சமூக ஈடுபாடு
2. சமூக ஈடுபாட்டு
1. சமூக உறுப்பினர்களைத் தெரிவுசெய்தலும் அறிந்து கொள்தலும்
ஈடுபாட்டின் சரியான வகை பிந்திய அலகுகளில் இன்னும் விரிவாக கலந்துரையாடப்படுகிறது ஆனால் பெரும்பாலான ஈடுபாடு ஒரு சமூக சந்திப்பு அல்லது ஈடுபாடுட்டுடன் ஆரம்பிக்கிறது, அங்கு நீங்கள் எந்த வகையான ஈடுபாட்டைத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதை விளக்குவீர்கள். எனவே சமூக ஈடுபாட்டிற்கு முன் பங்கேற்புக்கு என்ன தேவை என்பதைக் குறிப்பிடுவது முக்கியமானதாகும்.
சமூக ஈடுபாட்டின் முன், ஈடுபடவேண்டிய மிகவும் பொருத்தமான நபர்களைத் தேர்ந்தெடுக்க, அனுபவம், குறிப்பிட்ட மொழித் திறன், தகவல் தொழில்நுட்பத் திறன், பாலினம் அல்லது வயது போன்ற அளவுகோல்களை நீங்கள் பயன்படுத்தலாம். மொழி குறிப்பாக முக்கியமானது, எனவே நீங்கள் அனைத்து உள்ளூர் மொழிகளையும் பேச்சுவழக்குகளையும் பேசவில்லை என்றால் உங்களுக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர் இருக்க வேண்டும். சமூகத்தின் பரந்த பிரதிநிதித்துவத்தை முடிந்தவரை தேடுங்கள். வயது (முதியவர்கள், இளைஞர்கள்), பாலினம், பூர்வீகம் (இனம், இடம்), சமூக நிலை, மதம், வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட குழுக்களை வெளிப்படையாக அடையாளம் கண்டு வேறுபடுத்துவது நல்லது.
பங்கேற்பாளர்கள் முன் வந்தவுடன், நீங்கள் அவர்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதை வசதிப்படுத்த கீழே உள்ள கேள்விகளைப் பயன்படுத்தவும்:
ஆரம்பிப்பதற்கு முன் சமூக உறுப்பினர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள்:
- உங்கள் பெயர் என்ன?
- நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
- உங்களுக்கு என்ன திறமைகள் மற்றும் அனுபவங்கள் உள்ளன?
- ஈடுபாட்டிலிருந்து நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்/எதிர்பார்க்கிறீர்கள்?
- உங்கள் ஆர்வங்கள் என்ன?
- உங்கள் வயது என்ன?
- நீங்கள் என்ன மொழிகள்/பேச்சுவழக்குகள் பேசுகிறீர்கள்?
2. எதிர்கொள்ளக்கூடிய சாத்தியமான பிரச்சினைகள் என்ன? நெறிமுறை கரிசனைகள்
நெறிமுறைகள் என்பது உரிமைகள், கடமைகள், சமுதாயத்திற்கான நன்மைகள் மற்றும் நேர்மையின் அடிப்படையில் நாம் என்ன செய்கிறோம் என்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் நியாயமான மற்றும் நன்கு நிறுவப்பட்ட சமநிலையான, நேர்மறையான அணுகுமுறை மற்றும் ஒப்புதலைக் குறிக்கிறது. நெறிமுறைகள் சமூக ஈடுபாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகும். ஒரு விதத்தில், நெறிமுறைகள் என்பது சமூக ஈடுபாடு ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களைத் தவிர்க்கப் பின்பற்ற வேண்டிய நடத்தைகள் மற்றும் செயன்முறைகளின் பட்டியலாகும்.
பின்வருபவை சில நெறிமுறை வழிகாட்டுதல்கள்:
- பங்கேற்பு – சிலர் உங்களுடன் ஈடுபடுவதில் ஏதேனும் தடையை உணரலாம், எனவே இதை நீக்குவதற்கு பல்வேறு பங்கேற்பு நுட்பங்களைப் பயன்படுத்தவும் (மேலும் விவரங்கள் பாடநெறி 2 இல்).
- எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தாதீர்கள் – ஈடுபாட்டின் நோக்கங்கள் சமூக உறுப்பினர்களால் முழுமையாக புரிந்து கொள்ளப்படுவதையும் தவறான எதிர்பார்ப்புகள் கட்டமைக்கப்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்தவும்.
- ஒப்புதல் – எந்தவொரு வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கப்படுவதற்கு முன்பு அனைத்து சமூக உறுப்பினர்களிடமும் அவர்களுடைய ஒப்புதலைக் கோருவது முக்கியம். இந்த ஒப்பந்தத்தைப் பெற தகவலறிந்த ஒப்புதல் படிவத்தைப் பயன்படுத்தலாம் - (உதாரணத்தைக் காட்டுங்கள்).
