பங்கேற்பு நுட்பங்கள் பற்றிய அறிமுகம்
3. கவனக் குழுக்கள்

அது என்ன?
- ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவனம் செலுத்தி விவாதிக்கும் ஒரு சிறிய குழு.
அதை எப்போது பயன்படுத்த வேண்டும்?
- சமூக ஈடுபாட்டு செயன்முறையின் ஆரம்பத்தில்: ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் பின்னணி தகவல்களையும் கருத்துக்களையும் பெற.
- சமூக ஈடுபாட்டு செயன்முறையின் போது: திட்டத்தின் போது எழுப்பப்பட்ட ஆழமான பிரச்சினைகளை ஆராய.
- சமூக ஈடுபாட்டு செயன்முறையின் முடிவில்: திட்டத்தை மதிப்பீடு செய்ய.
மக்களின் எண்ணிக்கை
- 6 முதல் 8 பேர், முடியுமான அளவு ஒரே மாதிரியான குழுக்கள் (எ. கா: ஒரே வயதுடைய பெண்கள், ஒரே சமூகப் பின்னணியைக் கொண்ட ஆண்கள்).
நேரம்
- 1 முதல் 2.5 மணி நேரம். அதன் பிறகு, மக்கள் சோர்வடையலாம் மற்றும் கவனத்தை இழக்கலாம்.
பயன்கள்
- இது பங்கேற்பு மற்றும் வலுவூட்டக்கூடியது.
- மக்கள் தங்கள் கருத்துக்களை ஆர்வமாக பரிமாறிக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் முடியும். புதிய நிலைப்பாடுகள் வரலாம்.
- கூச்ச சுபாவமுள்ளவர்களுக்கு சிறிய குழுக்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதில் தயக்கம் குறைவாக இருக்கலாம். இது குழுக்களில் முடியுமானளவு ஒரே வகையானவர்கள் இருப்பதையும் குறித்த சந்தர்ப்பங்களையும் தங்கி இருக்கலாம்
வரையறைகள்
- சிலரால் ஆதிக்கம் செலுத்த முடியும்.
- கூச்ச சுபாவமுள்ள மக்களுக்கு தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சங்கடம் இருக்கலாம். சிலர் தங்கள் ஆழ்ந்த உணர்வுகளை ஒரு சிறிய குழுவில் கூட வெளிப்படுத்தாமல் இருக்கலாம்.
- முடிவுகள் பரந்த சமூகத்திற்கு பொருந்தாமல் இருக்கலாம்.
- கவனக் குழுக்கள் பதில்களில் செல்வாக்கு செலுத்தும் ஒரு செயற்கை சூழலை உருவாக்க முடியும்.
- மக்கள் இயல்பாக இருக்கவும் மற்றும் கருத்துக்களை வெளிப்படுத்த தயாராக இருக்கவும் செய்யக்கூடிய வசதியளிப்பவரின் திறன்களிலேயே பெறுபேறுகள் பெரிதும் தங்கியுள்ளன.