3.8 வலையமைப்பு பகிர்வு

2. DIY வலையமைப்புகள்

ஒரு மாற்று தீர்வு DIY வலையமைப்பு ஆகும். DIY வலையமைப்பு என்பது சுயாதீனமான இணைய உள்ளூர் வைஃபை வலயமாகும். அத்தகைய வலையமைப்பின் முக்கிய கூறு அந்த அலகு ஒளிபரப்பப்படும் வைஃபை சிக்னல் மூலம் அணுக முடியுமான ஒரு 'சர்வர்' ஆக செயற்படும் ஒரு கணினி அலகு ஆகும். ஃபோன், டேப்லெட் அல்லது லெப்டொப் உள்ள எவரும், வைஃபை சிக்னல் எல்லையில் இருந்தால், DIY வலையமைப்பில் கிடைக்கும் தகவலை அணுகலாம்.

உள்ளூர் DIY வலையமைப்புகளை அமைப்பதற்கான மென்பொருள் மற்றும் கருவித்தொகுப்பை உருவாக்கிய MAZI திட்டத்தில் இருந்து அத்தகைய DIY வலையமைப்புகளுக்கான ஒரு உதாரணத்தை கீழே உள்ள வீடியோ வழங்குகிறது. MAZI திட்டம் முடிவடைந்தது, ஆனால் அத்தகைய வலையமைப்புகளை அமைப்பதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மாற்று மென்பொருள்கள் உள்ளன, உதாரணமாக DietPi.


DIY வலையமைப்பிற்கான மிகவும் பிரபலமான கணினி அலகுகளில் ஒன்று Raspberry Pi ஆகும் - இது பாடசாலைகளில் அடிப்படை கணினி விஞ்ஞானத்தை கற்பிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தில் முதலில் உருவாக்கப்பட்டது. Raspberry Pi கணினிகள் இப்போது DIY வலையமைப்புகள் உட்பட அனைத்து வகையான செயலிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. மார்ச் 2018 நிலவரப்படி, உலகம் முழுவதும் 19 மில்லியன் Raspberry Pi அலகுகள் விற்கப்பட்டுள்ளன. அனைத்து Raspberry Pi மாதிரிகளும் வைஃபை திறன்களுடன் உருவாக்கப்படவில்லை, ஆனால் அவை 25 யூரோக்கள்ள/40 டொலர்களுக்கு விற்கப்படுகின்றன.

A portable DIY Network running off a Raspberry PI computer

இந்த Raspberry Pi DIY வலையமைப்புகளின் பயன்பாடு கணினி அலகு Wi-Fi எல்லையில் உள்ளவர்களுக்கு மட்டுமே, பொதுவாக சுமார் 25 மீட்டர் எல்லைக்கு உட்பட்டது. இருப்பினும், மலிவான ஆண்டெனாக்களைப் பயன்படுத்தி அந்த எல்லையை கணிசமாக நீட்டிக்க முடியும். ஆனால் எல்லா வைஃபை வலையமைப்புகளையும் போலவே, சுவர்கள் மற்றும் தாவரங்கள் போன்ற பொருட்களும் இந்த எல்லயை கணிசமாகக் குறைக்கும்.