-
செயற்பாடு 1
உங்கள் சமூகத்திற்கு என்ன சுற்றுச்சூழல் சவால்கள் ஏற்படுகின்றன? என்ன சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்பட்டது?
அறிமுகம்
சுற்றுச்சூழல் கண்காணிப்பு என்பது தற்போதைய நிலை மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் புரிந்துகொள்ளும் ஒரு வழியாகும். நீர், நிலம், காற்று, தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு சுற்றுச்சூழல் மாற்றம் ஏற்படலாம். சுற்றுச்சூழல் நிலைமைகள் மற்றும் மாற்றங்களைப் புரிந்துகொள்வது முகாமைத்துவ நடவடிக்கைகளை ஆதரிக்கவும், கொள்கை அபிவிருத்தி மற்றும் அதன் செயற்பாட்டை ஆதரிக்கவும், சமூகம், அரசு மற்றும் பொதுமக்களுடன் பகிர்வதற்கான தகவல்களை உருவாக்கவும் உதவும். சுற்றுச்சூழல் தரவுகளை சேகரிப்பது ஏன் முக்கியம், அதனைப் பயன்படுத்தக்கூடிய பல்வேறு முறைகள், கண்காணிப்பு ஆய்வை எவ்வாறு திட்டமிடுவது மற்றும் தகவல்களை எவ்வாறு பகுப்பாய்வு செய்வது மற்றும் பகிர்வது என்பதை அறிமுகப்படுத்துவதே இந்த அலகின் நோக்கமாகும்.