Skip to main content

சமூகக் கண்காணிப்புத் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது

Site: OpenLearn Create
Course: 5 சமூகக் கண்காணிப்பு Tamil
Book: சமூகக் கண்காணிப்புத் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது
Printed by: Guest user
Date: Thursday, 19 September 2024, 6:11 AM

1. சமூகக் கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்க நீங்கள் பின்வரும் படிமுறைகளைச் செய்ய வேண்டும்

சமூக ஈடுபாடு (அலகு 1), பங்கேற்பு ஈடுபாடு நுட்பங்கள் (அலகு 2) மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு நுட்பங்கள் (அலகு 4) பற்றிய புரிதலை நீங்கள் ஏற்கனவே பெற்றிருப்பீர்கள். வெற்றிகரமான சமூகக் கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்குவதில் இவை அனைத்தும் முக்கியமானவை.

Illustration of a community being worried about fish numbers, planning and evaluating a survey

1 & 2. மீன்களின் எண்ணிக்கை குறைவடைவதுடன் தொடர்புடைய ஒரு பிரச்சனையை சமூக உறுப்பினர்கள் அடையாளம் காண்கின்றனர்
    3. என்ன செய்வது என்று கலந்துரையாட சமூகக் கூட்டம் நடத்தப்படுகிறது
      4. சமூகம் அவர்களுக்கு வெளிப்புற உதவி தேவையா இல்லையா என்பதை முடிவு செய்கிறது
        5. என்ன கண்காணிப்பு நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை சமூகம் தீர்மானிக்கிறது
          6. தங்களுக்கு எந்த வகையான வெளியீடுகள் தேவை என்பதை சமூகம் தீர்மானிக்கிறது

          Illustration of a community being worried about fish numbers, planning and evaluating a survey


          7. கண்காணிப்புத் திட்டத்தை அங்கீகரிப்பதற்கான சமூகக் கூட்டம்

          8. சமூகக் குழு மாதிரிகளை சேகரிக்கிறது

          9. சமூகம் எவ்வாறு கண்காணிப்பு நடைபெற்றது மற்றும் தொடர்ந்து கண்காணிப்பதை எவ்வாறு மேம்படுத்துவது என்று கலந்துரையாடுகின்றது


          2. திட்டம்

          1. சமூக ஆலோசனை - சமூகம் புரிந்து கொள்ள விரும்பும் சுற்றுச்சூழல் சவாலைப் பற்றி கலந்துரையாடவும் அடையாளம் காணவும், அதாவது கண்காணிக்கப்பட வேண்டியவற்றில் சமூகத்தாலான ஒருமித்த கருத்தை உருவாக்குவதற்கு உங்கள் சமூகத்திலிருந்து முடிந்தவரை பல பிரதிநிதிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்துங்கள் (அலகு 4 ஐப் பார்க்கவும்). நீர் மாசுபாடு, வெள்ளம் அல்லது மீன் இனங்களின்  இழப்பு ஆகிய உதாரணங்கள் இதில் அடங்கும்.

          2. சமூக ஈடுபாடு - சுற்றுச்சூழல் சவாலின் முன்னோக்குகளைப் பெற மற்றும் சமூகத் திட்டக் குழுவின் ஒரு பகுதியாக யார் ஈடுபட விரும்புகிறார்கள், கண்காணிப்பு மற்றும் தரவுப் பகுப்பாய்வு மற்றும் அறிக்கையிடலில் யார் ஈடுபட விரும்புகிறார்கள்   என்பதை அறிய , செயலமர்வுகள், நேர்காணல்கள், கவனக் குழுக்கள் (அலகு 1 ஐப் பார்க்கவும்) மூலம் சமூக ஈடுபாட்டை மேற்கொள்ளுங்கள்.

          Photo of community members of all ages and genders sat around tables holding a meeting

          3. சமூக திட்டக் குழு - தேவையான ஆர்வமும் அதற்கு உரிய திறன்களும்   உள்ள சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களைக் கொண்டு ஒரு சமூகத் திட்டக் குழுவை அமைக்கவும். இந்த குழுவின் பங்கு கண்காணிப்புத் திட்டத்தை மேம்படுத்துவதும் மேற்பார்வை செய்வதும் ஆகும். ஆர்வமுள்ள சமூக உறுப்பினர்களுக்குப் பொறுப்பை ஏற்கத் தேவையான திறன்கள் இல்லையென்றால், அந்த நபர்களுக்குப் பயிற்சி அளிக்கலாம். திட்டக் குழுவில் சமூகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் இருப்பது முக்கியம், இதனால் முழு சமூகமும் ஈடுபடுவதாக உணர்கிறது. திட்டக் குழு பின்னர் கீழேயுள்ள படிமுறைகளைப் பின்பற்றி அலகு 4 இல் விரிவாக விவரிக்கப்பட்டுள்ள கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்க ஒன்றாக வேலை செய்ய வேண்டும்.

