Skip to main content

4.2 சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்க நீங்கள் என்ன பயன்படுத்தலாம்

Site: OpenLearn Create
Course: 4 சுற்றுச்சூழல் கண்காணிப்பு Tamil
Book: 4.2 சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்க நீங்கள் என்ன பயன்படுத்தலாம்
Printed by: Guest user
Date: Thursday, 28 March 2024, 1:42 PM

1. பேனா மற்றும் காகிதம் மூலம் அவதானிப்பு மற்றும் பதிவு

ஒரு இடத்தில் சுற்றுச்சூழல் மாற்றத்தை தொடர்ந்து அவதானிப்பது மற்றும் எந்த மாற்றத்தையும் பேனா மற்றும் காகிதத்தில் பதிவு செய்வது தகவல்களை சேகரிக்க ஒரு பயனுள்ள நுட்பமாகும். உதாரணமாக, வனவிலங்கு இனங்களின் இருப்பு அல்லது இல்லாமை, வாழ்விடம் அல்லது நில பயன்பாட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், திண்மக்கழிவு மாசுபாட்டின் இருப்பு அல்லது இல்லாமை, மாசுபாட்டைக் குறிக்கும் நீர் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனித்து புரிந்து கொள்ளலாம். நதி அல்லது நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வது வெள்ளம் அல்லது வறட்சியைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

A photo of a person sitting in a wildlife viewing building using binoculars to survey birds

இந்த நுட்பத்துடனான ஒரு நல்ல யுக்தி ஒரு பதிவுத் தாளை உருவாக்குவது ஆகும், எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு கண்காணிப்பை மேற்கொள்ளும்போது அதே வகை தரவை சேகரிப்பீர்கள். பேனா மற்றும் காகித பதிவு தாளைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்ட தரவு பின்னர் மைக்ரோசாப்ட் எக்செல் போன்ற கணினி மென்பொருள் தொகுப்பில் உள்ளிடப்பட்டு, காலப்போக்கில் ஏதேனும் மாற்றங்களைக் காட்டும் அட்டவணைகள் அல்லது வரைபடங்களை உருவாக்க பகுப்பாய்வு செய்யலாம்.

பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:

  1. ஒரு பதிவுத் தாளை உருவாக்கவும்
  2. பதிவுத் தாளில் அவதானித்து பதிவு செய்யவும்
  3. பதிவு செய்யப்பட்ட தரவை பொருத்தமான கணினி மென்பொருளில் உள்ளிடவும்
  4. பெறுபேறுகளைப் பார்த்து, ஒரு வரைபடத்தை அல்லது தரவு அட்டவணையை உருவாக்கவும்

Illustration of someone following the steps to observe and record using pen and paper


2. ஸ்மார்ட்போன் செயலியைப் பயன்படுத்தி அவதானிப்பு மற்றும் பதிவு

பேனா மற்றும் காகிதத்துடன் அவதானிப்பது போலவே ஒரு ஸ்மார்ட்போன் செயலியையும் பயன்படுத்தலாம், ஆனால் இந்த விடயத்தில் உங்கள் அவதானிப்புகளை காகிதத்தில் எழுதுவதை விட நேரடியாக ஸ்மார்ட்போன் செயலியில் பதிவு செய்யலாம். பெரும்பாலும் ஸ்மார்ட்போன் செயலி தானாகவே வரைபடங்கள் அல்லது டேபிள்களை உருவாக்கலாம், இது காலப்போக்கில் மாற்றங்களைக் காட்ட உதவுகிறது. ஸ்மார்ட்போன்கள் செயலிகளும் புகைப்படம் எடுக்க உங்களை அனுமதிக்கின்றன மேலும் இவை உங்கள் அவதானிப்புகளுக்கு வலு சேர்ப்பதற்காக பதிவேற்றப்பட முடியும்.

பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:

  1. செயலியைப் பதிவிறக்கவும்
  2. செயலியைப் பயன்படுத்தி அவதானித்து பதிவு செய்யவும்
  3. தரவைச் சமர்ப்பிக்கவும்
  4. முடிவுகளைப் பார்த்து, ஒரு வரைபடத்தை அல்லது தரவு அட்டவணையை உருவாக்கவும்

Illustration of someone following the steps to observe and record using a smartphone


