தாக்க மதிப்பீடு

3. கட்டம் 2 - ஒரு இலக்கை அமைத்தல்

எந்தவொரு செயற்பாடும் நடைபெறுவதற்கு முன்பு, சமூகத்தில் ஈடுபடுவதிலிருந்தோ அல்லது ஒரு சமூகத்திற்குச் சொந்தமான தீர்வைச் செயல்படுத்துவதிலிருந்தோ சமூகம் எதை அடைய வேண்டும் என்ற இலக்கை ஒப்புக்கொள்வது முக்கியம்.

உதாரணம் 1 - ஈடுபாட்டின் தாக்கம்

எந்தவொரு ஈடுபாட்டினதும் தாக்கத்தைத் தீர்மானிக்க, ஈடுபாட்டின் குறிக்கோள் என்ன என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, ஈடுபாட்டின் குறிக்கோள்கள் பின்வருவனவாக இருக்கலாம்:

  • சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் அணுகுமுறையின் மேம்பட்ட புரிதல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.
  • முடிவெடுப்பதில் கூட்டாக செல்வாக்கு செலுத்துவதற்கு மேம்பட்ட திறன்.

இந்த இலக்குகளை சமூகக் கூட்டத்தில் அல்லது சமூக உறுப்பினர்களுடன் முறைசாரா கலந்துரையாடல்கள் மூலம் சமூகத்துடன் இணைந்து தீர்மானிக்க முடியும்.

உதாரணம் 2 - சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை செயற்படுத்துதல்

நெற்பயிர்களை முகாமைத்துவம் செய்வது, வெள்ளத்தைக் குறைப்பதற்காக போன்ற சமூகத்திற்குச் சொந்தமான மற்றொரு தீர்வை சமூகம் முயற்சிக்க விரும்பலாம். இதற்கு  நீங்கள் ஒரு சமூகக் கூட்டத்தை நடத்தலாம், அல்லது இது சாத்தியமில்லை என்றால், இதைச் செய்வதற்கான இலக்கை ஒப்புக் கொள்ள முடிந்தவரை சமூகத்தில் உள்ள பலருடன் பேசுங்கள். இந்த உதாரணத்தில், ஒரு குறிக்கோள்: அரிசி விளைச்சலைப் பராமரித்தல் மற்றும் வெள்ளத்தைக் குறைத்தல்.

உதாரணம் 3 - கலாச்சார அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள சமூகத்திற்குச் சொந்தமான தீர்வை நடைமுறைப்படுத்துதல்

இந்த விடயத்தில், குறிப்பாக இளைஞர்களுடன், கலாச்சார அடையாளத்தை இழப்பது பற்றி சமூகம் கவலைப்படலாம். இந்த இழப்பை நிறுத்த இளைஞர்களை கவரும் வகையில் கலாச்சார நிகழ்வுகளை நடத்த ஒரு சமூக கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட குறிக்கோள்: கலாச்சார நிகழ்வுகள் மூலம் கலாச்சார அடையாளத்தை பேண வேண்டும்