          4. வெளிப்புற ஆதரவு - கண்காணிப்பு திட்டத்தின் வடிவமைப்பின் போது உங்கள் சமூகத்திற்கு வெளிப்புற நிபுணரின் உள்ளீடு தேவையா என்பதை மதிப்பாய்வு செய்யவும்? இது நிகழும்போது, ​​சமூகம் மற்றும் விஞ்ஞானிகள், சமூகத்திற்கு வெளியே இருந்து, கண்காணிப்பை வழங்க ஒன்றாக வேலை செய்கிறார்கள். உதாரணமாக, ஒரு சமூகம் ஆற்றில் உள்ள நீரின் தரம் என்ன என்பதை அறிய வேண்டுமென்றால் என்ன அளவிட வேண்டும், எப்படி தண்ணீர் மாதிரிகளை சேகரிக்க வேண்டும் மற்றும் எப்படி பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்பதை உள்ளூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவரிடமிருந்து இதனை கேட்டு தெரிந்து கொள்ளலாம், அதனால் அவர்கள் தண்ணீரின் தரத்தை அளவிடுவது எப்படி என்பதை புரிந்து கொள்ள முடியும், மேலும் அவர்கள் விஞ்ஞானி மற்றும் மாணவர்களுடன் இணைந்து கண்காணிப்பை மேற்கொள்ளக் கூடியதுமாகவும் இருக்கும் .

          5. எந்த நுட்பங்கள்? - தரவைச் சேகரிக்க மிகவும் பொருத்தமான நுட்பம் அல்லது நுட்பங்களை அடையாளம் காணவும் - இது உங்களுக்கு  கிடைக்கும் நேரம், வளங்கள் மற்றும் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான பட்ஜெட்டைப் பொறுத்தது. இது அலகு 4 இல் மேலும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

          6. யார் தரவைச் சேகரிப்பார்கள்? - கண்காணிப்புக் குழுவைத் தீர்மானிக்கவும். யார் உண்மையில் கண்காணிப்பைச் செய்வார்கள் அதாவது தரவைச் சேகரிப்பது யார் என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம். சமூகத்தை ஈடுபடுத்த இது ஒரு வாய்ப்பு ஆனால் நீங்கள் பின்வருவனவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்:

          • ஒரு சுற்றுச்சூழல் தரவைச் சேகரிக்க சமூக உறுப்பினர்களைப் பயன்படுத்துவது சிறந்த அணுகுமுறையா? தகவல் சேகரிப்பை நடத்த சமூக உறுப்பினர்களுக்கு தகுந்த திறன்களும்  அனுபவமும் உள்ளதா என்பதை கருத்தில் கொள்வது அவசியம். ஆர்வமுள்ள சமூக உறுப்பினர்களுக்கு கண்காணிப்பை மேற்கொள்வதற்கு தேவையான திறன்கள் இல்லையென்றால், அந்த நபர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.
          • கண்காணிப்பு/தரவு சேகரிப்பு குழுவில் சமூகம் முழுவதிலுமிருந்து பிரதிநிதிகள் இருப்பது முக்கியம், இதனால் முழு சமூகமும் கண்காணிப்பில் ஈடுபட்டதாக உணர்கிறது.
          7. தரவை எப்போது, ​​எங்கே சேகரிக்க வேண்டும்? - சமூகக் கண்காணிப்புக் குழு எப்போது, ​​எங்கே தரவைச் சேகரிக்கும் என்பதைத் திட்டமிடுங்கள்.

          8. கண்காணிப்புத் திட்டம் - நீங்கள் எவ்வாறு தரவைச் சேகரிக்கப் போகிறீர்கள், யார் தரவைச் சேகரிக்கப் போகிறீர்கள், எப்போது தரவைச் சேகரிக்கப் போகிறீர்கள், எங்கு தரவைச் சேகரிக்கப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானித்த பிறகு, ஒரு  தற்காலிக கண்காணிப்புத் திட்டம் உங்களிடம் இருக்கும்.

          9. சமூக ஒப்பந்தம் – கண்காணிப்பு நிகழ்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டவுடன், தரவு சேகரிப்பைத் தொடங்குவதற்கு முன் திட்டத்தைப் பற்றி  அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய சமூகத்துடன் இறுதி ஆலோசனையை மேற்கொள்ளுங்கள்.


          3. செயற்படுதல் அண்ட் அவதானியுங்கள்

          செயற்படுதல்

          Photo of community members collecting a water sample from a river

          10. தரவு சேகரிப்பைக் கண்காணித்தல் - ஒப்புக்கொண்ட திட்டத்திற்கு தரவுகளை சேகரிக்கத் தொடங்குங்கள்.

          அவதானியுங்கள்

          11. அவதானிப்பு - கண்காணிப்பின் போது அது எப்படி நடக்கிறது என்பதை அவதானித்து, இதை ஒட்டிய அவர்களது அனுபவங்கள் என்ன என்பதை கண்காணிப்புக் குழுவிடம் கேளுங்கள். இதை சமூகத்தின் மற்ற உறுப்பினர்கள் அல்லது கண்காணிப்புக் குழுவினர் தாங்களாகவே மேற்கொள்ளலாம்.

          12. சமூகத் தொடர்பு - தரவைச் சேகரிக்கும் சமூக கண்காணிப்புக் குழுவுக்கு சமூக திட்டக் குழு தொடர்ந்து கருத்து தெரிவிப்பதை உறுதிசெய்வதுடன், கண்காணிப்புத் திட்டம் எவ்வாறு முன்னேறுகிறது என்பதை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


          Now, after having finished this book, make sure to go back to the main page and complete activity 2.