| Site: | OpenLearn Create |
| Course: | 6 சமூக ஈரநில முகாமைத்துவம் Tamil |
| Book: | சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை எப்படி அடையாளம் காண்பது |
| Printed by: | Guest user |
| Date: | Friday, 6 February 2026, 8:24 PM |
இந்தப் பயிற்சி அலகு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை அடையாளம் காண படிப்படியான வழிமுறைகளை வழங்கும் நடவடிக்கைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சமூக ஈடுபாடு (அலகு 1) மற்றும் பங்கேற்பு ஈடுபாட்டு நுட்பங்கள் (அலகு 2) பற்றி நீங்கள் ஏற்கனவே பெற்றிருக்கும் புரிதலிலிருந்து இது தொடர்கிறது உருவாக்குகிறது. இவை அனைத்தும் சமூக முகாமைத்துவத்துக்கான சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை அடையாளம் காண்பதில் முக்கியமானவை.
1 ஆவது மற்றும் 2ஆவது செயற்பாடுகள் நீங்களும் அதன் பகுதியாக இருக்கும் அல்லது பணிபுரியும் சமூகத்தை ஈடுபடுத்த பயன்படுகிறது மற்றும் 3 முதல் 5 வரையிலான செயற்பாடுகள் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணவும் மற்றும் இந்த சவால்களை சமாளிக்க சமூகம் ஏற்கனவே பயன்படுத்தும் தீர்வுகளை முன்னிலைப்படுத்தவும் உள்ளன. இந்த செயற்பாடுகள் அனைத்தும் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் முடிந்தவரை பலருடன் நேருக்கு நேர் செய்யப்படுகின்றன. உங்களால் இதைச் செய்ய முடியாவிட்டால், சமூக உறுப்பினர்களுடன் இணைய வழியாகவோ அல்லது தொலைபேசியிலோ இணையலாம்.
சமூகத்துடன் நடக்கப் போகும் சமூக ஈடுபாட்டை அறிமுகப்படுத்துவது முக்கியம் மற்றும் பிற்கால நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுவை சமூகம் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் ஒரு சமூக உறுப்பினராக இருந்தால், ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள் அல்லது உங்கள் சக சமூக உறுப்பினர்களுடன் நேரில், இணையவழியாக அல்லது பின்வருவனவற்றை விளக்கி தொலைபேசி மூலம் பேசுங்கள். அலகு 2 இல் ஒரு கூட்டத்தை எப்படி ஏற்பாடு செய்வது என்பது பற்றிய மேலதிக தகவலைப் பார்க்கவும்.
சமூக ஈடுபாடு செயன்முறைக்கு அடிப்படையான முக்கிய நோக்கங்கள், கருத்துகள் மற்றும் நுட்பங்களை முன்வைக்க; செயற்பாடுகளின் திட்டத்தை விளக்க; சமூக குழுவைத் தேர்ந்தெடுக்க.
1 முதல் 2 மணி நேரம்
கட்டம் 1
சமூக ஈடுபாடு மற்றும் சமூக நம்பகத்தன்மை மற்றும் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை நீங்கள் கற்றுக்கொண்டவற்றிலிருந்து அறிமுகப்படுத்தவும் மற்றும் அலகு 1 இலிருந்து ஆதாரங்களைப் பயன்படுத்தவும்.
கட்டம் 3
பிற்கால நடவடிக்கைகளில் செயற்படும் சமூக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். குறைந்தது 4 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் ஆனால் ஒரு சிறந்த எண்ணிக்கை 10. இந்த மக்கள் வயது, பாலினம், இனப் பின்னணி போன்றவற்றின் அடிப்படையில் முழு சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவது முக்கியம்.
செயற்பாடு 2 சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய பங்கேற்பு மற்றும் காட்சி முறைகளின் வரம்பை சமூக குழுவுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது எப்போது, எப்படி சமூகம் நிறுவப்பட்டது மற்றும் காலப்போக்கில் அது எப்படி வளர்ந்தது போன்ற சமூக வரலாற்றின் விசாரணையின் மூலம் செய்யப்படுகிறது. ஒரு கூட்டம் சாத்தியமில்லை என்றால் இதை சமூகக் குழுவின் கூட்டத்தில் அல்லது இணைய வழியாக ஏற்பாடு செய்யலாம்.
