அறிமுகம்
சமூகக் கண்காணிப்பு என்பது சமூகங்களினாலேயே உருவாக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு ஆகும். கண்காணிப்புத் திட்டத்தின் வடிவமைப்பு, செயற்படுத்தல், அறிக்கையிடல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் சமூக உறுப்பினர்களின் பரவலான பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது (அலகு 4 இல் கலந்துரையாடப்பட்டது). ஒரு கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்கும் போது சமூக அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் நன்மைகளை அறிமுகப்படுத்துவதும், அதை எவ்வாறு திட்டமிடுவது, செயற்படுவது, அவதானிப்பது மற்றும் மதிப்பீடு செய்வது என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த அலகின் நோக்கங்கள் ஆகும்.