அறிமுகம்
5 நிமிட எண்ணிம உட்படுத்தல் - தமிழ்
-
அடுத்த 5 வாரங்களில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு முன்னோட்டம் இதோ.
Transcript - English
Transcript - Sinhala
உரைநகல்கள் - தமிழ்
இது எதைப் பற்றியது?
இந்த பகுதிகளைக் கொண்ட காணொளித் தொடரில், உயர்கல்வியில் எண்ணிம (டிஜிட்டல்) உட்புகுத்தலின் முக்கிய கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகளை நாம் விரிவாகப் பார்ப்போம்.
ஒவ்வொரு அத்தியாயமும், சுமார் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும், உங்கள் எண்ணிம (டிஜிட்டல்) கற்றல் வளங்கள் மற்றும் நிகழ்நிலை (ஆன்லைன்) தளங்கள், அனைத்து கற்பவர்களுக்கும் அணுகக்கூடியதாக இருக்க சில நடைமுறையான, செயல்படுத்தக்கூடிய உத்திகளை வழங்கும்
நாம் அடிப்படை கருத்துகளிலிருந்து தொடங்கி, எண்ணிம (டிஜிட்டல்) கருவிகளை ஆராய்ந்து, பின்னர் அணுகக்கூடிய உள்ளடக்கத்தை உருவாக்குவதையும் உட்புகுத்த தக்க நிகழ்நிலை (ஆன்லைன்) சூழல்களை மேம்படுத்துவதையும் பார்ப்போம். சமத்துவமான கற்றல் அனுபவங்களை உருவாக்க, கற்றலுக்கான உலகளாவிய வடிவமைப்பு (UDL) கொள்கைகளைப் பயன்படுத்துவதுடன் நாம் முடிப்போம்.
இந்தப் படிப்பு யாருக்கானது?
இந்தப் பாடநெறி, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஆர்வமுள்ள கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் போன்ற இரு தரப்பினர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு அனுபவமிக்க கல்வியாளராக இருந்தாலும் சரி அல்லது உங்கள் படிப்பைத் தொடங்கினாலும் சரி, மிகவும் உட்படுத்திய மற்றும் ஆதரவான எண்ணிம (டிஜிட்டல்) சமூகத்தை உருவாக்குவதற்கான எளிய, பயனுள்ள வழிகளைக் காண்பீர்கள்.
இது எப்படி தொழிற்படுகிறது?
ஜனவரி 12, 2026 முதல், ஒவ்வொரு வார நாளிலும் 25 நாட்களுக்கு ஒரு வீடியோ மற்றும் ஆதாரங்களை வெளியிடுவோம். நீங்கள் பாடத்திட்டத்தைப் பின்பற்றலாம், எந்த நாளிலும் தொடங்கலாம், தொடர்ந்து பயிற்சி பெறலாம் மற்றும் வளங்களை மீண்டும் பார்வையிடலாம். இந்த பாடநெறிப் பக்கம் விரைவில் மூடப்படாது. இந்த காணொளிகள் ஆங்கிலத்துடன் மேலதிகமாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் உரைத் தலைப்புகள் (காப்சன்ஸ்) கொடுக்கப்பட்டுள்ளன, மேலும் உரைநகல்கள் (டிரான்ஸ்கிரிப்ட்ஸ்) வழங்கப்பட்டுள்ளன. யூடியூப் (YouTube) இல் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கலாம்.
பதிவு செய்வதன் மூலம், இந்தப் பாடத்தில் பங்கேற்றதன் தாக்கம் குறித்து கருத்து தெரிவிக்க 6 மாதங்களுக்குள் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள்.
இது மதிப்பீடு செய்யப்படுகிறதா?
ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும், நீங்கள் ஒரு சிறிய வினாடி வினாவை முடிக்கலாம், அதை வெற்றிகரமாக முடித்தவுடன், உங்கள் சமூக ஊடக சுயவிவரங்களில் வைத்திருக்கவோ அல்லது பகிரவோ ஒரு டிஜிட்டல் பதக்கத்தைப் பெறுவீர்கள்.
பாராட்டுக்கள்
வழங்குபவர்: டாக்டர் டாமரிஸ் கார்லைல் (லாசல் கலைக் கல்லூரி, சிங்கப்பூர்)
வழங்குபவர்: பேராசிரியர் ஜெனிஃபர் ஜார்ஜ் (கோல்ட்ஸ்மித்ஸ், லண்டன் பல்கலைக்கழகம், யுகே)
வழங்குபவர்: திரு அனமோல் ராஜ்பந்தாரி
நேர்காணல்கள்: திரு இசுரு ரத்த்நாயக்கே, நிகோலஸ் ஷ்லோட்சர் டி லூசியோ, மேக்ஸ் என்ஜி யே காய்
வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம்: திரு அனமோல் ராஜ்பந்தாரி
மொழிபெயர்ப்பாளர் - தமிழ் : திருமதி கஜந்தி வேணுஜன்
மொழிபெயர்ப்பாளர் - சிங்களம்: திரு இசுரு ரத்த்நாயக்கேநிதி
இந்தப் பணிக்கு சர்வதேச மேம்பாடு மற்றும் கூட்டாண்மை குழுவான, கோல்ட்ஸ்மித்ஸ்-லாசல் பார்ட்னர்ஷிப் இன்னோவேஷன் ஃபண்ட் (பிஐஎஃப்) ஆதரவு அளித்தது. இது லண்டன் பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித்ஸ், தலைமையிலான ஒரு முயற்சியாகும். இது சிங்கப்பூரின் லாசல் கலைக் கல்லூரியுடனான கோல்ட்ஸ்மித்தின் கல்வி கூட்டாண்மையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஆதரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
