3.9 டிஜிட்டல் நெறிமுறைகள்

3. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் சூழல் பாதிப்புகள்

டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மக்காக உருவாக்கும் அனைத்து நன்மைகளுடன், சூழலுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அந்தத் தொழில்நுட்பங்களை இயக்கத் தேவையான மின்சாரத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் CO2 உமிழ்வுகள், அவற்றை அகற்றும் போது உருவாகும் நச்சுக் கழிவுகள் மற்றும் இந்தத் தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான வளங்கள் ஆகியவை முக்கிய தாக்கங்களாகும். அந்த பாதிப்புகளை அறிந்து கொள்வது முக்கியமானதாகும். தேவையற்ற டிஜிட்டல் தகவலை நீக்குவது நல்ல நடைமுறையாகும், இதனால் அது உங்கள் சர்வர் இடத்தையோ அல்லது சாதனத்தில் இடத்தையோ எடுத்துக்கொள்ளாது, மேலும் மீள்சுழற்சி மையத்தில் வன்பொருளை அப்புறப்படுத்துவதும் உங்கள் சாதனங்களை மேம்படுத்தும் அல்லது மறுசீரமைக்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதும் இதில் அடங்கும்.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் குறிப்பாக இணையம் அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது, இது CO2 உமிழ்வையும் ஏற்படுத்துகிறது. உலகளாவிய அளவில், இணைய பயன்பாடு மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய மின்சார தேவை ஆகியவை பல சூழல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்த பிரச்சினையின் அளவைப் பற்றிய கருத்தைப் பெற, கீழே உள்ள விளக்கப்படத்தைப் பார்க்கவும், இது ஒரு நிமிடத்தில் இணையத்தில் உருவாக்கப்பட்ட தரவுகளின் மதிப்பிடப்பட்ட அளவைக் காட்டுகிறது. ஒட்டுமொத்தமாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பயன்பாடு இப்போது ஒட்டுமொத்த விமானத் துறையை விட புவி வெப்பமடைதலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. (https://en.reset.org/knowledge/our-digital-carbon-footprint-whats-the-environmental-impact-online-world-12302019).

Infographic showing the amount of data created on the internet in one minute via different applications

இலத்திரனியல் கழிவுகள் என்று அழைக்கப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை அகற்றுவது கடினமாக இருக்கும், ஏனெனில் அவற்றை சாதாரண குப்பை தொட்டிகளில் வீச முடியாது. அவை பெரும்பாலும் ஈயம் அல்லது மற்ற கன உலோகங்கள் போன்ற உலோகங்கள் மற்றும் கூறுகளைக் கொண்டிருக்கின்றன, அவை சூழலை மாசுபடுத்தும். இந்த நேரத்தில், பெரும்பாலான இலத்திரனியல்-கழிவுகள் நிலப்பரப்புகளில் வைக்கப்படுகின்றன, அவை மண்ணிலும் தண்ணீரிலும் கசிந்து ஊடுருவுகின்றன. இலத்திரனியல்-கழிவுகள் நிலப்பரப்புகளில் உள்ள கழிவுகளில் சுமார் 2% மட்டுமே என்றாலும், சில நேரங்களில் அங்கு காணப்படும் நச்சுக் கழிவுகளில் 70% வரை காரணமாகிறது (https://en.reset.org/knowledge/electronic-waste ). பல இடங்களில் இலத்திரனியல்-கழிவுகளுக்கு முறையான மற்றும் முறைசாரா மீள்சுழற்சி துறைகள் உள்ளன, அவை அந்த தொழில்நுட்பங்களில் உள்ள சில மதிப்புமிக்க கூறுகளை மீட்டெடுக்கின்றன, எனவே அவை மீண்டும் பயன்படுத்தப்படலாம். அந்த கூறுகளை மறுசுழற்சி செய்யும் யோசனை மிகவும் நம்பிக்கைக்குரியது, இருப்பினும் இது சரியான பாதுகாப்பு நிலைமைகளின் கீழ் செய்யப்பட வேண்டும், ஏனெனில் அந்த கூறுகள் மனித ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எனவே, உங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மாற்றும் போது, அதை எவ்வாறு பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது என்பதை கவனமாகச் சரிபார்க்கவும். சில இடங்களில் நிறுவனங்கள் இலத்திரனியல் கழிவுகளை திரும்பப் பெறுவதற்கான முறைமைகளை வழங்குகின்றன, ஆனால் இது எப்போதும் ஒரு தெரிவாக இருக்காது. இலத்திரனியல்-கழிவுகளை உங்களுக்கு அருகில் எங்கு பாதுகாப்பாக அகற்றலாம் அல்லது மீள்சுழற்சி செய்யலாம் என்பதை ஆராய்ந்து பாருங்கள்.

Photo of a person with gloves holding a broken smartphone surrounded by E-waste

டிஜிட்டல் தொழில்நுட்பங்களைத் தயாரிக்கத் தேவையான மூலக் கனிமங்களை வெட்டி எடுப்பதால் ஏற்படும் மனித மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றொரு பிரச்சினை. சில இடங்களில் டிஜிட்டல் சாதனங்களுக்காக வெட்டியெடுக்கப்பட்ட கனிமங்கள் மோசமான வேலை நிலைமைகளிலும் சூழலை எதிர்மறையாக பாதிக்கும் விதத்திலும் செய்யப்படுகின்றன (https://en.reset.org/knowledge/ecological-impact-mobile-phones). உங்கள் டிஜிட்டல் சாதன விநியோகஸ்தரின் நெறிமுறை மற்றும் சுற்றுச்சூழல் நடைமுறைகளைப் புரிந்துகொள்வது, மக்களையும் சூழலையும் பாதுகாக்க முயற்சிக்கும் நிறுவனங்களைத் தெரிவுசெய்ய உங்களுக்கு உதவும்.

இப்போது, இந்தப் புத்தகத்தை முடித்த பிறகு, பிரதான பக்கத்திற்குச் சென்று, செயற்பாடு 6ஐ பூர்த்திசெய்யவும்.