பாடநெறி அறிமுகம் Cobra Collective அன்று Vimeo
இந்த நிகழ்நிலை பாடநெறியானது ‘கொழும்பின் ஈரநிலங்களில் உயிர் பல்வகைமை மற்றும் வாழ்வாதாரங்களின் தாங்குதிறனை அதிகரித்தல்’ திட்டத்திற்காக உருவாக்கப்பட்டது என்பதுடன், இது ஐக்கிய இராச்சியத்தின் டார்வின் முன்முயற்சியால் நிதியளிக்கப்பட்டதாகும். இத்திட்டமானது சதுப்பு நிலங்களைக் கண்காணிக்கவும், முடிவெடுப்பவர்களுடன் தொடர்பாடல்களை செய்யவும், உயிர் பல்வகைமையைப் பாதுகாக்கவும், இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் அத்தியாவசிய ஈரநில நலன்களைப் பேணவும் ஈரநிலங்களை நிர்வகிக்கவும் சமூகங்களுடன் இணைந்து செயற்படுகிறது.
இந்தத் திட்டம் பின்வரும் பங்காளிகளால் வழங்கப்படுகிறது:
- சர்வதேச
நீர் முகாமைத்துவ நிறுவனம் (IWMI), கொழும்பு, இலங்கை
- கோப்ரா
கலெக்டிவ் (சிசி), ஐக்கிய இராச்சியம்
- உயிர்பல்வகைமை செயலகம், சுற்றாடல் அமைச்சு, இலங்கை
- வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை
- ஈரநில முகாமைத்துவப் பிரிவு, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம்
(SLLDC), இலங்கை, நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவு அகற்றல்
மற்றும் சமூகத் தூய்மை அமைச்சு, இலங்கை
- மத்திய
சுற்றாடல் அதிகாரசபை (CEA), சுற்றாடல் அமைச்சு, இலங்கை
- நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA), நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவு அகற்றல் மற்றும் சமூகத் தூய்மை அமைச்சு, இலங்கை
- இலங்கையின் கள பறவையியல் குழு (FOGSL), கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை
கொழும்பில் உள்ள திட்டத்திற்காக இந்த நிகழ்நிலை பாடநெறி உருவாக்கப்பட்டிருந்தாலும், இது கோப்ரா கலெக்டிவ்வினால் பல திட்டங்களில் வேலை செய்வதற்கு வழிசெய்வதுடன், சுற்றாடல்ல் சவால்கள் மற்றும் சிக்கல்களைச் சமாளிக்க தமது சமூகம் அல்லது ஏனைய சமூகத்துடன் இணைந்து பணியாற்ற விரும்பும் எவருக்கும் இது கிடைக்கக்கூடியதாகவும் ஏற்புடையதாகவும் உள்ளது. இந்த பாடநெறி ஈரநில வாழ்விடங்களில் கவனம் செலுத்தினாலும் வெவ்வேறு நிலப்பரப்புகளில் அல்லது அதற்கு அருகில் வாழும் சமூகங்களுடனும் பயன்படுத்தக்கூடியதாகும்.
சமூக முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு
சமூக முகாமைத்துவம் என்பது சமூகம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் சூழல் சவால்களுக்கு தீர்வு வழங்கும் முகாமைத்துவ அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவதாகும். சமூக கண்காணிப்பு, சமூகங்கள் ஏற்பட்ட மாற்றங்களைப் புரிந்துகொள்ளவும், முகாமைத்துவத் தலையீடுகள் பயனளிக்கிறதா இல்லையா என்பதை மதிப்பிடவும் உதவுகிறது. சமூக கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவம் சமூகங்களாலேயே உருவாக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் சமூகம் அல்லது நீங்கள் பணிபுரியும் சமூகம் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு அவர்களின் சொந்த தீர்வுகளைக் கண்காணித்து நிர்வகிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய கருத்துக்கள், நுட்பங்கள் மற்றும் பங்கேற்பு அணுகுமுறைகளை இந்தப் பாடநெறி அறிமுகப்படுத்துகிறது.
