3.8 வலையமைப்பு பகிர்வு

3. சமூக கட்டுப்பாட்டில் உள்ள DIY வலையமைப்புகள்

சமூக கட்டுப்பாட்டில் உள்ள DIY வலையமைப்புகள் விலையுயர்ந்த இணைய வழங்குநர்களுக்கு மாற்றீடாகும். உலகளாவிய கூட்டுறவு இணைய சேவை வழங்குநர்களுக்கு (ISPகள்) எதிராக, DIY வலையமைப்புகள் சமூகத்தால் பயன்படுத்தப்பட்டு உள்ளூர் மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. DIY வலையமைப்புகளில் உள்ள உள்ளடக்கத்தை சமூகங்கள் கட்டுப்படுத்தலாம் மற்றும் பொருத்தமற்ற பொருள், விளம்பரம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றை விலக்கலாம்.

இலாபத்தால் இயக்கப்படுவதற்குப் பதிலாக, சமூகத்திற்கு சொந்தமான DIY வலையமைப்புகள் சமூக உறுப்பினர்களின் உண்மையான தேவைகளில் கவனம் செலுத்துகின்றன. இது சமூக உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் ஆளுகைக்கு ஆதரவளிக்கும், உள்ளூரில் தொடர்புடைய செய்திகள் மற்றும் தகவல்களைப் பதிவுசெய்து பகிர்ந்துகொள்ள சமூகங்களை அனுமதிக்கிறது. எனவே, உதாரணமாக, DIY வலையமைப்பு வரவிருக்கும் சமூக நிகழ்வுகள் மற்றும் சேவைகளின் ஒரு நாட்கட்டியை வழங்கலாம் (உ-ம் சுகாதார வருகைகள், போக்குவரத்து), தினசரி அல்லது வாராந்த செய்தி இற்றைப்படுத்தல்களை வழங்கலாம், உற்பத்திக்கான தற்போதைய சந்தை விலைகள் போன்ற பயனுள்ள தகவல்களைத் தொகுக்கலாம் என்பதுடன் உள்ளூர் சவால்களுக்கு சமூகத்திற்கு சொந்தமான தீர்வுகள் பற்றிய ஒரு ஊடக களஞ்சியமாகவும் செயற்படலாம்.

DIY வலையமைப்புகள் டிஜிட்டல் தகவலை ஒரு பொதுவானதாகக் கருதுகின்றன: அனைத்து சமூக உறுப்பினர்களின் நலனுக்காக நியாயமான முறையில் நிர்வகிக்கப்பட வேண்டிய ஒரு வளம். டிஜிட்டல் பொதுவானவைகளின் நிர்வாக செயன்முறைகள் நீர், காற்று, மீன் மற்றும் மேய்ச்சல் நிலம் போன்ற பிற பொதுவான வளங்களுக்காக உருவாக்கப்பட்டதை நெருக்கமாகப் பின்பற்றுகின்றன. பொதுவாகத் தேவைப்படுவது, அடிப்படைத் தொழில்நுட்பத்தைக் கையாளக்கூடிய ஒரு முகாமைத்துவக் குழு, தகவல்களைப் பதிவேற்றுவதற்கும் அணுகுவதற்கும் சமூக உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்கவும் பயிற்சியளிக்கவும் முடியும், மேலும் வலையமைப்பு நியாயமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் முடியும்.

நடைமுறையில் DIY வலையமைப்பை எவ்வாறு பயன்படுத்தலாம்? கீழே உள்ள படம், Raspberry Pi 'சர்வரில்' நிறுவக்கூடிய திறந்த மூல (இலவச) மென்பொருள் கருவிகளில் சிலவற்றைக் காட்டுகிறது.

Icons of software programmes that can be used within a DIY network

DIY வலையமைப்பில் (மேலே-இடமிருந்து கீழ்-வலதுவரை) சமூகப் பயன்பாட்டிற்காக நிறுவக்கூடிய இலவச கருவிகள்:

  • ஈதர்பேட் (Etherpad) - கூட்டு சொல் செயன்முறையாக்கத்திற்கு
  • ரொக்கட்  (Rocket): சம்பாஷனை செய்திகளை அனுப்புவதற்கு
  • டௌரஸ் (Davros) - கோப்பு சேமிப்பு மற்றும் பகிர்வுக்காக;
  • QuickSurvey - வாக்கெடுப்புகள் மற்றும் கருத்துக்கணிப்புகளுக்கு
  • கிவிக்ஸ் (Kiwix) - உள்ளூர் விக்கிப்பீடியாவை உருவாக்குவதற்கு
  • லிச்சி  (Lychee) - புகைப்பட எல்பங்களுக்கு
  • வேர்ட்பிரஸ் (WordPress) - ஒரு இணையதளத்தை வடிவமைத்து வெளியிடுவதற்கு
  • ரவுண்ட்கியூப் (RoundCube) - மின்னஞ்சல் சேவையை வழங்குவதற்காக