பங்கேற்பு வரைதல் மற்றும் ஸ்டோரிபோர்டிங்கின், (இயக்கப்பட தொடர் சித்திரங்கள்) முக்கிய கொள்கைகளை எடுத்துக்காட்டவும் நடைமுறைப்படுத்தவும்: கருத்துக்களை வெளிப்படுத்தவும் மற்றும் வரைபடங்கள் மூலம் ஒரு கதையைச் சொல்லவும்; மற்றவர்களுடன் பொருட்களை பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு.
2 முதல் 3 மணிநேரம்
கட்டம் 1
அலகு 2 இல் இருந்து சமூகத்திற்கு உதாரணங்கள் கொடுத்து இயக்கப்பட தொடர் சித்திரங்கள் (storyboarding) கருத்தை அறிமுகப்படுத்துங்கள்.பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் சொல்லப்போகும் கதையை அறிமுகப்படுத்துங்கள். சமூகக் குழுவினர் சமூகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதே இதன் நோக்கம்.
கட்டம் 3
கருத்துக்களை கலந்துரையாடுங்கள். உங்களிடம் போதுமான நபர்கள் இருந்தால், எண்ணிக்கையைப் பொறுத்து சமூகக் குழுவை 4 அல்லது 5 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரித்து, சமூகத்தின் வரலாற்றை ஆராய குழுவிற்குள் ஒருவருக்கொருவர் நேர்காணல் செய்யச் சொல்லுங்கள்.
கட்டம் 4
ஸ்டோரிபோர்ட் பெட்டிகளை வரையவும். ஒரு காகிதத் துண்டில் அல்லது இணையத்தில் பெட்டிகள் வரைய (துவக்கத்தில் அதற்கு 4-6 பெட்டிகள் இருக்க முடியும்) குழுக்களுக்குச் சொல்லுங்கள். குறிப்பு- 4-6 பெட்டிகளை வரைவதற்குப் பதிலாக கதையின் கட்டங்கள் தனிப்பட்ட காகிதத் துண்டுகளில் அல்லது ஸ்டிக்கி நோட்களில் வரைந்து சுவரிலும் அதேபோன்று இணைய கூட்ட மென்பொருட்களைப் பயன்படுத்தி செட் பொக்ஸ்களில் (chat boxes) இடலாம். இந்த முறையானது ஊடாட்ட மாற்றங்களுக்கு கொஞ்சம் நெகிழ்வுத்த்தன்மையை வழங்குவதடன், கதையை வளர்த்துச் செல்கிறது.
கட்டம் 5
சமூக வரலாற்றை பெட்டிகளில் வரையவும். ஒவ்வொரு குழுவிடமும் "உங்கள் சமூகத்தின் கதையை நீங்கள் எவ்வாறு தொடங்குவீர்கள்?" என்று கேளுங்கள் முதல் பெட்டியில் அந்த முதல் யோசனையை வரையச் சொல்லுங்கள். கதையின் அடுத்த கட்டம் என்ன என்பதை அவர்களிடம் கேளுங்கள், இரண்டாவது பெட்டியில் அதை வரையச் சொல்லுங்கள். ஒவ்வொரு குழுவிலும் சமூகத்தின் வரலாற்றில் தங்கள் கதை முடிவடையும் வரை தொடரவும்.
கட்டம் 6
குழு விளக்கக்காட்சிகள். மற்றொரு குழுவிடம் தங்கள் ஸ்டோரிபோர்டை விளக்குமாறு குழுக்களிடம் கேளுங்கள்.
கட்டம் 7
ஸ்டோரிபோர்ட் மாற்றங்கள். குழுக்கள் விரும்பினால், பரிந்துரைகள் அல்லது மாற்றங்களை ஒருங்கிணைக்க ஸ்டோரிபோர்டில் மாற்றங்களைச் செய்யுங்கள்.
கட்டம் 8
பங்கேற்பு வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் நேருக்கு நேர் அல்லது இணையத்தில் சந்தித்தால் இதை அமர்வின் முடிவில் அல்லது தனி அமர்வாக செய்யலாம்.
