பங்கேற்பு நுட்பங்கள் பற்றிய அறிமுகம்

1. பங்கேற்பு என்றால் என்ன, இந்த அணுகுமுறையை ஏன் பயன்படுத்த வேண்டும்?

பங்கேற்பு என்பது சமூகத்தைச் சேர்ந்த மக்களின் செயற்திறமான ஈடுபடாகும். சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளை வெற்றிகரமாக அடையாளம் காண, முடிந்தவரை உள்ளூர் சமூகத்தின் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும், இது அவர்களின் நோக்குகள், அவர்களின் ஈர நிலங்கள் சம்பந்தமான அறிவு மற்றும் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது.

Two people sat next to each other talking

சமூக பங்கேற்பின் முக்கிய நோக்கம், ஒரு குழுவிற்குள் நம்பிக்கையை உருவாக்குவதாகும், இதனால் சமூகத்திற்குச் சொந்தமான தீர்வுகளுக்கு பலதரப்பட்ட கருத்துக்கள் பிரதிநிதித்துவம் செய்யப்படும். நீங்கள் பணிபுரியும் சமூகத்திற்குள் தகவல் தெரிவித்தல், ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெறுதல் ஆகியவற்றுடன் பங்கேற்பு தொடங்குகிறது. பெட்டி 1 மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்க உதவும் சில முக்கிய விடயங்களை கோடிட்டுக் காட்டுகிறது.

சமூக பங்கேற்பை எப்படி ஊக்குவிப்பது

  • நீங்கள் ஏன் அவர்களின் கருத்தை கேட்கிறீர்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வதை உறுதி செய்யவும். ஒரு சமூகத்திற்கு சொந்தமான தீர்வு என்ன, அது எப்போது சிறந்த நடைமுறையாக கருதப்படலாம் என்பதை நீங்கள் தெளிவாக விளக்க வேண்டும்
  • பங்கேற்பாளர் சமூகத்திற்கு எவ்வாறு பயனளிக்கும் என்பதை விளக்கவும். மக்கள் தங்கள் கருத்து முக்கியமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் - அவர்களின் சிறந்த நடைமுறைகளைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வது இவை மேலும் வலுப்படுத்தப்பட்டு ஆதரிக்கப்பட உதவும்
  • மக்கள் செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக பங்கு வகிக்கும் வழிகளைக் கண்டறியவும். செயற்பாடுகளின் உள்ளடக்கம் மற்றும் கால அளவு குறித்து அவர்களுக்கு தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும்.
  • செயற்பாடுகள் சுவாரஸ்யமாக இருப்பதையும், மக்கள் இயல்பாக இருப்பதையும் உறுதி செய்யவும். அவர்கள் அழுத்தத்தின் கீழ் உள்ளதாக உணரவோ அல்லது பங்கேற்க கட்டாயப்படுத்தவோ கூடாது

இந்த பாடத்திட்டத்தில், சமூகத்துடன் பல்வேறு நிலைகளில் பங்கேற்பு இருப்பதையும், பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்த முடியும் என்பதையும் நீங்கள் காணலாம். இந்த பிரிவில் உள்ள செயற்பாடுகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தனிநபர்களை உள்ளடக்கியிருக்கலாம், அல்லது காலம் மற்றும் ஏற்பாட்டுக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப முழு சமூகத்தையும் ஈடுபடுத்தலாம். பின்வருபவை மக்களை ஈடுபடுத்த பயன்படும் பல்வேறு வகையான அணுகுமுறைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.