வீடியோ-மத்தியஸ்த உரையாடல்


4. தொடர்ச்சியான ஒத்துழைப்பு

கட்டம் 5-சமூகங்களுக்கு முடிவெடுப்பவர் பதில் வீடியோக்களை திரையிடல்

சமூக வீடியோக்களுக்கான முடிவெடுப்பவர் பதில்களை திரையிட சமூகத்துடன் நேருக்கு நேர் சந்திப்பு அல்லது இணையவழி சந்திப்பு நடத்தப்பட வேண்டும். கூட்டத்திற்கு ஒரு அட்டவணை ஏற்பாடு செய்வது முக்கியம், ஒரு அறிமுகம், சமூக வீடியோக்களின் திரையிடல் (சமூக உறுப்பினர்கள் முன்பு வீடியோக்களைப் பார்க்கவில்லை என்றால் மட்டுமே இது அவசியம்) மற்றும் முடிவெடுப்பவர்களின் பதில்களைத் திரையிடுவது உள்ளடங்களாக. பின்னர் சமூகத்தால் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இது மற்றொரு சுற்று தகவல் பரிமாற்றத்தைத் தொடங்க மேலதிக வீடியோக்களின் தயாரிப்பை உள்ளடக்கியிருக்கலாம்.

As part of a process of video-mediated dialogue, this video documents the response of the Iwokrama International Centre and the Ministry of Amerindian Affairs to the community videos from the North Rupununi, Guyana. This video was taken back to communities for feedback and to continue the dialogue.


கட்டம் 6 - தகவல் பகுப்பாய்வு

செயல்முறையின் ஒரு பகுதியாக சேகரிக்கப்பட்ட தகவல்கள் சமூக வீடியோக்கள், முன் திரையிடல் கேள்வித்தாள்கள், திரையிடலின் போது கலந்துரையாடல்கள், மறுமொழி வீடியோக்கள் மற்றும் சமூகங்களுக்குத் திரும்பத் திரையிடல் ஆகியவற்றை உள்ளடக்கியது. கருப்பொருள்கள், முகாமைத்துவ நடவடிக்கைகள் மற்றும் கொள்கை பரிந்துரைகளைத் தீர்மானிக்க இந்தத் தகவல்கள் அனைத்தும் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும். முக்கிய கருப்பொருள்கள், முகாமைத்துவ  நடவடிக்கைகள் மற்றும் கொள்கை பரிந்துரைகள் பின்னர் உங்கள் சமூகம் அல்லது நீங்கள் பணிபுரியும் சமூகம் மற்றும் நீங்கள் ஈடுபட்டுள்ள முடிவெடுப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

கட்டம் 7 - தொடர்ச்சியான ஒத்துழைப்பு

ஈடுபாட்டு செயன்முறை உங்கள் சமூகம், அல்லது நீங்கள் பணிபுரியும் சமூகம் மற்றும் முடிவெடுப்பவர்களுக்கு இடையே ஒரு தொடக்க புள்ளியை உருவாக்கியிருக்க வேண்டும். இந்த ஒத்துழைப்பு தொடரப்பட்டு கட்டமைக்கப்படுவது முக்கியம். ஒரு கால அட்டவணையை ஒப்புக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் தொடர்பு கொள்ளும் விதம் முக்கியம், இதனால் ஒத்துழைப்பு சீராக முன்னோக்கி செல்லும். சமூகத்திற்குச் சொந்தமான தீர்வு காணொளிகளைத் தொடர்ந்து தயாரிப்பது, சமூகம் எதிர்கொள்ளும் புதிய சவால்களை அடையாளம் காண்பது மற்றும் கண்காணிப்பு முடிவுகளை வழங்குவது நல்லது.

Close up of two people laughing as they are sat behind a desk at a meeting between community members and decision makers