சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள்

1. சமூக நிலைப்பேற்றுத்தன்மையை அறிமுகப்படுத்துதல்

நிலைப்பேற்றத்தன்மை அல்லது ஒப்பேறு நிலை என்பது உயிர்வாழ்வது, ஆரோக்கியமாக இருப்பது மற்றும் செழிப்படைவதாகும். இருப்பினும், ஒரு சமூகத்திற்கு இது எளிதானது அல்ல. சில நேரங்களில் நிலைமைகள் நிலையானது, சில நேரங்களில் நிலைமைகள் இயல்பிலிருந்து மாறுபடும், சில நேரங்களில் விடயங்கள் என்றென்றும் மாறும். எனவே ஒரு சமூகம் தொடர்ந்து எதிர்வினையாற்ற வேண்டும் மற்றும் அதன் சூழலுக்கு ஏற்ப மாற வேண்டும். இந்த சூழல் வானிலை, தாவரங்கள் அல்லது விலங்குகள் போன்ற பௌதீக சூழ்நிலையாக இருக்கலாம். இருப்பினும், சுற்றுச்சூழல் பொருளாதார, கலாச்சார, அரசியல், சட்ட மற்றும் சமூக காரணிகளையும் உள்ளடக்கியது. பரந்த சூழலின் பல்வேறு அம்சங்களைச் சமாளிக்க சமூகங்கள் உத்திகளை உருவாக்க வேண்டும் மேலும் அதிகரித்து வரும் பல்வேறு சவால்களைச் சமாளிக்க அவர்களின் அனைத்து உயிர்வாழும் உத்திகளும் கையில் இருப்பதை உறுதி செய்ய அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

கீழேயுள்ள சமூக நிலைப்பேற்றுத்தன்மை வரைபடம் தென் அமெரிக்காவின் கயானா முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த சமூகங்கள் தொலைதூர காடு, ஈரநிலம் மற்றும் சவன்னா பகுதிகளில் வாழ்கின்றன, பெரும்பாலும் காடுகளில் வாழ்வாதார விவசாயத்தை நம்பியுள்ளன, வேட்டை மற்றும் உணவுக்காக மீன்பிடித்தல் மற்றும் பல்வேறு கலாச்சார மற்றும் மொழி பாரம்பரியங்களைக் கொண்டுள்ளன.


கீழேயுள்ள பட்டியலில் உள்ள ஒவ்வொரு வகை சமூக நிலைப்பேற்றுத்தன்மைக்கும், பழங்குடி சமூகங்கள் தங்களுக்கு முக்கியமான பல்வேறு உயிர்வாழும் உத்திகளை அடையாளம் கண்டுள்ளன. இவற்றில் சில ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுக்கு பொருத்தமானவையாக இருக்கலாம், ஆனால் ஒரு சமூகத்தில் பலவிதமான உயிர்வாழும் உத்திகள் உள்ளன என்பதைக் காட்டுவதே வரைபடத்தின் நோக்கமாகும். இது சமூகங்களுக்குள் உள்ள பதட்டங்களை/கருத்து வேறுபாடுகளைக் காட்ட உதவுகிறது. உதாரணமாக, அடிப்படை இருப்புக்கான வளங்களை  நீங்கள் சேகரித்தால், மற்ற சமூகங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு குறைவான வளங்கள்  உள்ளன என்று அர்த்தம். உங்களின் பல உத்திகள் மாற்றத்தை எதிர்க்கின்றன மற்றும் உங்கள் சமூகத்தின் அடையாளத்தை பராமரிப்பதையே முக்கியமாக செய்கின்றன  என்றால், இது புதிய மாற்றங்களுக்கு பின்பற்றுவதற்காக வளங்களை குறைக்கலாம். ஒரு சாத்தியமான அல்லது ஆரோக்கியமான சமூகம் என்பது பல்வேறு சமூக நிலைப்பேற்றுத்தன்மை வகைகளுக்கு இடையே உத்திகளின் சமநிலையை பேணுவதொன்றாகும்.

இலங்கையின் கொழும்பில் நகர்ப்புற ஈரநிலங்களுடன் வாழும் ஒரு சமூகக் குழுவால் பயன்படுத்தக்கூடிய பல்வேறு உயிர்வாழும் உத்திகளுக்கு கீழே உள்ள சமூக நிலைப்பேற்றுத்தன்மை வரைபடம் ஒரு எடுத்துக்காட்டு.

Illustration of community survival strategies

நிலைப்பேற்றுத்தன்மையின் வகைகள்

1. நமது அடிப்படைத் தேவைகளை நாம் எவ்வாறு பூர்த்தி செய்வது? –சாதாரண சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் இருக்க, உங்களுக்கு உணவு, நீர், தங்குமிடம் மற்றும் எரிபொருள் போன்ற அடிப்படை வளங்கள் தேவை.

2. மற்றவர்களுடன் நாம் எவ்வாறு வேலை செய்கிறோம்? -பிற சமூகங்கள் மற்றும்/அல்லது நிறுவனங்கள் மற்றும் சமூகத்திற்கு வெளியே உள்ள நிறுவனங்களுடன் இணைந்து வாழ, உங்களுக்கு நல்ல உறவுகள் தேவை.

3. நம் அடையாளத்தை நாம் எவ்வாறு பேணுவது? - சூழலில் தற்காலிக மாற்றங்களை எதிர்த்து நிற்க, நீங்கள் மரபுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

4. புதிய சவால்கள் மற்றும் தாக்கங்களுக்கு நாம் எவ்வாறு இசைவடைந்துள்ளோம்? - சூழலில் பெரிய மற்றும் நிரந்தர மாற்றங்களுக்கு ஏற்ப, புதிய விடயங்களைச் செய்ய நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

5. நமக்கு எது தெரிவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது? - மிகவும் மாறுபட்ட சூழலில் நெகிழ்வாக இருக்க, உங்களுக்கு அதிக தெரிவுகள் இருக்க வேண்டும்.

6. ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வினைத்திறனாக இருக்க நமக்கு எது உதவுகிறது? - சூழலில் வளங்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது வெற்றிபெற, நீங்கள் வினைத்திறன் மிக்கவராக மாற வேண்டும்.