சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை எப்படி அடையாளம் காண்பது

3. செயற்பாடு 2 - சமூக வரலாறு

செயற்பாடு 2 சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை அடையாளம் காண பயன்படுத்தக்கூடிய பங்கேற்பு மற்றும் காட்சி முறைகளின் வரம்பை சமூக குழுவுக்கு அறிமுகப்படுத்துகிறது. இது எப்போது, ​​எப்படி சமூகம் நிறுவப்பட்டது மற்றும் காலப்போக்கில் அது எப்படி வளர்ந்தது போன்ற சமூக வரலாற்றின் விசாரணையின் மூலம் செய்யப்படுகிறது. ஒரு கூட்டம் சாத்தியமில்லை என்றால் இதை சமூகக் குழுவின் கூட்டத்தில் அல்லது இணைய வழியாக ஏற்பாடு செய்யலாம்.

குறிக்கோள்

பங்கேற்பு வரைதல் மற்றும் ஸ்டோரிபோர்டிங்கின், (இயக்கப்பட தொடர் சித்திரங்கள்) முக்கிய கொள்கைகளை எடுத்துக்காட்டவும் நடைமுறைப்படுத்தவும்: கருத்துக்களை வெளிப்படுத்தவும் மற்றும் வரைபடங்கள் மூலம் ஒரு கதையைச் சொல்லவும்; மற்றவர்களுடன் பொருட்களை பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தை விளக்குவதற்கு.

காலம்

2 முதல் 3 மணிநேரம்

யார் ஈடுபட வேண்டும்?
செயற்பாடு 1 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகக் குழு


செயல்முறை

கட்டம் 1

அலகு 2 இல் இருந்து சமூகத்திற்கு உதாரணங்கள் கொடுத்து இயக்கப்பட தொடர் சித்திரங்கள் (storyboarding) கருத்தை அறிமுகப்படுத்துங்கள்.

கட்டம் 2

பங்கேற்பாளர்களுக்கு அவர்கள் சொல்லப்போகும் கதையை அறிமுகப்படுத்துங்கள். சமூகக் குழுவினர் சமூகத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்வதே இதன் நோக்கம்.

கட்டம் 3

கருத்துக்களை கலந்துரையாடுங்கள். உங்களிடம் போதுமான நபர்கள் இருந்தால், எண்ணிக்கையைப் பொறுத்து சமூகக் குழுவை 4 அல்லது 5 பேர் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரித்து, சமூகத்தின் வரலாற்றை ஆராய குழுவிற்குள் ஒருவருக்கொருவர் நேர்காணல் செய்யச் சொல்லுங்கள்.

கட்டம் 4

ஸ்டோரிபோர்ட் பெட்டிகளை வரையவும். ஒரு காகிதத் துண்டில்  அல்லது இணையத்தில் பெட்டிகள் வரைய (துவக்கத்தில் அதற்கு 4-6 பெட்டிகள் இருக்க முடியும்) குழுக்களுக்குச் சொல்லுங்கள். குறிப்பு- 4-6 பெட்டிகளை வரைவதற்குப் பதிலாக கதையின் கட்டங்கள் தனிப்பட்ட காகிதத் துண்டுகளில் அல்லது ஸ்டிக்கி நோட்களில் வரைந்து சுவரிலும் அதேபோன்று  இணைய கூட்ட மென்பொருட்களைப் பயன்படுத்தி செட் பொக்ஸ்களில் (chat boxes) இடலாம். இந்த முறையானது ஊடாட்ட மாற்றங்களுக்கு கொஞ்சம் நெகிழ்வுத்த்தன்மையை வழங்குவதடன், கதையை வளர்த்துச் செல்கிறது.

கட்டம் 5

சமூக வரலாற்றை பெட்டிகளில் வரையவும். ஒவ்வொரு குழுவிடமும் "உங்கள் சமூகத்தின் கதையை நீங்கள் எவ்வாறு தொடங்குவீர்கள்?" என்று கேளுங்கள் முதல் பெட்டியில் அந்த முதல் யோசனையை வரையச் சொல்லுங்கள். கதையின் அடுத்த கட்டம் என்ன என்பதை அவர்களிடம் கேளுங்கள், இரண்டாவது பெட்டியில் அதை வரையச் சொல்லுங்கள். ஒவ்வொரு குழுவிலும் சமூகத்தின் வரலாற்றில் தங்கள் கதை முடிவடையும் வரை தொடரவும்.

Photo of a storyboard showing the history of a community in Venezuela

கட்டம் 6

குழு விளக்கக்காட்சிகள். மற்றொரு குழுவிடம் தங்கள் ஸ்டோரிபோர்டை விளக்குமாறு குழுக்களிடம் கேளுங்கள்.

கட்டம் 7

ஸ்டோரிபோர்ட் மாற்றங்கள். குழுக்கள் விரும்பினால், பரிந்துரைகள் அல்லது மாற்றங்களை ஒருங்கிணைக்க ஸ்டோரிபோர்டில் மாற்றங்களைச் செய்யுங்கள்.

கட்டம் 8

பங்கேற்பு வீடியோவை அறிமுகப்படுத்துங்கள். நீங்கள் நேருக்கு நேர் அல்லது இணையத்தில் சந்தித்தால் இதை அமர்வின் முடிவில் அல்லது தனி அமர்வாக செய்யலாம்.

கட்டம் 9

அலகு 2. இல் காட்சிப்படுத்தப்பட்ட மொபைல்கள் அல்லது டேப்லெட்களில் வீடியோ பயன்முறையை எப்படி பயன்படுத்துவது என்பதை அறிமுகப்படுத்துங்கள். எப்படி வீடியோ கிளிப்களை எடுப்பது என்பதில் சமூகக் குழுவை பயிற்றுவிப்பதை ஆரம்பியுங்கள்.

கட்டம் 10

சமூக வரலாற்றின் படப்பிடிப்பு. சமூகக் குழுவினரை அவர்களின் கதை வரலாற்றைக் காட்ட அவர்களின் சமூக வரலாற்றைப் படமாக்கச் சொல்லுங்கள். இந்த செயற்பாடு கிடைக்கக்கூடிய நேரத்தை விட நீண்டதாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம், ஆனால் அலகு 2 இல் காட்டப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான பரீட்சயத்தை சமூகக் குழுவுக்கு வழங்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.

கட்டம் 11

படத்தை தொகுத்தல் எப்படி என்பதை அறிமுகப்படுத்தி, அவர்களின் சமூக வரலாற்றில் அவர்களது வீடியோக்களை தொகுக்குமாறு சமூக அணியிடம் கேளுங்கள்.

கட்டம் 12

சமூக குழுவுடன் கலந்துரையாடல். அவர்களது சமூக வரலாற்றை பதிவு செய்ததில் சமூக அணி நன்றாக செய்தது என்ன நன்றாக செய்யாதது என்ன என்பதை பின்னூட்டம் செய்ய வாய்ப்பு கொடுங்கள்.