கற்றல் விளைவுகள்
இந்த பாடநெறி உங்கள் சமூகம் அல்லது நீங்கள் பணிபுரியும் மற்றொரு சமூகத்துடன் ஈடுபட உதவும் பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது. இது சமூகத்தால் மேற்கொள்ளப்படும் சமூக கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவம் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான ஈடுபாட்டுக்கு உதவும். இந்த கற்கைநெறியில் பின்வரும் தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:
- அலகு 1 - பின்வருவன தொடர்பான முக்கிய எண்ணக்கருக்கள்:
- செயற்பாட்டு கற்றல்
- சமூக ஈடுபாடு
- சமூகம் சார்ந்த தீர்வுகள்
- தாக்க மதிப்பீடு
- பிரிவு 2 - பின்வருவன
உட்பட சமூகங்களை ஈடுபடுத்துவதற்கான பங்கேற்பு நுட்பங்கள் :
- செயலமர்வுகள்
- கவனக் குழுக்கள்
- நேர்காணல்கள்
- முறைசாரா கலந்துரையாடல்கள்
- பங்கேற்பு வரைதல்
- பங்கேற்பு புகைப்படம்
- பங்கேற்பு வீடியோ
- அலகு 3 - பின்வருவன உட்பட டிஜிட்டல் திறன்கள்
- கணினிகளுக்கான அறிமுகம்
- மொபைல் சாதனங்கள்
- இணைய பயன்பாடு மற்றும் தொடர்பாடல்
- ஆவணம் தயாரித்தல்
- விளக்கக்காட்சிகள்
- தரவு பகுப்பாய்வு
- இமஜ் எடிட்டிங்
- ஓடியோ மற்றும் வீடியோ எடிட்டிங்
- டிஜிட்டல் நெறிமுறைகள்
- அலகு 4 - பின்வருவன உட்பட சுற்றாடல் கண்காணிப்பு அணுகுமுறைகள்
- சூழல் தரவு சேகரிப்பு முறைகள்
- வெற்றிகரமான ஒரு கண்காணிப்பு ஆய்வை எவ்வாறு திட்டமிடுவது
- ஆய்வுக் கண்டுபிடிப்புகளை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது மற்றும் பகிர்வது
- அலகு 5 - பின்வருவன உட்பட சமூக கண்காணிப்பு அணுகுமுறை :
- சமூக கண்காணிப்பு என்றால் என்ன
- சமூக கண்காணிப்பு திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது
- சமூக கண்காணிப்பு திட்டத்தை எவ்வாறு மதிப்பிடுவது
- அலகு 6 - பின்வருவன உட்பட சமூக ஈரநில முகாமைத்துவ அணுகுமுறை
- நீர் மற்றும் ஈரநிலங்களுடனான எமது உறவுகள்
- சமூக முகாமைத்துவம் என்றால் என்ன
- சமூக முகாமைத்துவத்திற்கான சமூகம் சார்ந்த தீர்வுகளை எவ்வாறு கண்டறிவது
- சமூக முகாமைத்துவத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது மற்றும் மதிப்பீடு செய்வது
- அலகு 7 - பின்வருவன உட்பட சமூக கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவத்தை கொள்கை மற்றும் முகாமைத்துவ கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைத்தல்
- கொள்கை என்றால் என்ன, கொள்கை வகுப்பாளர்கள் யார்
- கொள்கை வகுப்பாளர்களை எவ்வாறு வெற்றிகரமாக ஈடுபடுத்துவது
இந்த கந்கை நெறியை யார் கற்க வேண்டும்?
