Skip to main content

3.5 விளக்கக்காட்சிகள்

4. உங்கள் விளக்கக்காட்சிகளில் வெளிப்புற ஊடகத்தை ஒருங்கிணைத்தல்

உ-ம். படங்கள், வீடியோக்கள், அட்டவணைகள், வரைபடங்கள்/விளக்கப்படங்கள்

படங்கள் - ஸ்லைடில் ஒரு படத்தைச் சேர்க்க, செருகும் தாவலுக்கு (Insert tab) செல்லவும். படப் பிரிவில் உள்ள படங்களைக் கிளிக் செய்யவும். ஒரு window திறக்கும், அங்கு நீங்கள் உங்கள் படத்தைக் கண்டுபிடித்து, அதைத் தேர்ந்தெடுத்து சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

Graphic showing how to Insert a Picture

விளக்கப்படங்கள் - விளக்கப்படம் மற்றும் வரைபடங்கள் உங்கள் பார்வையாளர்களுக்கு தகவலை காட்சிப்படுத்தப் பயன்படுகிறது. ஒரு விளக்கப்படத்தைச் சேர்க்க, செருகும் தாவலின் (Insert tab) கீழ் விளக்கப்பட வகையைக் கண்டறிந்து விளக்கப்படத்தைக்( Chart) கிளிக் செய்யவும். இது தேர்வு செய்ய விருப்பங்களின் (window of options) திறக்கும். இடதுபுறத்தில், பல்வேறு வகையான விளக்கப்படங்களின் பட்டியலைக் காண்பீர்கள். விரும்பிய விளக்கப்படத்தைத் தேர்ந்தெடுத்து, வார்ப்புருக்களிலிருந்து (templates) தேர்ந்தெடுத்து சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

Graphic showing how to Insert a Chart

சரி OK என்பதைக் கிளிக் செய்த பிறகு, குறைக்கப்பட்ட எக்செல் விண்டோ (minimized excel window) தோன்றும். விளக்கப்படத்தில் உள்ள பெறுமதிகளை இங்கே திருத்தலாம். ஒவ்வொரு முறையும் நீங்கள் வரைபடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது காட்டப்படும் வடிவம் மற்றும் வடிவமைப்பு தாவல்களில் (format and design tabs )உள்ள பல்வேறு விருப்பங்களுடன் விளக்கப்படத்தின் நிறம் மற்றும் வடிவத்தை style மாற்றலாம்.

Graphic showing how to change the look of a Chart

வீடியோ மற்றும் ஓடியோ - செருகும் தாவலின் (Insert Tab) கீழ் மீடியா வகையைத் தேடுங்கள். வீடியோ அல்லது ஆடியோவைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஸ்லைடில் சேர்க்க விரும்பும் வீடியோ அல்லது ஓடியோவைத் தேர்ந்தெடுத்து சரி என்பதைக் கிளிக் செய்யவும்.

Graphic showing how to Insert a Video and Audio

இப்போது, இந்தப் புத்தகத்தை முடித்த பிறகு, முதன்மைப் பக்கத்திற்குச் சென்று, செயல்பாடு 3ஐ முடிக்கவும்.