-
செயற்பாடு 1
உங்கள் சமூகத்தில், செயற்பாட்டுக் கற்றல் அணுகுமுறையைப் பயன்படுத்தி தற்போதைய எந்த சிக்கல்கள் தீர்க்கப்பட முடியும்? ஒரு பிரச்சினைக்கு, நான்கு செயற்பாட்டுக் கற்றல் கட்டங்களில் நீங்கள் செய்யக்கூடிய பல்வேறு செயற்பாடுகளை எழுதுங்கள்; திட்டம், செயற்பாடு, கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு செய்தல். ஒரு திட்டத்தை எவ்வாறு இற்றைப்படுத்தலாம் மற்றும் மேம்படுத்தலாம் என்பதைக் காட்ட நீங்கள் செயற்பாட்டுக் கற்றலின் இரண்டு சுழற்சிகளைச் சேர்க்க வேண்டி இருக்கலாம்.
உதாரணமாக, உங்கள் சமூகம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை ஒரு ஏரியின் நீர் மாசுபாடு ஆகும். ஒரு சமூகமாக நீங்கள் செய்யக்கூடிய நடவடிக்கைகள்:
- திட்டம் - ஏரியைச் சுற்றியுள்ள மக்களுடன் பேசுவதன் மூலம் மாசுபாட்டின் மூலங்களை அடையாளம் காண ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்;
- செயற்பாடு - மாசு மூலங்களைக் கண்டறிய பல்வேறு வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து மக்களுடன் நேர்காணல்களை மேற்கொள்ளுங்கள்;
- கண்காணிப்பு - மாசு மூலங்கள் அனைத்தையும் நீங்கள் அடையாளம் கண்டுள்ளீர்களா என்று பார்த்து திட்டம் செயற்படுகிறதா என்பதைக் கவனிக்கவும்;
- மதிப்பீடு - அனைத்து மாசு மூலங்களையும் கண்டறிவதில் நேர்காணல்கள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தன என்பதை மதிப்பீடு செய்யுங்கள்;
- திட்டம் - நீர் தர கண்காணிப்பு போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் மாசு ஆதாரங்களை அடையாளம் காண உங்கள் திட்டத்தைத் திருத்தவும்.