கட்டம் 9
அலகு 2. இல் காட்சிப்படுத்தப்பட்ட மொபைல்கள் அல்லது டேப்லெட்களில் வீடியோ பயன்முறையை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிமுகப்படுத்துங்கள். எப்படி வீடியோ கிளிப்களை எடுப்பது என்பதில் சமூகக் குழுவை பயிற்றுவிப்பதை ஆரம்பியுங்கள்.
கட்டம் 10
சமூக வரலாற்றின் படப்பிடிப்பு. சமூகக் குழுவினரை அவர்களின் கதை வரலாற்றைக் காட்ட அவர்களின் சமூக வரலாற்றைப் படமாக்கச் சொல்லுங்கள். இந்த செயற்பாடு கிடைக்கக்கூடிய நேரத்தை விட நீண்டதாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், ஆனால் அலகு 2 இல் காட்டப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான பரீட்சயத்தை சமூகக் குழுவுக்கு வழங்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.
கட்டம் 11
படத்தை தொகுத்தல் எப்படி என்பதை அறிமுகப்படுத்தி, அவர்களின் சமூக வரலாற்றில் அவர்களது வீடியோக்களை தொகுக்குமாறு சமூக அணியிடம் கேளுங்கள்.
கட்டம் 12
சமூக குழுவுடன் கலந்துரையாடல். அவர்களது சமூக வரலாற்றை பதிவு செய்ததில் சமூக அணி நன்றாக செய்தது என்ன நன்றாக செய்யாதது என்ன என்பதை பின்னூட்டம் செய்ய வாய்ப்பு கொடுங்கள்.
செயற்பாடு 3 சமூக நிலைபேற்றுத்தன்மை என்ற கருத்தை அறிமுகப்படுத்துகிறது மற்றும் அலகு 1 இல் நீங்கள் கற்றது போல் உங்கள் சமூகத்தில் சமூக நிலைபேற்றுத்தன்மையை ஆராய்கிறது
சமூக நிலைபேற்றுத்தன்மை பற்றிய : கருத்தை அறிமுகப்படுத்துதல்; தற்போதைய சவால்களைச் சமாளிக்க உதவும் சமூக அறிவும் அதனுடன் தொடர்புடைய நடைமுறைகளும் எவ்வாறு உருவாகியுள்ளன என்பதை ஆராய்தல்
1 முதல் 2 மணிநேரம்
கட்டம் 1
அலகு 1 இல் நீங்கள் கற்றுக்கொண்ட சமூக நிலைபேற்றுத்தன்மை பற்றிய கருத்தை சமூக குழுவுக்கு அறிமுகப்படுத்துங்கள். சமூக நிலைபேற்றுத்தன்மையின் ஆறு வெவ்வேறு பிரிவுகளை விளக்கவும், அவை ஒட்டுமொத்த சமூக நிலைபேற்றுத்தன்மைக்கு எவ்வாறு பங்களிக்கின்றன என்பதை விளக்கவும்கட்டம் 2
எண்ணிக்கையைப் பொறுத்து சமூகக் குழுவை 4 அல்லது 5 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும்.கட்டம் 3
சமூக நிலைபேற்றுத்தன்மையை ஆராயுங்கள். ஒவ்வொரு குழுவையும் (அலகு 1 இலிருந்து) சமூக நிலைபேற்றுத்தன்மை வரைபட எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தச் சொல்லுங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் தங்கள் சமூகத்தின் சூழ்நிலைக்கு பொருத்தமானதா இல்லையா என்பதை அடையாளம் காணச் சொல்லுங்கள். ஒரு மூலோபாயம் பொருந்தவில்லை என்றால், அது அகற்றப்பட வேண்டும். ஏதேனும் உத்திகள் இல்லையா, சேர்க்க வேண்டுமா இல்லையா என்பதை குழுக்கள் விவாதிக்கச் செய்யுங்கள்.கட்டம் 4
4 நெடுவரிசைகள் மற்றும் உத்திகள் உள்ள வரை வரிசைகளுடன் ஒரு அட்டவணையை வரையவும். ஒவ்வொரு குழுவையும் முதல் நெடுவரிசையில் உள்ள உத்திகளை பட்டியலிடச் செய்யுங்கள். ஒவ்வொரு மூலோபாயமும் சமூக அறிவைப் பயன்படுத்துகிறதா இல்லையா என்பதைப் பற்றி விவாதிக்கவும். அவர்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் இரண்டாவது பத்தியில் பதிவு செய்யவும்.கட்டம் 5
இரு குழுக்களும் தங்கள் மூலோபாய பட்டியல்களை மற்ற குழுவிடம் சமர்ப்பிக்கவும். ஒருங்கிணைந்த பட்டியலை ஒப்புக்கொள்ளவும் கூறுங்கள்கட்டம் 6
ஒவ்வொரு சமூக குழு உறுப்பினரையும் அவர்களுடைய கருத்துப்படி, மூன்றாவது நெடுவரிசையில் மூலோபாயத்திற்கடுத்து அடையாளமிட்டு 5 மிக முக்கியமான உத்திகளை தரவரிசைப்படுத்துமாறு கேளுங்கள்.சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதுடன், உங்கள் சமூகம் தற்போது பயன்படுத்தும் எந்த உத்திகள் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்பதை அடையாளம் காட்டுகிறது.
சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்துதல்; சமூகத்தால் அடையாளம் காணப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளின் எடுத்துக்காட்டுகளை வழங்குதல்
சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளைப் பகிர்தலின் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டுதல்
1 மணிநேரம்
கட்டம் 1
அலகு 1 இல் வழங்கப்பட்ட தகவல்களிலிருந்து சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்றால் என்ன என்பதை அறிமுகப்படுத்துங்கள்.கட்டம் 2
எந்த உத்திகள் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்பதை மதிப்பீடு செய்யவும். செயற்பாடு 3 ல் இருந்து ஒப்புக்கொள்ளப்பட்ட 'முக்கியமான' உத்திகள் எந்த அளவிற்கு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்பதை நிறுவவும். அலகு 1 -ல் கொடுக்கப்பட்டுள்ள 'சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்னென்ன' என்ற எளிய சரிபார்ப்புப் பட்டியலைப் பயன்படுத்தவும். பின்வரும் குழுக்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு மூலோபாயமும் ஒரு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வா என்பதை விவரிக்க சமூக குழு உறுப்பினர்களைக் கேளுங்கள்: ஆம், இல்லை, ஒருவேளை இருக்கலாம். அவர்களின் பதிலை நான்காவது நிரலில் இடவும் .
கட்டம் 3
சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் வீடியோக்களை அறிமுகப்படுத்துங்கள். சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் வீடியோ எடுத்துக்காட்டுகளில் 1 அல்லது 2 ஐக் காட்டி, சமூக குழு உறுப்பினர்களை பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளச் சொல்லுங்கள்:
கட்டம் 4
சமூக குழு உறுப்பினர்களை உத்திகளை மறுபரிசீலனை செய்யச் சொல்லுங்கள் மற்றும் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் எவை என்று ஒன்றாக விவாதிக்கவும். பதில்களை நான்காவது நிரலில் இற்றைப்படுத்தவும்.
கட்டம் 5
குழுவினருக்கு அவர்களின் முதல் இரண்டு முக்கியமான சமூகத்திற்கு சொந்தமான தீர்வுகளைத் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள் மற்றும் பங்கேற்பு வீடியோ மூலம் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளைப் பதிவு செய்யத் திட்டமிடுங்கள். நீங்கள் நேருக்கு நேர் அல்லது இணைய வழியாக சந்தித்தால், இதை ஒரு தனி அமர்வாக அல்லது சமூக குழுவுக்கு நேரம் இருக்கும்போது செய்யலாம்.

கட்டம் 6
சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை நிறைவேற்றுவதற்கான படிகளை மற்றவர்களுக்கு விளக்க ஒரு ஸ்டோரிபோர்டை உருவாக்குங்கள்.
கட்டம் 7
சமூகத்திற்கு சொந்தமான தீர்வின் படப்பிடிப்பு. சமூகக் குழுவினரை அவர்களின் ஸ்டோரிபோர்டைத் தொடர்ந்து அவர்களின் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வைப் படமாக்கச் சொல்லுங்கள்.
கட்டம் 8
படத்தை தொகுக்கவும். சமூகக் குழுவிடம் அவர்களின் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளின் வீடியோக்களைத் திருத்தச் சொல்லவும்.
