4.2 சுற்றுச்சூழல் தரவுகளைச் சேகரிக்க நீங்கள் என்ன பயன்படுத்தலாம்
1. பேனா மற்றும் காகிதம் மூலம் அவதானிப்பு மற்றும் பதிவு
ஒரு இடத்தில் சுற்றுச்சூழல் மாற்றத்தை தொடர்ந்து அவதானிப்பது மற்றும் எந்த மாற்றத்தையும் பேனா மற்றும் காகிதத்தில் பதிவு செய்வது தகவல்களை சேகரிக்க ஒரு பயனுள்ள நுட்பமாகும். உதாரணமாக, வனவிலங்கு இனங்களின் இருப்பு அல்லது இல்லாமை, வாழ்விடம் அல்லது நில பயன்பாட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்கள், திண்மக்கழிவு மாசுபாட்டின் இருப்பு அல்லது இல்லாமை, மாசுபாட்டைக் குறிக்கும் நீர் நிறத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கவனித்து புரிந்து கொள்ளலாம். நதி அல்லது நீர் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வது வெள்ளம் அல்லது வறட்சியைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
இந்த நுட்பத்துடனான ஒரு நல்ல யுக்தி ஒரு பதிவுத் தாளை உருவாக்குவது ஆகும், எனவே ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு கண்காணிப்பை மேற்கொள்ளும்போது அதே வகை தரவை சேகரிப்பீர்கள். பேனா மற்றும் காகித பதிவு தாளைப் பயன்படுத்தி சேகரிக்கப்பட்ட தரவு பின்னர் மைக்ரோசாப்ட் எக்செல் போன்ற கணினி மென்பொருள் தொகுப்பில் உள்ளிடப்பட்டு, காலப்போக்கில் ஏதேனும் மாற்றங்களைக் காட்டும் அட்டவணைகள் அல்லது வரைபடங்களை உருவாக்க பகுப்பாய்வு செய்யலாம்.
பின்பற்ற வேண்டிய கட்டங்கள்:
- ஒரு பதிவுத் தாளை உருவாக்கவும்
- பதிவுத் தாளில் அவதானித்து பதிவு செய்யவும்
- பதிவு செய்யப்பட்ட தரவை பொருத்தமான கணினி மென்பொருளில் உள்ளிடவும்
- பெறுபேறுகளைப் பார்த்து, ஒரு வரைபடத்தை அல்லது தரவு அட்டவணையை உருவாக்கவும்