சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள்
2. சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை அறிமுகப்படுத்துதல்
சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் என்பது ஒரு சமூகத்திற்குள் ஏற்கனவே காணப்படும் திறன்களை ஊக்குவிக்கும் ஒரு அணுகுமுறையாகும். இந்த வகை அணுகுமுறை பலத்தின் அடிப்படையிலான அணுகுமுறை (strengths-based approach) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு சமூகத்தினதும் சமூகத்தில் உள்ள தனிநபர்களினதும் திறன்கள், அறிவு, உறவுகள் மற்றும் ஆற்றல்களை மையமாகக் கொண்டு ஆராய்கிறது.
இந்த எண்ணக்கரு சமூகத்திலிருந்து நேர்மறையான நடைமுறைகளை அடையாளம் கண்டு அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் எதிர்மறையான நடத்தைகளில் கவனம் செலுத்துவதோடு அவற்றை சமூகத்தின் வெளியில் இருந்து தோன்றிய தீர்வுகளுடன் சரிசெய்ய முயற்சிப்பதன் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள சவால்களை சிறப்பாக தீர்க்க முடியும் என்ற அவதானிப்புகளிலிருந்து வருகிறது. (அட்டவணை 1).
சமூகத்திற்கு சொந்தமான தீர்வுகள் சமூகங்களால் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்படும் நடைமுறைகள். இந்தத் தீர்வுகள் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் சமூகங்களின் நல்வாழ்வுக்குப் பங்களிக்கின்றன. அவை சமூகங்களுக்காக, சமூகங்களால், சமூகங்களில், பிற பங்குதாரர்களிடமிருந்து சிறிதளவு செல்வாக்குடன் தோற்றம் பெற்று, வளர்ச்சியடைந்து, நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவை சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நியாயமானவை என்பதுடன், அவை சுற்றுச்சூழலை எதிர்மறையாக பாதிக்காது.
"சமூகத்திற்கு சொந்தமான தீர்வு" என்றால் என்ன
- சமூகத்திற்கு அது தேவை
- சமூகம் அதைச் செய்கிறது
- சமூகம் அதைக் கட்டுப்படுத்துகிறது
- இதன் மூலம் சமூகம் பயனடைகிறது
- இந்தத் தீர்வு நியாயமானது
- இந்தத் தீர்வு சுற்றுச்சூழலுக்கு நன்மையானது
- தீர்வு தன்னிலேயே தங்கியிருப்பதுடன், நீண்டகால வெளிப்புற ஆதரவை சார்ந்தது அல்ல.
சமூகத்திற்குள் இருந்து பல சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகள் உருவாக்கப்பட்டாலும், கருத்துகளும் வெளியில் இருந்து வெளிப்படலாம். இவை சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாற்றியமைக்கப்பட்டால், அவை சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளாக மாறும். எவ்வாறாயினும், இந்த கண்டுபிடிப்புகள் சமூக தீர்வுகளை குறைத்து மதிப்பதை விட, சமூகத்தின் பலத்திற்குப் பொருந்த வேண்டும் மற்றும் ஆதரிக்க வேண்டும்.
ஒரு சமூகத்தின் உணவுப் பாதுகாப்புக்காக உணவை இறக்குமதி செய்வது ஒரு தற்காலிக தீர்வை வழங்கலாம் ஆனால் அது தங்கிவாழும் நிலையையும் வலுவிழந்த தன்மையையும் உருவாக்குகிறது. உணவுப் பாதுகாப்புக்கான உள்ளூர் தீர்வுகளை ஊக்குவிப்பது (உணவு உற்பத்திக்கான உள்ளூர் நுட்பங்கள் மற்றும் அறிவு போன்றவை) வலுவூட்டலாகும் என்பதுடன் அது சுயாதீனத்தன்மையை ஊக்குவிக்கிறது.
சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை ஏன் பதிவு செய்து பகிர வேண்டும்?
சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை பதிவு செய்யவோ அல்லது வெளி பார்வையாளர்களுக்கு அவற்றைக் காண்பிக்கவோ இல்லாமல் நீங்கள் எளிதாக அடையாளம் காணலாம். எனினும் காட்சிப் பதிவு மற்றும் பகிர்வு பின்வரும் நன்மைகளை வழங்குகிறது:
- ஒரு சமூகத்திற்குள் ஒரு தீர்வு நன்றாக வேலை செய்தால், இதேபோன்ற சவாலை எதிர்கொள்ளும் மற்றொரு சமூகத்திற்கு இது ஒரு உத்வேகமாக பயன்படுத்தப்படலாம்.
- ‘பிற சமூகங்களுடன் நேரடியாகப் பகிர்ந்துகொள்ளும் சமூகங்கள்’ நிபுணர் தலைமையிலான செயல்முறையை சவாலுக்கு உட்படுத்துகிறது, அங்கு ‘நிபுணர்கள் தங்கள் கருத்துக்களை சமூகங்களின் மீது திணிக்கிறார்கள்’. பகிர்ந்து கொள்ளும் சமூகங்கள் ஒருவருக்கொருவர் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும் சிறந்த தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. தீர்வுகள் குறைவான தத்துவார்த்தமானவை, மிகவும் யதார்த்தமானவை மற்றும் ஈடுபாடுகூடியவை என்பதுடன், நிஜ வாழ்க்கையில் விடயங்கள் உண்மையில் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைக் காட்டுபவையாகும்.
- ஆரம்பத்தில் பங்களிப்பதற்காக பங்கேற்கத் தயங்கிய, பின்வாங்கிய மக்களை ஊக்குவிக்க முடியும், ஏனெனில் அவர்கள் உடனடியாக அடையாளம் காணக்கூடிய பெறுபேறுகளைப் பார்க்கிறார்கள்.