Skip to main content

3.8 வலையமைப்பு பகிர்வு

Site: OpenLearn Create
Course: 3 டிஜிட்டல் திறன்கள் Tamil
Book: 3.8 வலையமைப்பு பகிர்வு
Printed by: Guest user
Date: Thursday, 28 March 2024, 6:15 PM

1. அறிமுகம்

உள்ளூர் தகவல்களைப் பதிவு செய்யவும், பகுப்பாய்வு செய்யவும், அறிக்கையிடவும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்தத் தகவல் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் அல்லது இணையதளங்களில் பகிரப்படுவது பொதுவானது, ஆனால் இதற்கு இணைய அணுகல் தேவை. அணுகல் இருந்தாலும், பல சமூக உறுப்பினர்களுக்கு இணைய அணுகல் இல்லை, அல்லது இணைய அணுகல் சாத்தியமானால், இது விலை உயர்ந்ததாக இருக்கும். இதற்கு மேலதிமாக, சில சமூக உறுப்பினர்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சிக்கல்களுக்காக இணையத்தில் உள்ளூர் தகவல்களைப் பதிவேற்ற விரும்பாதிருக்கலாம், அதற்குப் பதிலாக இந்தத் தகவலைத் தங்கள் வட்டாரத்தில் வசிக்கும் மற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கச் செய்ய விரும்பலாம்.

புளூடூத்தைப் பயன்படுத்தி  இணைய அணுகலுக்கான தேவையில்லாமல் மக்கள் சாதனத்திலிருந்து சாதனத்திற்கு தகவலைப் பகிரலாம். இருப்பினும், இது இரண்டு சாதனங்கள் நெருக்கமாக இருப்பதைப் பொறுத்தது. தகவலைப் பகிர்வதற்காக புளூடூத்தை பயன்படுத்துவதற்கான மற்றொரு முக்கிய வரம்பு என்னவென்றால், அனைவருக்கும் எளிதாகவும் விரைவாகவும் அணுகக்கூடிய தகவல்களின் மையக் களஞ்சியம் இல்லை.

The Bluetooth symbol that indicates that a device has Bluetooth capabilities

2. DIY வலையமைப்புகள்

ஒரு மாற்று தீர்வு DIY வலையமைப்பு ஆகும். DIY வலையமைப்பு என்பது சுயாதீனமான இணைய உள்ளூர் வைஃபை வலயமாகும். அத்தகைய வலையமைப்பின் முக்கிய கூறு அந்த அலகு ஒளிபரப்பப்படும் வைஃபை சிக்னல் மூலம் அணுக முடியுமான ஒரு 'சர்வர்' ஆக செயற்படும் ஒரு கணினி அலகு ஆகும். ஃபோன், டேப்லெட் அல்லது லெப்டொப் உள்ள எவரும், வைஃபை சிக்னல் எல்லையில் இருந்தால், DIY வலையமைப்பில் கிடைக்கும் தகவலை அணுகலாம்.

உள்ளூர் DIY வலையமைப்புகளை அமைப்பதற்கான மென்பொருள் மற்றும் கருவித்தொகுப்பை உருவாக்கிய MAZI திட்டத்தில் இருந்து அத்தகைய DIY வலையமைப்புகளுக்கான ஒரு உதாரணத்தை கீழே உள்ள வீடியோ வழங்குகிறது. MAZI திட்டம் முடிவடைந்தது, ஆனால் அத்தகைய வலையமைப்புகளை அமைப்பதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மாற்று மென்பொருள்கள் உள்ளன, உதாரணமாக DietPi.


DIY வலையமைப்பிற்கான மிகவும் பிரபலமான கணினி அலகுகளில் ஒன்று Raspberry Pi ஆகும் - இது பாடசாலைகளில் அடிப்படை கணினி விஞ்ஞானத்தை கற்பிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தில் முதலில் உருவாக்கப்பட்டது. Raspberry Pi கணினிகள் இப்போது DIY வலையமைப்புகள் உட்பட அனைத்து வகையான செயலிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மார்ச் 2018 நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 மில்லியன் Raspberry Pi அலகுகள் விற்கப்பட்டுள்ளன. அனைத்து Raspberry Pi மாதிரிகளும் வைஃபை திறன்களுடன் உருவாக்கப்படவில்லை, ஆனால் அவை 25 யூரோக்கள்ள/40 டொலர்களுக்கு விற்கப்படுகின்றன.

A portable DIY Network running off a Raspberry PI computer

இந்த Raspberry Pi DIY வலையமைப்புகளின் பயன்பாடு கணினி அலகு Wi-Fi எல்லையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, பொதுவாக சுமார் 25 மீட்டர் எல்லைக்கு உட்பட்டது. இருப்பினும், மலிவான ஆண்டெனாக்களைப் பயன்படுத்தி அந்த எல்லையை கணிசமாக நீட்டிக்க முடியும். ஆனால் எல்லா வைஃபை வலையமைப்புகளையும் போலவே, சுவர்கள் மற்றும் தாவரங்கள் போன்ற பொருட்களும் இந்த எல்லயை கணிசமாகக் குறைக்கும்.


