வீடியோ-மத்தியஸ்த உரையாடல்


2. முதல் படிகள்

கட்டம் 1 - வீடியோ தயாரிப்பு

அலகு 6 ல் தயாரிக்கப்படும் சமூகத்திற்கு சொந்தமான தீர்வுகள், சமூக சவால்கள் மற்றும் கண்காணிப்பு முடிவுகளின் வீடியோக்கள் முடிவெடுப்பவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக சமூகங்களால் தயாரிக்கப்படுகின்றன.

These videos were made by community researchers in the North Rupununi, Guyana about traditional knowledge, its role in biodiversity conservation, and the relationship between Indigenous communities and the Iwokrama International Centre who manages the Iwokrama Forest protected area.

Videos: https://vimeo.com/showcase/8676236

கட்டம் 2 - முன் திரையிடல் தயாரிப்பு

முடிவெடுப்பவர்களுக்கு சமூக வீடியோக்களைத் திரையிடுவதற்கு முன், உங்கள் சமூகத்தோடு அல்லது நீங்கள் பணிபுரியும் சமூகத்துடன் சமூக வீடியோக்களிலிருந்து எழும் ஏதேனும் சிக்கல்கள் அல்லது கருப்பொருள்களைத் தெளிவுபடுத்துவதற்கு முன் திரையிடல் கலந்துரையாடல் செய்வது பயனுள்ளது. பின்வரும் கேள்விகளை கலந்துரையாடலை வடிவமைக்கவும் மற்றும் ஈடுபாட்டினை வழிநடத்தவும் வழிகாட்டியாகப் பயன்படுத்தலாம் (ஷோ 2017). தடித்த எழுத்தில் உள்ள கேள்விகள் பெரும்பாலும் கருத்தில் கொள்ள மிகவும் முக்கியமானவை:

  • ஈடுபாட்டின் நோக்கம் என்ன? உங்கள் சூழ்நிலையின் யதார்த்தத்துடன் முடிவெடுப்பவர்களை இணைப்பதோ, ஒரு செய்தியை வழங்குவதோ, அவர்களை சிந்திக்கத் தூண்டுவதோ அல்லது அவர்களைச் செயல்படத் தூண்டுவதோ உங்கள் நோக்கமா?
  • ஈடுபட மிகவும் பொருத்தமான முடிவெடுப்பவர்களை நீங்கள் எவ்வாறு இனங்கண்டுகொள்வீர்கள்? மாற்றத்தை செயற்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களை நீங்கள் கண்டுபிடிக்க முடியுமா?
  • செல்வாக்குமிக்க பதவிகளில் உங்களுக்கு தொடர்புகள் இருக்கிறதா, அவை உங்கள் பிரச்சனையை ஆதரித்து உறவுகளை வளர்க்க உதவுமா? இல்லையென்றால், உங்களுக்கு ஆதரவளிக்கும் நபர்களை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிப்பீர்கள்?
  • நீங்கள் எப்படி முடிவெடுப்பவர்களை அழைத்து அவர்களுடன் நீங்கள் எவ்வாறு கலந்துரையாடுவீர்கள் என்பதை விளக்குவீர்கள், இதனால் அவர்கள் எதிர்பார்ப்பதை அறிந்து கொள்ள அவர்கள் தூண்டப்படுகிறார்கள்?
  • உங்கள் சமூக உறுப்பினர்கள் இதனுடன் ஈடுபடுவார்களா அல்லது அவர்கள் சார்பாக யாராவது இருப்பார்களா?
  • வெளிப்புற பங்காளர்களிடமிருந்து (எ.கா. தேசிய மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், திட்ட இடைத்தரகர்கள்) உதவி பெறுவதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
  • முடிவெடுப்பவர்களுடன் நீங்கள் எவ்வாறு தொடர்புகொள்வீர்கள்? நீங்கள் பரஸ்பர நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் கட்டியெழுப்புதல் நன்று, தேவைப்பட்டால், அவர்களிடம் உண்மையைப் பேசுகிறீர்களா அல்லது விளக்கம் கோருகிறீர்களா?
  • எதிர்மறை அல்லது எதிர்பாராத எதிர்வினைகள் இருக்க வாய்ப்பு உள்ளதா? பாதிக்கப்படக்கூடிய சமூக உறுப்பினர்களுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களை நீங்கள் எவ்வாறு நிறுத்துவீர்கள்?
  • எதிர்கால ஒத்துழைப்புகளை உருவாக்க நீங்கள் எப்படி ஒரு ஆரம்ப பரிமாற்றத்தை உருவாக்க முடியும்?
  • பரிமாற்றத்தின் போது முடிவெடுப்பவர்கள் அளித்த வாக்குறுதிகளை பின்தொடர்வதற்கான உங்கள் திட்டங்கள் என்ன?
  • சமூகம் தலைமையிலான மாற்றத்தை ஆதரிக்க முடிவெடுப்பவர்களின் பங்கில் நீங்கள் எவ்வாறு செயற்திறமான ஈடுபாட்டை ஊக்குவிக்க முடியும்?