3.2 மொபைல் சாதனங்கள்

5. மொபைல் சாதனங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு

கீழ்க்கண்ட விளக்கப்படம் உங்கள் மொபைல் சாதனங்களைப் பராமரிப்பதற்கான பல்வேறு வழிகளைக் காட்டுகின்றது .

உங்கள் மொபைல் சாதனங்களின் பாதுகாப்பை மேம்படுத்த சில வழிகள் பின்வருமாறு:

1. மொபைல் சாதன அணுகலுக்கான பாதுகாப்பு உள்ளமைவுகளை இயக்கவும்

அ. தானியங்கி பூட்டை இயக்கவும்

ஆ. கடவுச்சொல் பாதுகாப்பை இயக்கி கடவுச்சொற்களை அமைக்கவும்.

2. உங்கள் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை கவனமாக நிர்வகிக்கவும்

அ. புளூடூத், இன்பிரார்ட் அல்லது வைஃபை போன்ற தொலைநிலை அணுகல் அம்சங்களை நீங்கள் பயன்படுத்தாதபோது அவற்றை முடக்கவும்.

ஆ. புளூடூத்-இயக்கப்பட்ட சாதனங்களை கண்டறிய முடியாததாக அமைக்கவும், அதனால் அவை அங்கீகரிக்கப்படாத சாதனங்களுக்கு புலப்படாததாக இருக்கும்.

இ. தெரியாத வைஃபை நெட்வொர்க்குகளில் சேர வேண்டாம்.

3. உங்கள் சாதனத்தை தொடர்ந்து பெக்அப் செய்யவும்

அ. உங்கள் மொபைல் சாதனத்திற்கு அணுகல் இல்லாதபோது உங்கள் முக்கியமான தரவை அணுக முடியும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டெஸ்க்டாப் அல்லது ஒத்திசைவு சேவைகளில் காப்பு மென்பொருளைப் பயன்படுத்தவும்.

4. வைரஸ் தடுப்பு நிரல்களை நிறுவவும்

அ. மிகவும் புதிய தெரிவுக்கு Google Play Store ஐப் பார்க்கவும்.

ஆ. வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் கிடைக்கும்போது அதை நிறுவவும் மற்றும் புதுப்பித்த கையொப்பங்கள் மற்றும் இயந்திரங்களை பராமரிக்கவும்.

இ. நம்பிக்கையற்ற தளங்களிலிருந்து செயலிகளைப் பதிவிறக்க வேண்டாம்.

5. உங்கள் மொபைல் சாதனத்தை அடிக்கடி புதுப்பிக்கவும்

அ. கிடைத்தால் தானியங்கி புதுப்பிப்பு (automatic update) விருப்பத்தை உள்ளமைத்து தேர்ந்தெடுக்கவும்.

ஆ. இயக்க முறைமைகள் மற்றும் செயலிகள் உட்பட புதுப்பித்த மென்பொருளை பேணவும்.

இ. உற்பத்தியாளரால் அங்கீகரிக்கப்பட்ட நிலைப்பொருள் ( ஃபார்ம்வேர்) அல்லது இயக்க முறைமைகளை மட்டும் இயக்கவும்.

6. திருட்டை தடுக்க பௌதீக பாதுகாப்பு பொறிமுறைகளை இயலுமாக்கவும்

அ. கண்காணிப்பு மென்பொருள் அல்லது அம்சங்களைப் பயன்படுத்தவும்.

ஆ. உங்கள் மொபைல் சாதனத்தை கவனக்குறைவாக  எங்கும் வைக்காதீர்கள் .

இ. இழந்த அல்லது திருடப்பட்ட சாதனங்களை உடனடியாகப் புகாரளிக்கவும்.

ஈ. சாதனத்தில் சேமிக்கப்பட்ட அல்லது நினைவில் வைத்திருக்கும் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றவும்.

உ. தரவு மீட்பை செயல்படுத்த உங்கள் மொபைல் சாதனத்தில் தரவை தொடர்ந்து பெக்அப் காப்புப் பிரதி எடுக்க நினைவில் கொள்ளுங்கள்.

7. நீங்கள் ஒரு புதிய சாதனத்தைப் பெறும்போது மொபைல் சாதனங்களுக்கு பொருத்தமான அகற்றல் நடைமுறைகளைப் பயன்படுத்தவும்

அ. நீங்கள் அச்சாதனத்தை அப்புறப்படுத்தவோ பரிமாற்றம் செய்யவோ நன்கொடை செய்யவோ முதல் அதில் சேமித்து வைக்கும் அனைத்து தகவல்களையும் நீக்கவும்.

8. உங்கள் தனியுரிமையை திறம்பட நிர்வகிக்கவும்

அ. நீங்கள் பகிரும் தகவலைக் கட்டுப்படுத்த மற்றும் அதை யார் பார்க்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்த தனியுரிமை அமைப்புகளைப் பயன்படுத்தவும்.

ஆ. உங்கள் இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தரவுகளைச் சேகரித்து பகிரும் சேவைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கவனியுங்கள்.

உங்கள் மொபைல் சாதனங்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு மேலதிக வழிகளை பின்வரும் விளக்கப்படம் வழங்குகிறது:

The following infographic presents various additional ways of securing your mobile devices:

Graphic showing security tips for mobile devices