3. சமூக கட்டுப்பாட்டில் உள்ள DIY வலையமைப்புகள்

சமூக கட்டுப்பாட்டில் உள்ள DIY வலையமைப்புகள் விலையுயர்ந்த இணைய வழங்குநர்களுக்கு மாற்றீடாகும். உலகளாவிய கூட்டுறவு இணைய சேவை வழங்குநர்களுக்கு (ISPகள்) எதிராக, DIY வலையமைப்புகள் சமூகத்தால் பயன்படுத்தப்பட்டு உள்ளூர் மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. DIY வலையமைப்புகளில் உள்ள உள்ளடக்கத்தை சமூகங்கள் கட்டுப்படுத்தலாம் மற்றும் பொருத்தமற்ற பொருள், விளம்பரம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை விலக்கலாம்.

இலாபத்தால் இயக்கப்படுவதற்குப் பதிலாக, சமூகத்திற்கு சொந்தமான DIY வலையமைப்புகள் சமூக உறுப்பினர்களின் உண்மையான தேவைகளில் கவனம் செலுத்துகின்றன. இது சமூக உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் ஆளுகைக்கு ஆதரவளிக்கும், உள்ளூரில் தொடர்புடைய செய்திகள் மற்றும் தகவல்களைப் பதிவுசெய்து பகிர்ந்துகொள்ள சமூகங்களை அனுமதிக்கிறது. எனவே, உதாரணமாக, DIY வலையமைப்பு வரவிருக்கும் சமூக நிகழ்வுகள் மற்றும் சேவைகளின் ஒரு நாட்கட்டியை வழங்கலாம் (உ-ம் சுகாதார வருகைகள், போக்குவரத்து), தினசரி அல்லது வாராந்த செய்தி இற்றைப்படுத்தல்களை வழங்கலாம், உற்பத்திக்கான தற்போதைய சந்தை விலைகள் போன்ற பயனுள்ள தகவல்களைத் தொகுக்கலாம் என்பதுடன் உள்ளூர் சவால்களுக்கு சமூகத்திற்கு சொந்தமான தீர்வுகள் பற்றிய ஒரு ஊடக களஞ்சியமாகவும் செயற்படலாம்.

DIY வலையமைப்புகள் டிஜிட்டல் தகவலை ஒரு பொதுவானதாகக் கருதுகின்றன: அனைத்து சமூக உறுப்பினர்களின் நலனுக்காக நியாயமான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டிய ஒரு வளம். டிஜிட்டல் பொதுவானவைகளின் நிர்வாக செயன்முறைகள் நீர், காற்று, மீன் மற்றும் மேய்ச்சல் நிலம் போன்ற பிற பொதுவான வளங்களுக்காக உருவாக்கப்பட்டதை நெருக்கமாகப் பின்பற்றுகின்றன. பொதுவாகத் தேவைப்படுவது, அடிப்படைத் தொழில்நுட்பத்தைக் கையாளக்கூடிய ஒரு முகாமைத்துவக் குழு, தகவல்களைப் பதிவேற்றுவதற்கும் அணுகுவதற்கும் சமூக உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கவும் பயிற்சியளிக்கவும் முடியும், மேலும் வலையமைப்பு நியாயமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.

நடைமுறையில் DIY வலையமைப்பை எவ்வாறு பயன்படுத்தலாம்? கீழே உள்ள படம், Raspberry Pi 'சர்வரில்' நிறுவக்கூடிய திறந்த மூல (இலவச) மென்பொருள் கருவிகளில் சிலவற்றைக் காட்டுகிறது.

Icons of software programmes that can be used within a DIY network

DIY வலையமைப்பில் (மேலே-இடமிருந்து கீழ்-வலதுவரை) சமூகப் பயன்பாட்டிற்காக நிறுவக்கூடிய இலவச கருவிகள்:

  • ஈதர்பேட் (Etherpad) - கூட்டு சொல் செயன்முறையாக்கத்திற்கு
  • ரொக்கட்  (Rocket): சம்பாஷனை செய்திகளை அனுப்புவதற்கு
  • டௌரஸ் (Davros) - கோப்பு சேமிப்பு மற்றும் பகிர்வுக்காக;
  • QuickSurvey - வாக்கெடுப்புகள் மற்றும் கருத்துக்கணிப்புகளுக்கு
  • கிவிக்ஸ் (Kiwix) - உள்ளூர் விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கு
  • லிச்சி  (Lychee) - புகைப்பட எல்பங்களுக்கு
  • வேர்ட்பிரஸ் (WordPress) - ஒரு இணையதளத்தை வடிவமைத்து வெளியிடுவதற்கு
  • ரவுண்ட்கியூப் (RoundCube) - மின்னஞ்சல் சேவையை வழங்குவதற்காக