இந்த கற்கைநெறியை எடுப்பதற்கு முன் தேவையான திறன்கள் அல்லது அறிவு எதுவும் இல்லை. வெளிப்படைத்தன்மை, ஆர்வம் மற்றும் சமூகங்களுடன் எவ்வாறு ஈடுபடுவது என்பதைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம். கொள்கை வகுப்பாளர்களுடன் கண்காணிப்பு, முகாமைத்துவம் அல்லது ஈடுபாட்டை வழங்குவதற்காக தங்கள் சமூகத்தை அணிதிரட்ட விரும்பும் சமூக உறுப்பினருக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்தப் பாடநெறி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூகங்களுடன் மிகவும் திறம்பட பணியாற்ற விரும்பும் அரச நிறுவனங்கள் அல்லது அரச சாரா நிறுவனங்களுக்காகப் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கற்கைநெறி மற்றும் சுய மதிப்பீட்டைப் பற்றி கற்பவர்கள் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்
ஒவ்வொரு பாடப் பிரிவின் முகப்புப் பக்கத்திலும் (ஒவ்வொன்றிலும் நீங்கள் பதிவு செய்ய வேண்டும்) பின்வரும் டெப்களைக் காண்பீர்கள்: “Course description” ("பாடநெறி பற்றிய விளக்கம்"), “Course content” ("பாடநெறி உள்ளடக்கம்" ) மற்றும் “Course review” ("பாட மீளாய்வு"). நீங்கள் இப்போது இருக்கும்“Course description” (“பாடநெறி பற்றிய விளக்கத்தில்”) சுருக்கமான பாட விளக்கமும் கற்றல் விளைவுகளும் உள்ளன. “Course content tab” (“பாட உள்ளடக்கம்“) டெப்பைக் கிளிக் செய்வதன் மூலம் பாடங்களின் பட்டியலைப் பார்க்கலாம். ஒவ்வொரு பாடத்திலும் ஒரு வீடியோ மற்றும் இறுதி சுயமதிப்பீட்டு வினாவிடை உள்ளது. சில பாடங்களில் உரைப்பகுதி மற்றும் விளக்கப்படங்களும் உள்ளன. வீடியோக்களை நேரடியாக பாடநெறிப் பக்கத்தில் இயக்கலாம். வீடியோ உபதலைப்புகளை இயக்க, வீடியோவின் கீழ் வலது மூலையில் அமைந்துள்ள “CC” ஐகனைக் கிளிக் செய்யவும்.
வினாவிடைகளை அணுக அந்த ஐகனைக் கிளிக் செய்யவும்
வினாவிடைகளைத் தொடங்க, “Start Attempt” ("முயற்சியைத் தொடங்கு" )என்பதைக் கிளிக் செய்யவும். எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்த பின்னர், வினா விடை மதிப்பீட்டைப் பார்க்க,“Finish Attempt” ("முயற்சியை முடிக்கவும்") என்பதைக் கிளிக் செய்து, “Submit all and finish” ("அனைத்தையும் சமர்ப்பித்து முடிக்கவும்") என்பதை கிளிக் செய்வதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். வினாவிடையில் சித்திபெற நீங்கள் 70% அல்லது அதற்கு மேற்பட்ட தரத்தை அடைய வேண்டும். நீங்கள் விரும்பும் அனைத்து வினாவிடைகளையும் நீங்கள் அடிக்கடி எடுக்கலாம். மற்ற பாடங்களுக்குச் செல்ல,“Course content” ("பாடநெறி உள்ளடக்கம்") என்பதைக் கிளிக் செய்யவும். சுயமதிப்பீட்டு வினாவிடைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் எடுக்கலாம். நீங்கள் எல்லாவற்றையும் சரியாகப் புரிந்துகொள்வதை உறுதிசெய்யும் வரை அவற்றை எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். பாடநெறி குறித்த ஏதேனும் கருத்தை எங்களுக்கு அனுப்ப விரும்பினால், நீங்கள் முகப்புப் பக்கத்திற்குச் சென்று “Course Review” ("பாட மீளாய்வு") டெப்பைக் கிளிக் செய்யலாம்.
பங்கேற்பு பற்றிய ஒரு கூற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்
பங்கேற்பு பற்றிய ஒரு கூற்றைப் பெற்றுக்கொள்ளுங்கள்
இப் பாடநெறியைப் கற்பதன் மூலம், கற்கையை முடித்தவுடன் ஒரு பங்கேற்பு கூற்றினைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள் - வினாவிடைகள் மற்றும் செயற்பாடுகளைச் செய்ய மற்றும் உங்கள் பங்கேற்பு கூற்றினைப் பதிவிறக்கம் செய்ய,‘Enrol’ ('பதிவுசெய்') என்ற பொத்தானைக் கிளிக் செய்ய வேண்டும்.
