சமூக ஈடுபாடு

1. ஒரு ‘நல்ல’ வசதிப்படுத்துனரை உருவாக்குவது எது?

A picture of someone standing by a screen and facilitating a discussion with a group of people

கீழேயுள்ள பட்டியல் ஒரு நல்ல வசதிப்படுத்துனரின் சில முக்கிய பண்புகளைக் காட்டுகிறது:

  • உங்கள் தயாராதல் பணிகளைச் செய்யுங்கள்: உங்கள் சமூகம் அல்லது நீங்கள் ஈடுபடும் சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்
  • நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை தெளிவாக விளக்கவும்
  • எதிர்பார்ப்புகளை நிர்வகிக்கவும்: சாத்தியமான நன்மைகளை தெளிவாக விளக்கவும்
  • பங்கேற்பாளர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்: அவர்களின் பெயர்களையும் பின்னணியையும் கற்றுக்கொள்ளுங்கள்
  • பங்கேற்பை ஊக்குவிக்கவும்: பாகுபாடு காட்டாதீர்கள் ஆனால் அனைவரும் பங்கேற்க வசதி செய்யுங்கள்
  • சுறுசுறுப்பாக செவிமடுப்பவராக இருங்கள்: உங்கள் மொழியில் யாராவது பேசாவிட்டாலும் எப்போதும் செவிதாழ்த்துங்கள் மற்றும் கவனம் செலுத்துங்கள்
  • கவனத்துடன் இருங்கள்: குழுவினுள் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் எவ்வாறு பங்கேற்கின்றார்கள் பற்றி அவதானமாக  இருங்கள்
  • விழிப்புணர்வோடு  இருங்கள்: சமூக உறுப்பினர்களை எப்போதும் ஊக்குவித்து, ஆதரிக்கவும்
  • பொருத்தமான மொழி மற்றும் வழிமுறையைப் பயன்படுத்துங்கள்: பங்கேற்பாளர்களுக்கு சௌகரியமான மொழி மற்றும் உடல் மொழியைப் பயன்படுத்துங்கள்
  • நடுநிலையாக இருங்கள்: நீங்கள் அனைத்து பார்வைகளையும் வசதிப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
  • உள்ளூர் விதிகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி நடந்து கொள்ளுங்கள்: உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் முடிவெடுக்கும் அணுகுமுறைகளை மதிக்கவும்
  • பதிவு: கலந்துரையாடப்பட்டவற்றை ஆவணப்படுத்துவதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இதன்மூலம் அதை ஏனையவர்களுடன் பகிர  முடியும். முக்கியமான விடயங்கள் நினைவுபடுத்தப்படுவதையும் உறுதிசெய்துகொள்ளுங்கள்.
  • பின்னூட்டம் மற்றும் கேள்விகள்: பின்னூட்டத்தை கேட்டு பெற்றெடுக்கவும்,    மற்றும் சமூக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும்