வீடியோ-மத்தியஸ்த உரையாடல்


3. திரையிடல் நிகழ்வு

அடுத்து சமூக முன்வைப்பாளர்களின் வெவ்வேறு பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் தெளிவாக இருப்பதை உறுதி செய்ய ஒரு திரையிடல் அட்டவணையை தயாரிப்பது முக்கியம். திரையிடலுக்கு முன்னதாக முடிவெடுப்பவர்களுக்கு, நீங்கள் விவாதிக்க விரும்பும் தலைப்பைப் பற்றி, வீடியோக்களில் வரும் கருப்பொருள்களின் தற்போதைய அறிவு மற்றும் கருத்துக்களை மதிப்பிடுவதற்கு தொடர்ச்சியான கேள்விகளை உருவாக்குவதும் பயனுள்ளதாக இருக்கும்.

This video provides an overview of collating the videos made by community researchers in the North Rupununi, Guyana and showing them to the decision-makers.


கட்டம் 3 - வீடியோ திரையிடல் நிகழ்வு

திரையிடலானது ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பில் அல்லது இணையவழி சந்திப்பின் மூலம் நேருக்கு நேர் இருக்க முடியும். திரையிடலின் குறிக்கோள் (பிரச்சினைகள்/கவலைகள் பற்றிய பரஸ்பர புரிதலை உருவாக்குதல் மற்றும் முடிவெடுப்பவர்களை வீடியோக்கள் தொடர்பில் செயற்பட ஊக்குவித்தல்) மற்றும் செயன்முறையின் ஒரு சுருக்கத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறிய அறிமுகத்துடன் கூட்டம் தொடங்க வேண்டும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் வீடியோக்கள் மற்றும் அவற்றில் உள்ளடக்கப்பட்ட தலைப்புகள் பற்றிய கேள்விகளைக் கேட்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Photo of a video screening event to decision makers with people sat in the foreground and the video screen in the background

ஒரு வீடியோவை எவ்வாறு பதிவு செய்வது என்று அறிவுறுத்தி, பங்கேற்பு வீடியோ செயன்முறையை நன்கு அறிந்த முடிவெடுப்பவர்களைப் பெற ஒரு குறுகிய பயிற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பயிற்சியின் நோக்கம் அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதற்கும், நிறுவனத்தில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி கொஞ்சம் பேசுவதற்குமாக இருக்க வேண்டும்.

இடையில் விவாதத்தை அனுமதிக்கும் வகையில் சமூக வீடியோக்கள் ஒரு நேரத்தில் ஒன்றாக திரையிடப்பட வேண்டும். கூட்டத்தில் கலந்து கொள்ளும் முடிவெடுப்பவர்களுக்கு, சமூக வீடியோக்களில் ஆவணப்படுத்தப்பட்டவர்களின் பிரச்சினை (கள்) மற்றும் பார்வைகளைப் பார்க்கும்போது மற்றும் கேட்கும்போது சிந்தனை வழிகாட்ட உதவும் கேள்விக்கொத்து (அட்டவணை-எடுத்துக்காட்டு கேள்விகள், கீழே) வழங்கப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டு கேள்விகள் அட்டவணை

Example prompt questions for video-mediated dialogue screening events

கட்டம் 4-முடிவெடுப்பவர் பதில்களை ஆவணப்படுத்துதல்

திரையிடல் நிகழ்வின் முடிவில், சமூக வீடியோக்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்களின் பதில்களை படமாக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இவை ஒரு வீடியோவில் தொகுக்கப்பட வேண்டும், மேலும் ஒரு வரைவு பங்கேற்பாளர்களுடன் கருத்துக்காக பகிரப்பட வேண்டும் (திரையிடல்/நேர்காணலுக்குப் பிறகு 5 வது நாளுக்குள்). சமூகத்திற்கு விநியோகிக்க வீடியோவின் இறுதி பதிப்பை உருவாக்க பின்னூட்டம் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.