3. ஒரு மாதிரியைச் சேகரிப்பதன் மூலம் பதிவு செய்தல்

சில சுற்றுச்சூழல் மாற்றங்களால், நம் கண்களால் அவற்றைக் கவனிக்க முடியாததால், நாம் உண்மையில் மாற்றங்களைக் காண இயலாது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் காற்று அல்லது நீர் மாசுபாடு. இதன் போது ஏற்படும் இரசாயன அல்லது உயிரியல் மாற்றங்கள் எமக்குத் தெரியாது. இந்த சந்தர்ப்பங்களில், ஏதேனும் மாற்றங்களைக் கண்டறிய, ஒரு மாதிரியைச் சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்வது ஒரு நல்ல நுட்பமாகும். ஒரு நேரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய அறிவை மட்டுமே ஒரு மாதிரி உங்களுக்குத் தரும். ஆனால் தொடர்ந்து மாதிரிகளைச் சேகரிப்பது காலப்போக்கில் அல்லது மழைக்காலத்திற்குப் பிறகு குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு எப்படி மாற்றங்கள் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அனுமதிக்கும். சேகரிக்கப்பட்ட மற்றும் பகுப்பாய்வு செய்யப்பட்ட தரவு அட்டவணைகளாகவோ அல்லது காலப்போக்கில் மாற்றங்களைக் காட்டும் வரைபடங்களாகவோ ஒழுங்கமைக்கப்படலாம்.

Photo of someone collecting a water sample

பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:

  1. ஒரு மாதிரியைச் சேகரிக்க உங்கள் உபகரணங்களை ஒழுங்கமைக்கவும்
  2. உங்கள் மாதிரியை சேகரிக்கவும்
  3. ஆய்வகத்திற்கு அனுப்பவும் அல்லது உங்கள் மாதிரிகளை ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யவும்
  4. முடிவுகளைப் பார்த்து, ஒரு வரைபடத்தை அல்லது தரவு அட்டவணையை உருவாக்கவும்

Illustration of someone collecting a water sample and analysing it at a laboratory

4. ஒரு சென்சர் மூலம் பதிவுசெய்தல்

சில சுற்றுச்சூழல் மாற்றங்கள் நிலத்தடி நீர் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற மிக நீண்ட காலங்களில் மிக மெதுவாக நிகழலாம், மற்றவை குறுகிய காலத்திற்கு மிக விரைவாக நிகழ்கின்றன, (மழைக்காலத்திற்குப் பிறகு மாசுபாடு ஆற்றில் கழுவப்படுவது போன்று) அல்லது நடு இரவில் போன்ற பார்வையாளர் அங்கு இருப்பது கடினமான நேரங்களில், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மாற்றங்களைப் பதிவு செய்ய சென்சர் பயன்படுத்துவது ஒரு பயனுள்ள நுட்பமாகும். காற்று அல்லது நீரின் தரத்தில் ஏற்படும் மாற்றங்கள், நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் வனவிலங்குகள் இருப்பதைக் கண்டறிய, போன்ற பலவித சுற்றுச்சூழல் மாற்றங்களை கண்டறிய சென்சர்கள் பயன்படுத்தப்படலாம். சென்சர்கள் ஒவ்வொரு மணிநேரமும் தரவை சேகரிக்கலாம் அல்லது சுற்றுசூழலில் மாற்றம் ஏற்படும் நேரங்களில் அவை தூண்டப்படும்  போது மட்டுமே தரவை சேகரிக்கலாம். ஒரு சென்சர் தரவு பெரும்பாலும் அட்டவணை அல்லது வரைபடத்தில் வழங்கப்படுகிறது.

பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:

  1. அளவிடும் கருவியை நிறுவவும்
  2. ஒரு சென்சரை நிறுவவும்
  3. கணினியில் தரவைப் பதிவிறக்கவும்
  4. முடிவுகளைப் பார்த்து, ஒரு வரைபடத்தை அல்லது தரவு அட்டவணையை உருவாக்கவும்

Illustration of someone installing and using a sensor to collect information

5. ட்ரோன் மூலம் பதிவுசெய்தல்

எந்தப் பகுதிகள் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகும் அல்லது இல்லை அல்லது காடுகளின் மாற்றங்கள் போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களைப் புரிந்துகொள்வது நிலத்தில் இருந்து கடினமாக இருக்கும். மேலே இருந்து படங்களை சேகரிக்க ஒரு வான்வழி ட்ரோனைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மாற்றங்களின் இடஞ்சார்ந்த அளவு பற்றிய பயனுள்ள தகவல்களைத் தரலாம். ட்ரோன் மூலம் சேகரிக்கப்பட்ட படங்களை வரைபடங்களை உருவாக்க கணினி மென்பொருளுடன் பகுப்பாய்வு செய்யலாம். மாதத்திற்கு ஒருமுறை வருடத்திற்கு ஒருமுறை போன்று  ஒரே  காலப்பகுதியில் அதே பகுதி மீண்டும் மீண்டும் சுற்றி வந்தால், சுற்றுச்சூழலில் இடஞ்சார்ந்த மாற்றங்களை பதிவு செய்யலாம்.