இந்த பாடநெறி பற்றி
இந்த நிகழ்நிலை கற்கையை நிறைவுசெய்ய சுமார் 24 மணிநேரம் ஆகும். எனினும், ஒரு சமூகத்துடனான நுட்பங்களை வழங்க, அது அதிக நேரம் எடுக்கும். உதாரணமாக, ஒரு சமூகத்துடன் சமூகம் சார்ந்த தீர்வை அடையாளம் காண சுமார் 12 மணிநேரம் ஆகும்.
காப்புரிமை தகவல்
இந்த பாடநெறி CC BY-NC-SA 4.0: Cobra Collective இன் கீழ் கிடைக்கிறது
இந்தப் பாடநெறியில் இடம்பெறும் எந்தவொரு மூன்றாம் தரப்புப் பொருட்களும் அனுமதியுடன் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் அவை எங்களுடையது அல்ல. இந்த பொருட்கள் படைப்பாக்கப் பொதும உரிமங்கள் (Creative Commons licence) உட்பட்டவை அல்ல. பார்க்க terms and conditions மற்றும் எமது FAQs. பதிப்புரிமை விவரங்களைப் பற்றிய மேலதிக தகவலுக்கு, பாடநெறி நன்றியறிதல்களைப் பார்க்கவும்.
இப்பாடநெறிக்கான மேற்கோள்
இப்பாடநெறிக்கான மேற்கோள்
Cobra Collective. 2021. சமூக சுற்றாடல் கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவ நிகழ்நிலை பயிற்சிப் பாடநெறி.
நன்றியறிதல்கள்
அலகு 1, 4, 5 மற்றும் 6 இற்கான விளக்கப்படங்களை எட் டிங்கிலி தயாரித்துள்ளார் (www.eddingli.com).
அலகு 1, 4, 5 மற்றும் 6 இற்கான அனிமேஷன்களை ரோஸி மைல்ஸ் (www.rosiesmiles.com ) தயாரித்துள்ளார்.
பிரிவு 2க்கான கிராபிக்ஸ் கோப்ரா கலெக்டிவ் மூலம் தயாரிக்கப்பட்டது.
பிரிவு 3க்கான கிராபிக்ஸ் கயானா பல்கலைக்கழகத்தினால் தயாரிக்கப்பட்டது.
-
1 அடிப்படை எண்ணக்கருக்கள் Tamil
சமூகம் எதிர்கொள்ளும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களுக்கான தீர்வுகளை உருவாக்கும் போது, சமூகத்தின் அனைத்து உறுப்பினர்கள், குரல்கள் மற்றும் கருத்துக்களின் ஈடுபாடு மிகவும் முக்கியமானதாகும். இந்த அலகு உங்கள் சமூகத்துடன் நீங்கள் எவ்வாறு ஈடுபடுகிறீர்கள் அல்லது தீர்வுகளை அடையாளம் காண மற்றொரு சமூகத்துடன் எவ்வாறு தொடர்புபடுகிறீர்கள் என்பதற்குப் பின்னால் உள்ள முக்கிய எண்ணக்கருக்கள் பற்றி கலந்துரையாடுகிறது. மிகவும் பயனுள்ள சமூகத் தீர்வுகள் சமூகத்திற்கு நன்மை பயப்பவை என்பதுடன், அவை நியாயமானவை மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காது இருப்பவை ஆகும். இந்த அலகின் குறிக்கோள்கள் பின்வருவனவற்றை அறிமுகப்படுத்துவதாகும்: சமூகத்துடனான ஈடுபாடு மற்றும் முகாமைத்துவத்துக்கான செயற்பாட்டுக் கற்றல் அணுகுமுறையை எவ்வாறு பின்பற்றுவது; சமூக ஈடுபாடு ஏன் முக்கியமானது மற்றும் வெற்றிகரமான ஈடுபாட்டிற்கான அணுகுமுறைகள்; சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் பற்றிய எண்ணக்கரு; மற்றும் சமூக ஈடுபாட்டின் தாக்கத்தை எவ்வாறு தீர்மானிப்பது.
