்சங்கள் மற்றும் பயன்கள்

Wமொபைல் சாதனங்கள் என்றால் என்ன?

மொபைல் சாதனங்களின் பல்வேறு வகைகள் மற்றும் மாதிரிகள் உள்ளன. இரண்டு முக்கிய இயக்க முறைமைகள் கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் iOS ஆகும். இந்த அலகு ஆண்ட்ராய்டைப் பயன்படுத்தும்  மொபைல் சாதனங்களில் கவனம் செலுத்தும்.

மொபைல் சாதனங்கள் என்பது இணையம், செயலிகள் மற்றும் பிற மென்பொருட்களுக்கான அணுகலை வழங்கும் போன்கள் அல்லது டேப்லெட்டுகள் போன்ற சிறிய டிஜிட்டல் பொறிமுறைகள்.

Graphic of a smartphone, smartwatch, tablet and e-reader

மொபைல் இயக்க முறைமைகள்

மொபைல் இயக்க முறைமைகள் பொத்தான்கள், ஐகன்ஸ்கள், விண்டோஸ் மற்றும் டைல்ஸ்களின் வரைகலை காட்சியை வழங்குகின்றன, இவற்றை  பல்வேறு பணிகளைச் செய்ய நீங்கள் தொடலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம். மொபைல் இயக்க முறைமைகள் மொபைல்களின் வன்பொருளையும் நிர்வகிக்கின்றன மற்றும் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் அணியக்கூடியவையின் செயலிகளை இயக்குவதை சாத்தியமாக்குகின்றன.

இரண்டு மிகவும் பிரபலமான மொபைல் இயக்க முறைமைகள் Android மற்றும் iOS ஆகும்.

Graphic showing iOS and Android mobile operating systems

மொபைல் செயலிகள் (எப்லிகேசன்ஸ்)

ஒரு மொபைல் செயலி (ஒரு மொபைல் எப் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது ஒரு மொபைல் சாதனத்தில் இயங்க வடிவமைக்கப்பட்ட ஒரு வகை செயலி ஆகும், இது ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட் கணினியாக இருக்கலாம். வாழ்க்கை முறை, சமூக ஊடகங்கள், பயன்பாடு, விளையாட்டுகள்/பொழுதுபோக்கு, உற்பத்தித்திறன் மற்றும் செய்தி/தகவல் போன்ற மொபைல் செயலிகளில் பல வகைகள் உள்ளன.

பின்வரும் விளக்கப்படம் மொபைல் செயலிகளின் பல்வேறு வகைகள் (உற்பத்தித்திறன், சமூக ஊடகங்கள், கணனி விளையாட்டுகள்) மற்றும் எடுத்துக்காட்டுகள் (Epicollect5, Facebook, Candy Crush Saga) ஆகியவற்றை வழங்குகிறது.

Graphic showing a mobile phone and common applications

மொபைல் சாதனங்களின் அம்சங்கள் மற்றும் பயன்பாடுகள் (ஸ்மார்ட்போன்கள்)

மொபைல் சாதனங்களின் முக்கிய அம்சங்களின் பட்டியல் பின்வருமாறு:

  • ரிசீவர்
  • புரொக்சிமிடி சென்சர்
  • வலியூம் பொத்தான்கள்
  • பவர் பட்டன்
  • முகப்பு பொத்தான்
  • ஃப்ளாஷ்
  • மொபைல் சாதனத்தின் புகைப்பட கருவி
  • தொடுதிரை
  • மென்பொருள் அடிப்படையிலான விசைப்பலகை

மொபைல் சாதனங்களின் முக்கிய பயன்பாடுகளின் பட்டியல் பின்வருமாறு:

  • குரல் மற்றும் வீடியோ அழைப்பு மூலம் நிகழ்நேர தொடர்பு
  • குறுகிய செய்தி சேவை (எஸ்எம்எஸ்) - குறுஞ்செய்தி
  • மொபைல் சாதனத்தின் புகைப்பட கருவி மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு
  • பொழுதுபோக்கு - இசை மற்றும் வீடியோக்களை இரசித்தல் மற்றும் வானொலி கேட்பது
  • தகவல் மற்றும் மின்னஞ்சல் போன்ற இணைய சேவைகள்
  • மொபைல் டிராக்கிங் (தடங்காணல்) போன்ற ரிமோட் வேலை - இருப்பிடத் தரவைச் சேகரித்தல்
  • மொபைல் வங்கிச்சேவை

Graphic showing a mobile phone and common features