A photo of someone launching a fixed wing drone

பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:

  1. ட்ரோன் மேலே பறக்க விரும்பும் பகுதியை கணினியைப் பயன்படுத்தி ஒரு விமானத் திட்டத்தை திட்டமிடவும்
  2. ட்ரோனை இயக்கவும்
  3. ட்ரோனில் இருந்து படங்கள் அல்லது தரவைப் பதிவிறக்கவும்
  4. முடிவுகளைப் பார்த்து ஒரு வரைபடத்தை உருவாக்கவும்

Illustration of someone programming and using a drone to collect information

6. செயற்கைக்கோள் மூலம் பதிவு

ட்ரோனுக்கு ஒத்த வழியில், செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்துவது மேலே இருந்து இடஞ்சார்ந்த சுற்றுச்சூழல் மாற்றங்களைப் புரிந்துகொள்ள உதவும். செயற்கைக்கோள் படங்கள் மிகப் பெரிய பகுதிகளை உள்ளடக்கியது, எனவே பொதுவாக 1 கிமீ அளவில் அல்லது 2 கிமீ அளவில் பதிவு செய்யும் ட்ரோன்களைப் போலல்லாமல், செயற்கைக்கோள் படங்கள் பெரும்பாலும் ஒரு பகுதியின் முழுமையான உள்ளடக்கப் பரப்பை வழங்குகிறது. சுற்றுச்சூழல் மாற்றத்தைக் கண்டறிய செயற்கைக்கோள்களைப் பயன்படுத்துவதில் உள்ள ஒரே கட்டுப்பாடு என்னவென்றால், ஒரு செயற்கைக்கோள் சேகரிக்கும் படங்கள் நிலையானதாக இல்லை, ஏனெனில் செயற்கைக்கோள் ஒரு பகுதியில் கடந்து செல்லும் அதிர்வெண்ணைப் பொறுத்தது. ட்ரோன்களைப் போலவே செயற்கைக்கோள்கள் காலப்போக்கில் இடஞ்சார்ந்த மாற்றங்களின் வரைபடங்களை உருவாக்க பயன்படுத்தப்படலாம்.

பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:

  1. ஒரு செயற்கைக்கோளிலிருந்து தரவைப் பதிவிறக்கவும்
  2. தரவை பகுப்பாய்வு செய்ய கணினி மென்பொருளைப் பயன்படுத்தவும்
  3. முடிவுகளைப் பார்த்து ஒரு வரைபடத்தை உருவாக்கவும்

Illustration of someone using a satellite to collect information

7. சமூக சுற்றுச்சூழல் அறிவை சேகரித்தல்

சுற்றுச்சூழல் மாற்றத்தைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ள நுட்பம், குறிப்பாக கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, ​​ஒரு பகுதியில் வாழும் மக்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதாகும். வெள்ளத்தின் தன்மை எப்படி மாறியது, வனவிலங்குகளின் எண்ணிக்கை எப்படி மாறியது மற்றும் நில முகாமைத்துவ நடைமுறைகள் எப்படி மாறியது போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களை மக்கள் பெரும்பாலும்  அறிவார்கள். மக்களை நேர்காணல் செய்வது, எடுத்துக்காட்டாக, வெள்ளம் எவ்வளவு ஆழமாக இருக்கும், வெள்ளம் பொதுவாக ஏற்படும் போது, ​​உண்மையில் எந்த பகுதிகளில் ஏற்படும் போன்ற மிகவும் பெறுமதியான தகவல்களை பெற  முடியும். இந்தத் தகவலைச் சேகரிப்பது, உங்கள் சொந்த அவதானிப்புகள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் மாற்றங்களின் அடிப்படையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி முழுமையாக அறிய உதவுகிறது.

Photo of wetland landscape with person working in it collecting plants

பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:

  1. ஒரு கேள்விக்கொத்தைத் தயார் செய்யவும்
  2. மக்களை நேர்காணவும்
  3. கணினியில் தகவலை உள்ளிடவும்
  4. முடிவுகளைப் பார்த்து தரவு அட்டவணை, விளக்கம் அல்லது வரைபடத்தை உருவாக்கவும்

Illustration of someone talking to people to collect community knowledge


Now, after having finished this book, make sure to go back to the main page and complete activity 2.