Course
4 hrs
-
2 பங்கேற்பு நுட்பங்கள் Tamil
உங்கள் சமூகம் அல்லது மற்றொரு சமூகத்துடன் ஈடுபடும் போது பங்கேற்பு நுட்பங்கள் மிகவும் முக்கியம். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமிருந்தும் அனைத்து குரல்கள், கருத்துகள் மற்றும் நடைமுறைகள் பகிரப்படுவதற்கு அவை அனுமதிக்கின்றன.
Course
5 hrs
-
3 டிஜிட்டல் திறன்கள் Tamil
எமது நவீன உலகம் கணினிகள் மற்றும் பிற தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களால் இயக்கப்படுவதுடன், அவற்றைப் பெரிதும் சார்ந்திருக்கிறது. நமது அன்றாட வாழ்வில், நாங்கள் எங்கள் வேலைக்கு மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் சமூகமயமாகவும் தொடர்பாடல்களை மேற்கொள்ளவும், எங்கள் கற்றல் மற்றும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் கணினிகளை பெரிதும் நம்பியிருக்கிறோம். கணினிகளை அறிமுகப்படுத்துவதும், வெவ்வேறு சூழல்களில் அவற்றை எவ்வாறு புரிந்துகொள்வது மற்றும் பயன்படுத்துவது என்பதற்கு ஒரு அடித்தளத்தை வழங்குவதும் இந்த அலகின் நோக்கமாகும். இது கோட்பாடு மற்றும் நடைமுறை அம்சங்களை இணைத்து செய்யப்படுகிறது.
Course
5 hrs
-
4 சுற்றுச்சூழல் கண்காணிப்பு Tamil
சுற்றுச்சூழல் கண்காணிப்பு என்பது தற்போதைய நிலை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் புரிந்துகொள்ளும் ஒரு வழியாகும். நீர், நிலம், காற்று, தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்படலாம். சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் மாற்றங்களைப் புரிந்துகொள்வது முகாமைத்துவ நடவடிக்கைகளை ஆதரிக்கவும், கொள்கை அபிவிருத்தி மற்றும் அதன் செயற்பாட்டை ஆதரிக்கவும், சமூகம், அரசு மற்றும் பொதுமக்களுடன் பகிர்வதற்கான தகவல்களை உருவாக்கவும் உதவும். சுற்றுச்சூழல் தரவுகளை சேகரிப்பது ஏன் முக்கியம், அதனைப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகள், கண்காணிப்பு ஆய்வை எவ்வாறு திட்டமிடுவது மற்றும் தகவல்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது மற்றும் பகிர்வது என்பதை அறிமுகப்படுத்துவதே இந்த அலகின் நோக்கமாகும்.
Course
2 hrs
-
5 சமூகக் கண்காணிப்பு Tamil
சமூகக் கண்காணிப்பு என்பது சமூகங்களினாலேயே உருவாக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு ஆகும். கண்காணிப்புத் திட்டத்தின் வடிவமைப்பு, செயற்படுத்தல், அறிக்கையிடல் மற்றும் மதிப்பீடு ஆகியவற்றில் சமூக உறுப்பினர்களின் பரவலான பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது (அலகு 4 இல் கலந்துரையாடப்பட்டது). ஒரு கண்காணிப்புத் திட்டத்தை உருவாக்கும் போது சமூக அணுகுமுறையைப் பயன்படுத்துவதன் நன்மைகளை அறிமுகப்படுத்துவதும், அதை எவ்வாறு திட்டமிடுவது, செயற்படுவது, அவதானிப்பது மற்றும் மதிப்பீடு செய்வது என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்குவதே இந்த அலகின் நோக்கங்கள் ஆகும்.
Course
2 hrs
-
7 கொள்கை மற்றும் முகாமைத்துவக் கட்டமைப்பில் சமூக கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவத்தை ஒருங்கிணைத்தல் Tamil
இந்த அலகின் நோக்கம் கொள்கை மற்றும் முகாமைத்துவக் கட்டமைப்புகள் மற்றும் முடிவெடுப்பதில் சமூக முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு கண்டுபிடிப்புகளை பயன்படுத்த, எப்படி கொள்கை வகுப்பாளர்களுடன் வெற்றிகரமாக ஈடுபடுவது என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குவதேயாகும். இது சமூக உறுப்பினர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களுக்கு பொருத்தமானதாகும்.
Course
3 hrs