சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள்
2. சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை அறிமுகப்படுத்துதல்
2.1. 'சிலி நாட்டின் உருளைக்கிழங்கு உவமை'
'சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள்' என்பதன் ஒரு உதாரணம், இப்போது பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலரும் சமூக ஆர்வலருமான போல் ஹாக்கனால் (Paul Hawken) விளம்பரப்படுத்தப்பட்ட 'சிலி நாட்டு உருளைக்கிழங்கின் உவமை'. ஆரி டி கியஸ் (Arie de Geus) இந்த உவமையை இவ்வாறு விவரிக்கிறார்:
'சிலி நாட்டின் உருளைக்கிழங்கு உவமை'
சிலி நாட்டின் பொருளாதாரம் சிக்கலில் இருந்த ஒரு காலம் இருந்தது, ஏனென்றால் அங்கு ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டது, அதனால் பொருளாதாரம் செயலிழந்தது. காரணம் தெளிவாகத் தெரிந்தது: சிலி இனி தனது சொந்த உணவை உற்பத்தி செய்ய முடியாது மற்றும் இறக்குமதியை அதிகளவில் நம்ப வேண்டியிருந்தது. அமெரிக்கா உதவிக்கரம் நீட்ட முடிவு செய்து பிரச்சனையை ஆய்வு செய்ய விவசாய நிபுணர்கள் குழுவொன்றை அங்கு அனுப்பியது.
அக்குழு சாண்டியாகோவுக்குப் பறந்து பின்னர் ஆண்டிஸ் மலைப்பகுதிக்குச் சென்றது. ஆண்டிஸ் தான் உருளைக்கிழங்கு உருவான இடம்; சிலியில் இன்னும் அதுவே பிரதான உணவாக விளங்குகிறது. உருளைக்கிழங்கானது மலைப்பகுதிகளில் கணிசமான உயரத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ளது.
அமெரிக்க நிபுணர்கள் சென்று உருளைக்கிழங்கு வயல்களைப் பார்வையிட்டனர். வயல்கள் செங்குத்தான மலைப்பகுதிகளில் இருந்தன. அவை மிகவும் ஒழுங்கற்ற வடிவங்களைக் கொண்டிருந்தன மற்றும் மிகவும் கற் பகுதிகளாகவும் இருந்தன. ஒவ்வொரு வயலிலும், 10 அல்லது அதற்கு மேற்பட்ட உருளைக்கிழங்கு வகைகள் வளர்வதை நிபுணர்கள் கண்டறிந்தனர். வட்ட உருளைக்கிழங்கு மற்றும் நீண்ட உருளைக்கிழங்கு, சிவப்பு, வெள்ளை மற்றும் நீல உருளைக்கிழங்குகள் இருந்தன; மற்றும் நிபுணர்களின் அவதானிப்புப் படி - சில தாவரங்கள் பல உருளைக்கிழங்குகளை உற்பத்தி செய்தன, மற்றவை மிகக் குறைவானவை. இது மிகவும் வினைத்திறன் குறைந்ததாக தோன்றியது.
அறுவடை காலத்தில் கிராமவாசிகள் தோண்டுவதற்கான சரியான முறையைப் பின்பற்றவில்லை என்று நிபுணர்கள் கருதினர் , மேலும் அவர்கள் உருளைக்கிழங்கை சேகரிக்கும் விதத்திலும் கிட்டத்தட்ட 'சோம்பேறியாக' இருப்பதாக கருதினர். சில வயல்களின் மூலைகளில் உள்ள பல செடிகள் கவனிக்கப்படாமல் காடாக வளர விடப்பட்டிருந்தன. அதற்குள் நிபுணர்கள் தங்கள் முடிவுகளை எட்டினார்கள். அவர்களின் கணிப்புகள் சந்தேகத்திற்கு இடமின்றி, விதை உருளைக்கிழங்கை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுப்பது, அதிக விளைச்சலைத் தரும் வகைகளுக்கு மாறுதல் மற்றும் முறையாக களையெடுத்தல் மற்றும் பயிர்களை அறுவடை செய்தல் ஆகியவை வருடாந்த பயிரை குறைந்தது 15%அதிகரிக்கும். வசதியாக இது நாட்டின் உணவு உற்பத்தியில் ஏற்பட்ட பற்றாக்குறையை சமன் செய்தது, ஒரு வேலையை நன்றாக செய்து முடித்த உணர்வோடு அந்த குழு மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றது.
ஆனால் அந்த ஆலோசனை தவறானது. நிபுணர்களின் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறை எப்படி இருந்தாலும், ஆண்டிஸில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருளைக்கிழங்கு பயிரிட்டதை அடிப்படையாகக் கொண்டு திரட்டப்பட்ட உள்ளூர் அனுபவத்துடன் அவர்களால் போட்டியிட முடியவில்லை.
தங்கள் வாழ்நாள் முழுவதும் மலைகளிலேயே இருந்த சிலி கிராமவாசிகள், பலவிதமான பயங்கரமான விடயங்கள் தங்கள் உருளைக்கிழங்குக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்திருந்தனர். வசந்த காலத்தில் தாமதமாக இரவு உறைபனி அல்லது கோடையில் கம்பளிப்பூச்சி தாக்கம் இருக்கலாம். பூஞ்சை காளான் உருளைக்கிழங்கு உருவாகுமுன் அல்லது குளிர்காலம் வருமுன் தாவரங்களை அழிக்கக்கூடும். பல வருடங்களாக, இந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றும் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன.
ஒரு புதிய பிரச்சனை ஏற்படும் போதெல்லாம், கிராமவாசிகள் தங்கள் வயல்களுக்குச் சென்று எல்லா இடங்களிலும் பார்க்கிறார்கள் - மூலைகளிலும், பாறைகளுக்கு அப்பாலும் மற்றும் களைகளுக்கு நடுவிலும் - எஞ்சியிருக்கும் உருளைக்கிழங்கு செடிகளையும் பார்க்கிறார்கள். எஞ்சியிருக்கும் தாவரங்கள் மட்டுமே சமீபத்திய நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. அறுவடை காலத்தில் கிராமவாசிகள் தப்பிப்பிழைத்தவைகளை கவனமாக தோண்டி பெறுமதியான உருளைக்கிழங்கை மீண்டும் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் செல்வார்கள். அவர்களும் அவர்களுடைய குழந்தைகளும் குளிர்காலப் பஞ்சத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும், ஆனால் குறைந்தபட்சம் அடுத்த ஆண்டு உருளைக்கிழங்கு அவர்களிடம் இருந்து ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க முடியும். அவர்கள் ஒரு குறிப்பிட்ட விவசாய நடைமுறைகள் அல்லது ஒரு குறிப்பிட்ட வகை உருளைக்கிழங்கிற்குள் முடக்கப்படவில்லை; அவர்கள் பயிர்ச்செய்கை செய்த விதம் திறன் குறைந்ததாக தோன்றினாலும், அவர்களுடைய அன்றாட நடைமுறையில் பன்முகத்தன்மை பரவியிருக்கிறது, இது எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனுமதிக்கிறது.
ஆரி டி கியூஸ் (1997) த லிவிங் கம்பெனி, ப 177-179