கட்டம் 9
சமூகம் சொந்தமான தீர்வுகளை பரந்த சமூகத்துடன் திரையிடவும், ஒரு சந்திப்பு அல்லது இணைய வழியாக திரைப்படங்களைப் பற்றிய அவர்களின் கருத்துக்களைப் பெறுங்கள். அவர்கள் நிலைமையை சரியாக பிரதிபலிக்கவில்லை என்று சமூகம் உணர்ந்தால் அவற்றை உகந்தவாறு தொகுக்கவும்.
செயற்பாடு 5 சமூகம் இப்போது மற்றும் எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காணவும் மற்றும், இதற்கான தீர்வுகளை அடையாளம் காணவும் கவனம் செலுத்துகிறது

இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் சமூகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களை கலந்துரையாடி அடையாளம் காண்பது.
2 மணி நேரம்
கட்டம் 1
எண்ணிக்கையைப் பொறுத்து சமூகக் குழுவை 4 அல்லது 5 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரித்து, தற்போதைய மற்றும் எதிர்காலச் சவால்கள் அல்லது சமூகம் எதிர்நோக்கும் மாற்றங்களை விவாதிக்கச் சொல்லுங்கள்.கட்டம் 2
சவால்களைப் பட்டியலிட்டு, ஒவ்வொரு குழுவையும் தங்கள் பட்டியல்களை முன்வைக்கச் சொல்லுங்கள், பின்னர் பட்டியல்களை ஒன்றிணைக்கவும்.
கட்டம் 3
ஒவ்வொரு சமூக குழு உறுப்பினரையும் மக்களின் வாழ்க்கை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்தின் அடிப்படையில் சவால்களின் முழு பட்டியலையும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தச் சொல்லுங்கள். ஒவ்வொரு சவாலின் முக்கியத்துவத்தையும் 1 (முக்கியமல்ல) முதல் 3 (முக்கியமானவை) வரை தரும்படி அவர்களிடம் கேளுங்கள்.
கட்டம் 4
மிக முக்கியமான சவால்கள் சமூகத்தின் சக்திக்கு வெளியே உள்ளதா அல்லது மற்றவர்களின் உதவியுடன் சமூகத்தால் தீர்க்கப்பட முடியுமா என்பதை ஒவ்வொரு குழுவும் கலந்துரையாட செய்யுங்கள். கீழே உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள் அட்டவணையில் உள்ள முதல் 4 நிரல்களை நிரப்பச் சொல்லுங்கள்.
கட்டம் 5
அடையாளம் காணப்பட்ட சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் ஏதேனும் எதிர்கால சவால்கள் அல்லது மாற்றங்களைச் சமாளிக்க உதவுமா என்று விவாதிக்கவும். கீழேயுள்ள அட்டவணையில் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் நிரலை நிரப்பவும்.
கட்டம் 6
செயற்பாடு 3, கட்டம் 3 இல் உருவாக்கப்பட்ட சமூக நிலைபேற்றுத்தன்மை வரைபடங்களை மீண்டும் பார்க்கவும். சமூகக் குழு முக்கியமானதாக கருதாத மற்றும் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் அல்லாத உத்திகளைப் பாருங்கள்.
எதிர்காலத்தில் சமூகத்திற்கு ஏற்படும் சவால்களை சமாளிக்க இந்த உத்திகளில் ஏதேனும் மேம்படுத்தப்பட வேண்டுமா அல்லது மாற்றப்பட வேண்டுமா? கீழே உள்ள அட்டவணையில் மூலோபாய நிரலை நிரப்பவும்.
கட்டம் 7
சமூகத்திற்கான தற்போதைய மற்றும் எதிர்கால சவால்களை விவாதிக்க ஒரு சமூகக் கூட்டத்தை நேருக்கு நேர் அல்லது இணைய வழியாக நடத்தவும் மற்றும் சமூகம் தற்போது எந்த உத்திகளை மாற்ற வேண்டும் அல்லது மேம்படுத்த வேண்டும் என்று விவாதிக்கவும். பின்னூட்டம் மற்றும் ஆலோசனைகளுக்கு சமூக உறுப்பினர்களிடம் கேளுங்கள்.
கட்டம் 8
சமூகம் எதிர்கொள்ளும் சவால்களின் வீடியோவை உருவாக்கவும்.