- உரித்துரிமை – ஆரம்பிப்பதற்கு முன், தரவின் உரிமை மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். தரவு யாருக்கு சொந்தமானது மற்றும் அதை எங்கு அணுகலாம் (சேமிப்பு இடம்) என்பதை நிறுவுவது முக்கியம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது ஒரு கிராமம்/சமூகம் சார்ந்த அமைப்பால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ஒரு சமூகமாக இருக்கும். எந்தவொரு முக்கியமான தனிப்பட்ட தரவும் பெயர்களால் அடையாளம் காணப்படக்கூடாது என்பதை நினைவில் கொள்க. பொதுவில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் கிரியேட்டிவ் காமன்ஸ் (CC BY-NC-ND) என்ற உலகளாவிய பொதுக்கள உரிமங்களின் கீழ் உரிமம் பெறப்படும் என்பதில் தெளிவாக இருங்கள்/ தெளிவாக விளக்குங்கள். அசல் பொருட்களின் எந்தவொரு விநியோகமும் தரவை உண்மையில் உருவாக்கியர்வகளுக்கு அறியப்படுத்திய பின்பே மேற்கொள்ள முடியும் என்பதை இது குறிக்கிறது, குறித்த பொருள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்படாது, மேலும் பொருள் ரீமிக்ஸ் செய்யப்பட்டால், அல்லது வேறேனும் வகையில் மாற்றப்பட்டால் அதை அவ்வாறே விநியோகிக்க முடியாது.
- அனுமதிகள் – ஈடுபாட்டைத் தொடங்குவதற்கு முன் பொருத்தமான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது பொதுவாக சமூகத்துடன் முன் கலந்தாலோசனை மற்றும் அவர்களிடமிருந்து எழுத்துமூல ஒப்புதலை உள்ளடக்கியது. http://www.fao.org/indigenous-peoples/our-pillars/fpic/en/
- ஈடுபாட்டுக்கான கட்டணம் – சமூக உறுப்பினர்கள் தங்கள் ஈடுபாட்டிற்கு நேரடி கட்டணம் பெறமாட்டார்கள் என்பதில் தெளிவாக இருங்கள்.
- 18 வயதுக்கு குறைவான பங்கேற்பாளர்கள் – ஈடுபாட்டின் போது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இருக்கக்கூடும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுடனான எந்தவொரு ஈடுபாடும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமூக பெரியவர்களின் முன்னிலையிலும் பெற்றோர்கள்/பெரியவர்களின் முன் ஒப்புதலுடனும், மேலே விவரிக்கப்பட்ட அதே ஒப்புதல் மற்றும் தரவு உரிமை வழிகாட்டுதலின் கீழும் செய்யப்பட வேண்டும்.
3. வேடிக்கையாகவும் ஈர்க்கக்கூடியதாகவும் ஆக்குதல்!
சமூக ஈடுபாட்டின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று, அது சலிப்பாகவும் சாதாரணமாகவும் இல்லாமல் வேடிக்கையாகவும் ஈடுபாட்டுடனும் இருக்க வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில், இந்த பாடத்திட்டத்தில் பயன்படுத்தப்படும் பல அணுகுமுறைகள் மற்றும் நுட்பங்கள் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் கலந்துரையாடலைத் தூண்டுவது மட்டுமல்லாமல், அவை வேடிக்கையாகவும், பங்கேற்பாளர்களிடையே நிறைய சிரிப்பையும் 'நல்ல உணர்வை' உருவாக்கும் (செயற்பாடுகளுக்கான இணைப்பு). இதை அடைவதற்கு, ஈடுபாடு முழுவதும் பல விளையாட்டுகள் பயன்படுத்தப்படலாம் - இவை ஐஸ் பிரேக்கர்கள் மற்றும் எனர்ஜிஸர்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு அமர்வின் தொடக்கத்தில் சமூக உறுப்பினர்கள் ஒருத்தரை ஒருத்தர் தெரிந்துகொள்ளவும், சௌகரியத்தை உணரவும், செயற்பாட்டின் கருப்பொருளை அறிமுகப்படுத்தவும் ஐஸ் பிரேக்கர்கள் உதவலாம். எனேர்ஜைசர்கள் எனப்படுவத சமூக உறுப்பினர்களை எழுச்சியூட்டுவதற்கான விளையாட்டுகள், குறிப்பாக மதிய உணவுக்குப் பிறகு அமர்வுகள் தொடங்கும் போது அல்லது நீண்ட நேரம் உட்கார்ந்து பங்கெடுக்கும் போது நடத்தப்படுகிறது.
4. பின்னூட்டம் மற்றும் மதிப்பீடு
ஈடுபாட்டின் போது பங்கேற்பாளர்கள் உண்மையில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்த அடிக்கடி பின்னூட்டம் மற்றும் மதிப்பீட்டை வைத்திருப்பது முக்கியம். இது இருபுறமும் கற்றுக்கொண்டவற்றின் சுருக்கத்தையும் வழங்குகிறது. கடைசியாக உங்கள் சொந்த அனுபவங்களைப் பற்றி சிந்திக்க மறக்காதீர்கள், செயற்பாடுகள் நடந்தமை பற்றியும் எப்படி, எங்கே மாற்றப்பட வேண்டும் என்பதை அடையாளம் காணவும் நீங்கள் எப்படி நினைத்தீர்கள் என்று சிந்தியுங்கள். முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் மற்றும் ஈடுபாட்டு நடவடிக்கைகளின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கும் முழு சமூக ஈடுபாட்டிலும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு தொடர்வதும் முக்கியம்.
Now, after having finished this book, make sure to go back to the main page and complete activity 2.