3.1 கணினிகளுக்கான அறிமுகம்

2. கணினி வன்பொருள்

வன்பொருள் என்றால் என்ன?

கணினி வன்பொருள் என்பது நீங்கள் பார்க்கக்கூடிய மற்றும் தொடக்கூடிய அனைத்து கூறுகளும் ஆகும், எனவே கணினியின் அனைத்து உடற் பாகங்கள் மற்றும் சாதனங்கள் என்று எடுத்து கொள்ளலாம்.

வெளியீட்டு சாதனங்கள் கணினியிலிருந்து தகவல்களை வெளியிடுவது வெளியீட்டு சாதனங்கள் பொறுப்பு. மொனிட்டர்கள், பிரிண்டர்கள், ப்ரொஜெக்டர்கள், சவுண்ட் கார்ட்கள், வீடியோ கார்ட்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் ஆகியவை வெளியீட்டு சாதனங்களின் சில உதாரணங்கள் ஆகும்.

வன்பொருள் வகைகள்:

  • செயன்முறை சாதனங்கள்: மத்திய செயலாக்க அலகு (CPU) கணினியின் மூளை என்றும் அழைக்கப்படுகிறது. இது  அனைத்து வகையான தரவு செயலாக்க செயற்பாடுகளையும் செய்கிறது.
  • உள்ளீட்டு சாதனங்கள் CPU க்கு சமிக்ஞைகள் அல்லது தரவை அனுப்புவது  உள்ளீட்டு சாதனங்கள் பொறுப்பு. அவை பொதுவாக கணினியுடன் தொடர்பு கொள்ள பயன்படுகின்றன. உள்ளீட்டு சாதனங்களின் சில எடுத்துக்காட்டுகள்: விசைப்பலகைகள், சுட்டிகள், ஜாய்ஸ்டிக்ஸ், மைக்ரோஃபோன்கள், வெப்கேம்கள் மற்றும் ஸ்கேனர்கள்.

Image of a microphone Image of a webcam Image of a joystick

Microphone - Webcam - Joystick

  • வெளியீட்டு சாதனங்கள் கணினியிலிருந்து தகவல்களை வெளியிடுவது வெளியீட்டு சாதனங்கள் பொறுப்பு. மொனிட்டர்கள், பிரிண்டர்கள், ப்ரொஜெக்டர்கள், சவுண்ட் கார்ட்கள், வீடியோ கார்ட்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் ஆகியவை வெளியீட்டு சாதனங்களின் சில உதாரணங்கள் ஆகும்.

Image of a projector Image of a speaker

Projector - Speaker

  • உள்ளீட்டு/வெளியீட்டு சாதனங்கள் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு சாதனங்கள் ஆகிய இரண்டின் கூறுகளைக் கொண்டுள்ளன. அவை உள்ளீடு செய்யப்பட்ட தரவை ஏற்றுக்கொண்டு பதிலுக்கு தகவல்களை வெளியிடும் திறன் கொண்டவை. எடுத்துக்காட்டுகளில் மோடம்கள் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் அடங்கும்.

Image of a modem Image of a digital camera

Modem - Digital Camera

  • சேமிப்பு சாதனங்கள் நீண்ட காலத்திற்கு தகவல்களை சேமிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றை உள் அல்லது வெளிப்புறமாக கணினியுடன் இணைத்து அவற்றில் தகவுகளை பதிவு செய்யலாம் .

Image of an USB flash drive showing the speed and storage capacity

Image of a compact disk showing the speed and storage capacity

Image of a hard disk showing the speed and storage capacity

Image of a magnetic tape showing the speed and storage capacity